வீட்டின் கதவை உடைத்து நகை,வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமோகூர் பகுதியில் சேதுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பீரோ இருந்த அறையை பார்த்ததில் அங்கு வைக்கப்பட்டிருந்த 2 […]
Tag: mavata seithikal
கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பெரிய ஊர் சேரிப்பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த குபேரனை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்து 3 1/2 […]
பேருந்தில் சென்ற பெண்ணிடம் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி பகுதியில் லஷ்மி என்பவர் வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது திண்டுக்கல் செல்கின்ற அரசு பேருந்தில் ஏறி காரைக்குடியில் இருக்கும் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி உள்ளார். இதில் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை காணாமல் போனதை […]
கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அரசு பணியை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 பாம்புகள் ஒன்றுடன் ஒன்று 15 நிமிடங்களா பின்னி பிணைந்து விளையாடியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலின் பின்புறம் பகுதியில் குடகனாறு அமைந்திருக்கிறது. இந்த ஆற்றில் ஒட்டி இருக்கும் புதர் பகுதியில் 7 அடி நீளம் உடைய இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னி விளையாடிக் கொண்டிருந்தது. இதனை பொதுமக்கள் சிலர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அதிகமானோர் அங்கு திரண்டு வந்து பாம்புகள் பின்னி விளையாடிக் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் கரியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சாந்தா தனது பேரன் வேதகிரி மற்றும் உறவினரான ராம்பிரசாத் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தரைப்பாலத்தில் சென்ற நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த கார் திடீரென மோதியுள்ளது. இதில் 3 பேரும் கீழே விழுந்து […]
உடல்நல குறைவால் விவசாயி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அடிக்கடி உடல்நல பாதிப்பால் முருகன் அவதிப்பட்டு வந்துள்ளார். அதன்பின் கடந்த 5ஆம் தேதி மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் முருகன் பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு […]
ஒருவரை ஜாதி பெயரை சொல்லி திட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தண்டரை ஒட்டம்பட்டு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இதே கிராமத்தில் வசிக்கும் லிங்கேஸ்வரன், தினேஷ் மற்றும் முனியன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த லிங்கேஸ்வரன் உள்பட 3 பேரும் சேர்ந்து ராஜேந்திரனை ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டி தாக்கியதாக தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் ஜாதி பெயரை சொல்லி திட்டிய […]
கணவன் மது அருந்துவதாக கூறியதால் தாய் மற்றும் 2 குழந்தைகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ப.எடக்குப்பம் கிராமத்தில் பாக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும், திவ்யா மற்றும் திவாகரன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதில் திவ்யா தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். அதன்பின் மகன் திவாகரன் அரசு பள்ளியில் […]
குழந்தைகள் இறந்ததால் மன உளைச்சலில் இருந்த பெற்றோர் தற்கொலைக்கு முயற்சி செய்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு மீனாட்சி தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது மீனாட்சி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கைலாசகிரி மலைக்கு சென்றுயுள்ளனர். அங்கு இருக்கும் குளத்தில் சிறுவர்கள் 2 பேரும் மீன் பிடிக்க சென்ற நிலையில் கால் தவறி குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் குழந்தைகள் […]
கனமழை காரணத்தினால் அணைகள் திறக்கப்பட்டதால் ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது. ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சித்தூரில் இருக்கும் கலவ குண்டா அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஏரிகள் அனைத்தும் தற்போது நிரம்பி வழிகின்றது. அதன்பின் சோளிங்கர் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை பாசன பிரிவு உதவி பொருளாளர் கூறும் போது, இப்பகுதியில் இருக்கும் பொதுப்பணித்துறை நீர்வள துறை பாசன வசதி பிரிவின் கிழாக 48 ஏரிகள் […]
வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்மனந்தல் ஊராட்சி குச்சிப்பாளையம் கிராமத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் அதே கிராமத்தில் வசிக்கும் பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது புண்ணியமூர்த்தி என்ற தொழிலாளி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 630 முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 65 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்துள்ளார். அப்போது 65,000-க்கும் அதிகமான நபர்கள் தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் அவர்களை முகாமிற்கு அழைத்து […]
கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கலெக்டர் எல்லோரும் தடுப்பூசி போட்டு உள்ளார்களா என ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் எல்லா பகுதிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் பேரூராட்சியில் இருக்கும் 18 வார்டுகளிலும் கலெக்டர் ஸ்ரீதர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது வீட்டில் வசிக்கும் பொதுமக்களிடம் நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளீர்களா, அப்படி தடுப்பூசி போடவில்லை என்றால் […]
சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுதலில் ஈடுபட்ட 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் வயலில் வைத்து மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த மர்ம நபர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் அவர்கள் அய்யனார் மற்றும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் […]
அலுவலகத்தில் நிர்வாக சீர்கேடுகள் இருப்பதனால் அதை கண்டித்து கட்சியினர் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தின் முன்பாக சார்பதிவாளர் அலுவலக நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சார்பாக ஒன்றிய செயலாளர் ஜான் பாஷா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணைத் தலைவர் செயலாளரான வக்கீல் கணேசன் மற்றும் நகர செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளரான கலியமூர்த்தி நிர்வாகிகள் மற்றும் […]
வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள லிங்க் ரோடு பகுதியில் நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முந்திரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நரேந்திரன் திடீரென காந்தி சாலையில் இருக்கும் ஒரு வணிக வளாக கட்டிடம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]
தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி பிரச்சினையை முடிக்க வந்த பெண்ணை தாக்கி கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கருக்கை கிராமத்தில் சாரங்கபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் எதிரே இருக்கும் வீட்டின் கதவை தட்டியதாக தெரியவந்துள்ளது. இதில் கோபமடைந்த அந்த வீட்டில் வசிக்கும் தனபால் மற்றும் அவரின் மகன் சதீஷ்குமார் ஆகியோர் சாரங்கபாணியிடம் குடிபோதையில் இரவு […]
விமானப்படை பொன்விழா வருடத்தை முன்னிட்டு வீரர்கள் சைக்கிளில் பேரணி வந்ததால் காவல்துறை சூப்பிரண்டு நினைவு பரிசு வழங்கியுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ வீதி பகுதியில் இந்திய விமானப்படையில் பொன்விழா வருடத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் 16 பேர் அடங்கிய குழுவினர் சைக்கிளில் பேரணியாக தஞ்சாவூரில் இருந்து மகாபலிபுரம் வரை சென்றனர். இந்நிலையில் செல்லும் வழியில் இம்மாவட்ட துணை காவல்துறை சூப்பிரண்டு ரமேஷ்பாபு அவர்களை வரவேற்று நினைவு பரிசு வழங்கியுள்ளார். இதில் விமானப்படை வீரர்கள் கூறும் போது தஞ்சாவூர் […]
விநாயகர் சிலையை பீச்சில் கரைக்க விடாமல் பொதுமக்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு அரசு அனுமதித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் வீட்டில் வைத்து விநாயகர் சிலையை வழிபட்டு அதை நீர்நிலைகளில் கரைப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் சில்வர் பீச்சில் பொதுமக்கள் சிலர் விநாயகர் சிலையை கரைப்பதற்காக வந்துள்ளனர். ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் பொதுமக்களை பீச்சில் சிலையை கரைப்பதற்கு அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பிச்சுக்கு […]
விதை நெல் பண்ணையை குப்பை கிடங்காக மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றப்படும் என்பது குறித்து சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்ட வெள்ளப்பாக்கம் பகுதியில் விதை நெல் பண்ணைக்கு சொந்தமான இடம் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பின் வருவாய்த்துறையினர் இந்த இடத்தை மாநகராட்சிக்கு ஒப்படைக்க உள்ளதாகவும் மற்றும் இந்த இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் […]
பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்தாண்டிகுப்பம் பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணி காரணத்தினால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனை அடுத்து முத்தாண்டிக்குப்பம் பகுதியில் இருந்த இவரது வீட்டை காலை நேரத்தில் அக்கம்பக்கத்தினர் பார்த்த போது கதவு உடைந்து திறந்து கிடந்ததை கண்டு […]
வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவன் உள்பட 6 மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கனங்கூர் பகுதியில் கிரிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இதே மாவட்டத்தில் வசிக்கும் பார்வதி என்ற பெண்ணுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின் பார்வதியின் நடத்தையில் கிரிதரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தனது மனைவியை அவரின் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். […]
பொக்லைன் எந்திரத்தில் சிக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் பாலாம்பிகை பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் முன்பாக கொட்டப்பட்டிருந்த கற்களை பொக்லைன் எயந்திரம் மூலமாக சமன் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பொக்லைன் எயந்திரத்தின் பின்புறமாக இருக்கும் கற்களை சமன் செய்து கொண்டிருக்கும் போது அவர் இருப்பதை கவனிக்காத பிரவீன் இயந்திரத்தை பின்புறத்தில் இயக்கியுள்ளார். இதனால் […]
