பொது மக்களின் சார்பாக ஆர்.வி. ரஞ்சித்குமார் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்காமல் கிராம ஊராட்சிகள் அப்படியே செயல்பட அனுமதி வேண்டி 200-க்கும் அதிகமான மக்கள் அலுவலகத்தின் முன்பாக கூடியுள்ளனர். இந்நிலையில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரான ஆர்.வி. ரஞ்சித்குமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அதில் இம்மாவட்டத்தில் இருக்கும் கிராமங்களை புதிதாக உருவாக்கப்படும் மாநகராட்சியுடன் இணைக்க இருப்பதாக […]
Tag: mavata seithikal
சரக்கு ஆட்டோ மோதி மின்கம்பம் இரண்டாக உடைந்து விழுந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு திருவானைக்காவலிருந்து டயர்களை ஏற்றி கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. இந்த ஆட்டோவை விஸ்வநாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம் அருகாமையில் வந்த போது எதிரில் வந்த வாகனத்தின் மீது ஆட்டோ மோதியுள்ளது. இதனால் செயல்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் விஸ்வநாதன் விபத்தில் […]
மனநலம் பாதிக்கப்பட்ட பிளம்பர் உடலில் தீ வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்ன அருங்கால் கிராமத்தில் கன்னியம்மன் கோவில் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் 2 வருடங்களாக சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த […]
குளத்தை ஆக்கிரமித்து பயிரிட்டு இருப்பதை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள வெண்கரும்பூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான குளம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த குளத்தை அதே பகுதியில் வசிக்கும் 4 பேர் ஆக்கிரமித்து தேக்கு மற்றும் கரும்பு பயிரிட்டு வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்துள்ளது. இதனால் ஏரியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வருவாய்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் […]
மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பின்னல்வாடி கிராமத்தில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சோனியா என்ற மனைவியும், கார்த்திக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சோனியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
பொதுமக்களிடம் பொய்யான தகவலை கூறி நூதனமான முறையில் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணம்பூண்டி கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மெயின் ரோட்டில் இருக்கும் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகாமையில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டு தனியார் வங்கி ஒன்றில் பணம் செலுத்தும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வைத்து கொண்டு அவ்வழியாக செல்கின்ற பொதுமக்களிடம் […]
பாலிஸ் போட்டு தருவதாக கூறி 5 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மழவந்தாங்கள் கிராமத்தில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வடமாநில மர்மநபர்கள் நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி வந்துள்ளனர். இதை உண்மை என நம்பிய ராஜலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளனர். அதனை […]
அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து அலுவலகத்தின் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பினர் தங்களின் சங்கம் சார்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கார்த்திக் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பிரமணி மற்றும் மாவட்ட துணைத்தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த போராட்டத்தில் சிறுநாவலூர் கிளை தலைவர் வைத்திலிங்கம் வரவேற்றுள்ளார். […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பானூர் கிராமத்தில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் இதயக்கனி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவரும் அதே பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பின் இவர்கள் 2 பேரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். பிறகு பெற்றோர்களின் சமதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு […]
தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை கல்நார்சம்பட்டி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது போதையில் வீட்டில் வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. அப்போது போதையில் சரவணன் வீட்டிற்கு வந்த நிலையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தனது மனைவியை […]
சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய ஒருவரை கைது செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரம்பாக்கம் பகுதியில் தரணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக தரணியை மதுவிலக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் பாரதி கைது செய்துள்ளார். இதனை அடுத்து தரணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இம்மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையின் படி தரணியை குண்டர் […]
பொதுமக்களின் குறைகளை கேட்டு அதை அரசிடம் பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோமனூர் கிராமத்தில் காவல்துறையினர் சார்பாக பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கிராமமக்கள் இரட்டைக் கொலையில் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதி வழங்குவதற்காகவும், நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும், குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் தனி ரேஷன் கடை போன்ற பல கோரிக்கைகளை முன் […]
