மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை எடத்தெரு பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரின் மகன் சோபியாஸ்.. 17 வயதுடைய இவர் தினக் கூலியாக வேலைப் பார்த்ததோடு மட்டுமில்லாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் பெற்றோர் கண்டித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனதளவில் நொந்து போன சோபியாஸ் நேற்று […]
Tag: # Manapparai
மணப்பாறையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை 1,15,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம், இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. மேலும், மூன்றாவது முறையாக கருவுற்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று விஜயா குழந்தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து திருச்சி மருத்துவமனையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை பெற்றோரின் உதவியுடன் செவிலி, தரகர் […]
மணப்பாறை அருகேயுள்ள சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். திருச்சி மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்நிலையில், சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அங்கிருந்த சுஜித் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குழந்தையை […]
ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் விழுந்தது முதல் இறுதி வரை என்ன நடந்தது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 : 40 மணிக்கு சிறுவன் (சுஜித் வயது 2) ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இதையடுத்து மாலை 5 :55 மணிக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவனுக்கு ஆக்சிஜன் தரப்பட்டது. அதை தொடர்ந்து இரவு 7 : 15 மணிக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பின்னர் இரவு 8 […]
மணப்பாறை அரசு மருத்துவமனை ஊழியர் மது அருந்திவிட்டு கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையில் மருந்து மாத்திரை கொடுக்கும் ஊழியர் மது அருந்திவிட்டு போதையில் அங்குள்ள பொதுமக்களிடம் கலாட்டா செய்த வீடியோ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர் செய்த இந்த கலாட்டா சம்பவம் விடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இவர் மது போதையில் தகராறு செய்யும் சம்பவம் அங்கே வந்திருந்த பயணிகளை முகம் […]