மீன் பிடிப்பதற்கு தண்ணீரை வெளியேற்றிய வியாபாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சடைகட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி அமைந்திருக்கிறது. இந்நிலையில் ஏரியில் இருக்கும் மீன்களை பிடிக்க சின்ராஜ் என்பவர் கடந்த வருடம் ஏலம் எடுத்துள்ளார். அதனால் குத்தகைதாரர் சார்பாக மீன் வியாபாரி ஒருவர் மீனவர்களுடன் ஏரிக்கு சென்று மீன்களை பிடிக்க சென்ற நிலையில் அங்கு எதுவும் சிக்கவில்லை. அதனால் கோபமடைந்த மீன் வியாபாரி பொக்லைன் எயந்திரம் மூலமாக ஏரிலிருந்து வடிகால் […]
புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் கடைசி குடிமகனுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைவதற்கு பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சென்னை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக இம்மாவட்டத்தில் புதிதாக கலெக்டர் பணிக்கு தெ. பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கலெக்டர் அலுவலகத்தில் தற்போது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, அரசு அலுவலர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் […]
அரசின் தடையை மீறி சாலையில் விநாயகர் சிலை வைத்து வழிபட்ட இந்து முன்னணியினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் இருக்கும் பழைய பேருந்து நிலையம் அருகாமையில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீறி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். இதில் 51 நபர்களுக்கும் அதிகமானோர் தேங்காய்களை சூறையிட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
பெண் ஒருவரின் வீட்டிற்குள் சென்று கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வீட்டு வசதி வாரியம் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரியத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சிக்காக சம்பத் சென்ற போது வீட்டில் மனைவியும், மகளும் தனியாக இருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் சம்பத் வீட்டிற்கு சென்று அலுவலகத்தில் தூய்மை பணியாளராக […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காலை நேரத்தில் அக்கம்பக்கத்தினர் பார்த்த போது மணியின் வீடு இடிந்து விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையை […]
ஸ்கூட்டரில் வைத்திருந்த 1,70,000 ரூபாயை திருடிச் சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரகவுண்டனூர் பகுதியில் தசரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசுகுமார் என்ற மகன் உள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வங்கியில் தங்க நகை அடகு வைத்து அதன் மூலமாக 1, 70, 000 ரூபாயை வாங்கிக் கொண்டு வந்து ஸ்கூட்டரில் வைத்துள்ளனர். இதனையடுத்து அதே பகுதியில் இருக்கும் மற்றொரு […]
கோவில் குளத்தில் மீன் பிடிக்க சென்ற 2 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு மீனாட்சி தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளுடன் கிராமத்திற்கு சென்றுள்ளார். அதன்பின் மீனாட்சியின் கணவன் லோகேஸ்வரன் மற்றும் இரண்டு குழந்தைகளும் கைலாசகிரி மலைக்கு சென்று உள்ளனர். அப்போது அங்கிருக்கும் கோவில் குளத்தில் மீன் பிடிக்க இறங்கிய போது ஹரிபிரீத்தா மற்றும் அஸ்வந்த் ஆகிய 2 குழந்தைகளும் கால் […]
குடிநீரை விநியோகம் செய்ய வேண்டி பொதுமக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகம்மியம்பட்டு அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் 5௦-க்கும் அதிகமானோர் காலி குடங்களுடன் புத்து கோவில் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் […]
மர்மமான முறையில் நகராட்சி துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செந்தமிழ் நகரில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாண்டியின் மனைவி காவேரி காவல் நிலையத்தில் தனது கணவரை சேகர் என்பவர் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாக புகார் […]
சந்தையில் முககவசம் அணியாமல் இருபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள முப்பையூர் பகுதியில் வாரச்சந்தை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் கூட்டமாகக் கூடி உள்ளனர். இதனால் இம்மாவட்ட தாசில்தார் அந்தோணிராஜ் திடீரென அப்பகுதியில் ஆய்வு செய்துள்ளார். அப்போது சமூக இடைவெளி இல்லாமல் கடைகளை நெருக்கமாகப் போட்டு வியாபாரம் நடத்தியதை தாசில்தார் பார்த்துள்ளார். இதனால் கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை காரணத்தினால் அந்த கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து அடுத்த வாரம் வருகின்ற புதன் […]
கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள செஞ்சை செக்கடி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சேகர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சேகரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரின் வீட்டில் வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக சேகரை காவல்துறையினர் […]
பெண்ணிடம் 2 மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்ணுப்பிள்ளை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரனும் சந்திராவும் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் கீழே இறங்கி வந்து ராஜேந்திரனை அடித்து விட்டு அவரது […]
தொழிற்சாலைதுறை சாலை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து முற்றுகையிட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் தலைவரான செல்லசாமி என்பவரின் தலைமையில் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் உயிரிழந்த சாலைப்பணியாளர்கள் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் எனவும், சாலை பணியாளர்களை திறன் மிகுஇல்லா ஊழியர்களாக […]