சாமிக்கு முடியை காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் தேவையில்லை என அறநிலைதுறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் கோவிலில் கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு இருக்கின்ற பெரியமலையில் 1, 305 படிக்கட்டுகளும், சின்னமலையில் 406 படிக்கட்டுகளும் அமைந்திருக்கிறது. இதனையடுத்து தக்கான் குளக்கரையில் பக்தர்கள் அனைவரும் வேண்டுதலுக்காக தங்களின் முடிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அதன்பின் முடியை காணிக்கை செலுத்துவதற்கு கோவில் […]
போலி சான்றிதழ்களை தயாரித்து ஆசிரியர் பணியில் வேலை பார்த்து வந்த ஆசிரியர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கிரிசமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக மகாலட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருடைய சான்றிதழில் உண்மையை கண்டறிய இயக்குனர் அலுவலகத்திற்கு சோதனை செய்ய அனுப்பி இருந்த நிலையில் போலியானது […]
பேருந்து ஓட்டுநர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரிகதாங்கல் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இதே மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக கிருஷ்ணமூர்த்தியின் தாயார் இருந்துள்ளார். இதனால் பேருந்து ஓட்டுநரான கிருஷ்ணமூர்த்தி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து திடீரென அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் அக்கம்பக்கத்தினர் அவரை […]
கொரோனா காரணத்தினால் நிறுத்தி வைக்கபட்ட சவாரிகள் தொடங்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் முதுமலையின் புலிகள் காப்பகத்தை கொரோனா காரணத்தினால் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வந்து சவாரி செய்யும் வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறைந்த காரணத்தினால் தற்போது பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பயணிகள் சௌகரியமாக பயணம் செய்வதற்கு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருகின்றது. மேலும் வனத்துறைக்கு சொந்தமாக இருக்கும் தங்கும் […]
பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்து பாடி தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இதே பகுதியில் வசிக்கும் கார்த்திக்கும், ஜெகதீஸ்வரனும் தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அதன்பின் ஆன்லைன் வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் பாடத்தில் சந்தேகம் இருப்பதால் அதை கேட்பதற்காக 2 மாணவர்கள் பள்ளிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். இதனையடுத்து […]
குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆண்டவர் கோவில் பகுதியில் சிவப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பூமா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணத்தினால் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து காலை நேரத்தில் கணவன் […]
கிராம மக்கள் திடீர் என நடத்திய தர்ணா போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகம் முன்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கிராமத்தில் வாக்காளர் பட்டியலில் பல விதமான குளறுபடிகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் வாக்காளர் பட்டியலில் இறந்துபோனவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், ஒரு வார்டில் வசிப்பவர்கள் பெயரை சம்பந்தமே இல்லாமல் இன்னொரு வார்டில் சேர்க்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அதிகாரிகள் விசாரணை […]
ஆட்டோவில் காய்கறி வாங்க சென்ற தம்பதியினர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளம்பாவூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தினமும் ஆட்டோவில் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் வழக்கம் போல் பெரியசாமி மனைவி சரஸ்வதியை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் தலைவாசல் நோக்கி சென்றுள்ளார். அப்போது பால் குளிரூட்டும் நிலையம் […]
சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் தெருக்கள் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது. இதனையடுத்து காற்றின் வேகத்தை தாங்க முடியாததால் மாத்தூர் கிராமத்தில் வசிக்கின்ற ராமகண்ணு என்பவரின் நிலத்தில் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளது. இதனை போல் மாயம்பாடி […]
கிராம மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மோவூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் தெருக்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு யானைக்கால், வைரஸ் காய்ச்சல், மலேரியா நோய் போன்றவைகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தெருக்களில் தேங்கி […]
தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக பொதுமக்கள் அலுவலகரிடம் புகார் அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிம்மியம்பட்டு ஊராட்சியில் மொத்தமாக ஒன்பது வார்டுகள் இருக்கிறது. அதில் 5, 101 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் ஊராட்சியில் இருக்கும் 3 மற்றும் 7-வது வார்டுகளில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு […]
மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மாச்சி கோவில் நந்தவன பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் சேகர் மற்றும் முருகன் ஆகிய 3 பேரும் இணைந்து மணிமுத்தாறில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகளை கடத்தி வந்து தேவகோட்டை நகர் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 மோட்டார் சைக்கிளில் 3 பெரும் மணல் கடத்தி வந்த போது […]
