இன்றைய தினம் : 2019 மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டு : 70ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 295நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன. 1702 – முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது. 1784 – மங்களூர் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது. 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. 1864 – இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் […]
Categories