இன்றைய தினம் :2019 மார்ச் 22 கிரிகோரியன் ஆண்டு : 81ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 284 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 238 – முதலாம் கோர்டியனும் அவனது மகன் இரண்டாம் கோர்டியனும் உரோமைப் பேரரசர்களாகஅறிவிக்கப்பட்டனர். 1622 – அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர். 1739 – நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி, மயிலாசனத்தின் நகைகளைக் கைப்பற்றினான். 1765 – அமெரிக்கக் குடியேற்றங்களில் நேரடியாக வரிகளை அறவிடுவதற்கு ஏதுவான சட்டம் பிரித்தானியநாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சு, உருசியா ஆகியன வரையறுத்தன. 1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் […]
Categories