பிரபலமான கடைக்குள் சென்று வாலிபர் ஒருவர் கத்தியால் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சாலையில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் இரவு நேரத்தில் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் பொருட்களை தேர்வு செய்து கொண்டிருக்கும் போது வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் கடைக்கு வந்துள்ளார். அதன்பின் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளைப் பேசி கடை ஊழியரிடம் கத்தியை காட்டியும், வாடிக்கையாளர்களை மிரட்டியும் தகராறில் […]
நல்ல ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி விழாவில் ஆசிரியர் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன் என கலெக்டர் அமர் குஷ்வாஹா பேசியுள்ளார். திருப்பத்தூரில் ஆசிரியர் தின விழா அன்று நல்லாசிரியர் விருதுகளை எட்டு ஆசிரியர்களுக்கு வழங்கபட்டது. அப்போது இம்மாவட்டத்தில் பணிபுரிகின்ற பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் எல்லோரும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு கதைகளை கூறியும் பாடங்களை நடத்த வேண்டும். இதனை அடுத்து மாணவர்களுக்கு எந்தப் பாடத்தில் விருப்பம் அதிகமாக இருக்கின்றது என கண்டறிந்து […]
மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் வீரமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் மெயின் ரோட்டில் வசிக்கும் பரிமளா என்பவர் வீட்டில் வைத்து மது விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் பரிமளா வீட்டை சோதனை செய்த போது பின்புற […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஈச்சம்பட்டி நடுத்தெருவில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் இம்மாவட்டத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி செல்வதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு செல்வகுமாரி தனது அண்ணன் கார்த்திக்குடன் மோட்டார் சைக்கிளில் வந்து […]
விவசாயி ஒருவரின் வீட்டில் 6 பேர் சேர்ந்த கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்பூரை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இரவு நேரத்தில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் அங்கு வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் குமாரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதில் கதவு மூடப்பட்டு இருந்ததினால் குண்டுகள் வெளியே பயங்கரமான சத்ததுடன் […]
ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக புகார் வந்ததால் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மண்டலநாயனகுண்டாவில் நியாயவிலை கடை அமைந்திருகிறது. இந்நிலையில் அங்கே பல முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் துணை பதிவாளர் முரளிகண்ணன் அப்பகுதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன் படி கூட்டுறவு சார்பதிவாளர் தர்மேந்திரன் திடீரென நியாயவிலை கடையில் ஆய்வு செய்துள்ளார். அப்போது நியாய விலை கடையில் இருக்கும் சர்க்கரை, பாமாயில், அரிசி போன்ற பொருட்கள் இருப்பு […]
தொழிலாளிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காத நிறுவனத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொம்மேஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஷூ கம்பெனி அமைந்திருக்கிறது. இதில் கடந்த 2019-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஆட்களை குறைத்துள்ளனர். இந்நிலையில் பணியிலிருந்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையின் காசோலை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கம்பெனி நிர்வாகத்தை முறையிட்டனர். […]
பணியில் நிரந்தரம் வேண்டும் எனக்கோரி அலுவலகம் முன்பாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின் வாரியத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு அரக்கோணம் விண்டர்பேட்டையில் இருக்கும் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரான கமலகண்ணன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் […]
கனமழை பெய்து வருவதால் அணையில் தண்ணீர் நிரம்பி சீறிப்பாய்ந்து ஓடுவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஏரியில் கனமழையால் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதை பொதுமக்கள் அனைவரும் கடை வாசல்களில் நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஏரியில் தண்ணீர் ஆர்ப்பரிக்கும் காட்சிகளை சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனை அடுத்து சமீப காலங்களாக ஆந்திர மாநிலத்தில் இருக்கும் சித்தூரில் கலவகுண்டா அணை திறக்கப்பட்டதினால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் […]
தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி உதவி புரியுமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு வழங்கும் சட்டம் 2016-ன் படி அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 5 சதவீத ஒதுக்கீட்டின் கீழாக மாற்றுத்திறனாளி பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அதிக அளவு மாற்றுத்திறனாளிகளை பணியாளர்களாக கொண்ட நிறுவனங்களுக்கு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற வருங்கால சேமிப்பு நல […]
நிலத்தில் தண்ணீர் தேங்கியதால் அதை வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கண்டமங்கலம் பகுதியில் பழமை வாய்ந்த காரைக்கால் ஏரி அமைந்திருக்கிறது. இது பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழாக இயங்கி வருகின்றது. இந்நிலையில் இதன் மூலமாக 600 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக வெட்டு வாய்க்கால் மூலமாக வருடம்தோறும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையில் இருந்து […]
