கள்ளநோட்டு மாற்ற முயன்ற வாலிபருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சந்தையில் 100 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் முயன்றுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பாலுசெட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் முத்து ராமலிங்கம், கள்ளநோட்டு மாற்ற முயன்ற சுதர்ஷனை கைது செய்தார். அவரிடமிருந்த கலர் ஜெராக்ஸ் மிஷின் பறிமுதல் […]
Tag: #manarrested
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தேனி மாவட்டம் போடி வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்றவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா, 26 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சாவை கேரளாவிற்கு குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு வழியாக கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த தமிழக காவல்துறையினர் எல்லைப்பகுதியில் […]
கல்லால் மானை அடித்துக் கொன்ற ஆறு பேர் கொண்ட கும்பலில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வன கோட்டத்தில் உள்ள கேர்மாளம் வனச்சரகத்திற்குற்பட்ட சிக்குநள்ளி வனப்பகுதியில் மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கேர்மாளம் வனச்சரக அலுவலர் அமுல்ராஜ், வனத்துறை அலுவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது சிக்குநள்ளி வனப்பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பல் புள்ளிமானை வேட்டையாடி மான் இறைச்சியை கூறுபோட்டு கொண்டிருந்தனர். வனத்துறையினரை […]