கிணற்றிலிருந்த மயில்களை நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள சிரகம்பட்டி கிராமத்தில் ஆண்டிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவசாயியான இவரின் தோட்டத்தில் இருக்கும் 80 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் ஐந்து குஞ்சுகளுடன் மயில் ஓன்று எதிர்பாராமல் தவறி விழுந்துள்ளது. அதன்பின் மயில்கள் கிணற்றில் உயிருக்குப் போராடி கொண்டு இருந்துள்ளது. இதனைப் பார்த்த ஆண்டிச்சாமி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி விரைந்து வந்த தீயணைப்பு […]
மலை அடிவாரத்தில் சேவல் சண்டை நடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அழகர் மலையின் அடிவார பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். இதனையடுத்து இந்த செயல்களில் ஈடுபட்ட சுதீஷ் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து […]
சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பால கிருஷ்ணாபுரத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் முள்ளிப்பள்ளம் அருகாமையில் நின்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த வாலிபர் இவரிடம் இருந்த 300 ரூபாய் மற்றும் செல்போனை வழிப்பறி செய்து தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக குருசாமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 2 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம் நகரில் வீராசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், அபி என்ற மகளும் உள்ளனர். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமியின் அக்கா மகனான வினோத் என்பவரின் மோட்டார் சைக்கிளில் அபி அவருடன் சென்றுள்ளனர். அப்போது பால வேலை நடக்கின்ற பகுதியில் வந்து கொண்டிருக்கும் […]
வங்கிக்கு பணம் எடுக்க சென்ற மாணவி காணாமல் போன சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருக்காலகுறிச்சி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லாத்தூரில் இருக்கின்ற வங்கியில் பணம் எடுக்க சென்ற மாணவி வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனையடுத்து மாணவியை உறவினர் மற்றும் தோழி வீடுகளில் பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த […]
கஞ்சாவை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேட்டு தெரு அருகாமையில் முட்புதரில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பாலாஜி என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]
காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், பொதுமக்கள் அளிக்கின்ற புகார்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் கோப்புகளையும் காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் பார்வையிட்டுள்ளார்.
கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு கலெக்டரின் உத்தரவின் பேரில் நேரில் சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது, இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்குக் தடுப்பூசி போட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் வருவாய் ஆய்வாளர் தேவேந்திரன் ஆகியோர் தலைமையில் நரசிங்கபுரம் உள்பட 2 கிராமங்களில் தொழிலாளர்களை தேடி சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பணிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் […]
சிறுமிய பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடுமாம்பள்ளி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். பிறகு 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்குப் பின் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரின் பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். […]
போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகரம்கெங்காபுரம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கலவை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து சாலையில் இடையூறு செய்த பிரகாஷை கைது செய்துள்ளனர்.
குளத்தில் குளிக்க சென்ற தொழிலாளியை முதலை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பனங்காடு கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் அருகாமையில் இருக்கும் குட்டையில் வேல்முருகனின் தம்பியான ராஜீவ்காந்தி இரவு நேரத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் தண்ணீருக்குள் இறங்கிய போது அங்கு முதலை வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து குளத்திலிருந்து வெளியே வர முயற்சி செய்த போது முதலை ராஜீவ்காந்தியைப் பிடித்து கடித்துக் குதறி உள்ளது. இதில் பலத்த […]
மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வளையல்காரப்பட்டி கிராமத்தில் சந்திரய்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் தனது நிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக குணம்மாள் காவல் நிலையத்தில் […]
விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கலெக்டருக்கு மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் கையில் சிலையுடன் நுழைவு வாசலில் நின்று உள்ளனர். இந்நிலையில் வருகின்ற 1௦-ஆம் தேதியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. இதனையடுத்து […]