அதிக வகையான மீன்களை பிடித்து வந்ததால் துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடலூரில் உள்ள துறைமுகத்திலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகளில் ஆழ் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்துள்ளனர். இங்கே கொண்டு வருகின்ற மீன்களை அனைத்து மாநில,மாவட்ட வியாபாரிகளும் லாரிகள் மூலமாக எடுத்துச் செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிக அளவில் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து மீன்களை பொதுமக்கள் வாங்கி கொண்டு செல்கின்றனர். அதன்பின் துறைமுகத்தில் கனவா, இறால், சங்கரா மற்றும் […]
பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதாச்சலம் நோக்கி கடலூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று வந்துள்ளது. இதை செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது டிக்கெட் பரிசோதகர் உள்ளே ஏறி பயணிகளிடம் பயணச்சீட்டு இருக்கிறதா என சோதனை செய்துள்ளார். அப்போது மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருக்கும் நிலையில் பேருந்திலிருந்து இறங்கிய 30 வயதுடைய வாலிபர் […]
வேலை வாய்ப்புடன் இணைந்த திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதற்காக தகுதி இருக்கின்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் நகர்ப்புற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு மற்றும் பணியமர்த்தும் திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் விவசாயி சார்ந்த தொழில் திறன் பயிற்சி, ஆடை தயாரிப்பு மற்றும் கட்டுமானம் குழாய் பொருத்துனர் போன்ற பயிற்சிகள் உரிய நிறுவனங்களிடமிருந்து […]
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்குவதற்கு பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் 10 நல்ல ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளனர். இதில் அரக்கோணம் சி.எஸ்.ஐ அந்தியர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் அற்புதராஜ், ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன், வெல் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோடீஸ்வரன், ராணிப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பழனி, வாலாஜா மேற்கு ஒன்றியம் திருப்பாற்கடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை […]
திடீரென வீட்டில் தீப்பிடித்த காரணத்தினால் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாக்கம் மேல்புதூர் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஜெயா தூங்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டில் தீப்பிடித்து புகை மூட்டம் ஏற்பட்டதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயா வெளியே ஓடி வந்துள்ளார். ஆனால் அதற்குள் தீ கொழுந்து விட்டு எரியத் […]
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மூலமாக பல இடங்களில் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அவருடன் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்துள்ளனர்.
சமையல் செய்து கொண்டிருந்த பெண் மீது சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் உள்ள ஆவாரங்குப்பத்தில் கடந்த 1990-ம் ஆண்டு ஜவகர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழாக ஆதி திராவிடர் நலத்துறை சார்பாக வீடுகள் கட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீடுகள் கட்டப்பட்டு 3௦ வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டதால் தற்போது பெய்து வரும் கனமழையால் வீட்டில் பக்கவாட்டு சுவர்கள், சிமெண்ட் சிலாப்புகள், மேற்கூரைகள் அனைத்தும் சேதமடைந்து கிழே விழுந்து வருகிறது. இதனையடுத்து இப்பகுதியில் இருக்கும் […]
மூதாட்டி ஒருவர் கிணற்றில் பிணமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சம்பேட்டை ஜெயமாதா நகர் அப்பாசி கவுண்டர் பகுதியில் திலகவதி என்பவர் வசித்து வருகிறார். இவரின் கணவர் மாதவகுமார் ஏற்கனவே காலமாகிவிட்டார். இந்நிலையில் திலகவதி இரவு நேரத்தில் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன்பின் காலை நேரத்தில் வீட்டின் பின்புறம் இருக்கும் கிணற்றில் திலகவதி பிணமாக கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் குடும்பத்தினர் கிணற்றில் இறங்கி திலகவதி சடலத்தை […]
தோப்பில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவலாபுரம் அருகாமையில் உமராபாத் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் வாணக்கார தோப்பில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் தோப்பில் சாராய விற்பனையில் ஈடுபட்ட செட்டு என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 50 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வீட்டின் மேற்கூரை ஜன்னலை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகாமையில் கைலாசபுரம் கிராமத்தில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வேடல் கிராமத்தில் இருக்கும் மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்த போது அதிலிருந்த 20,௦௦௦ […]
காவல்துறையினரின் கண்முன்னே மருத்துவமனை ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருடு போனது சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொண்டபாளையம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் எக்ஸ்ரே பிரிந்து இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பணியை செய்வதற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை நேரத்தில் பணியை முடித்து விட்டு அங்கிருந்து செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்துள்ளார். அப்போது நிறுத்தி வைத்திருந்த இடத்தில் […]
வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தானப்பநாயகர் தெருவில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் பாதிப்பு ஏற்பட்டதனால் அருகில் இருக்கின்ற ரேகாவின் அண்ணி வீட்டில் ஓய்வு எடுக்கப் போவதாகக் கூறி சென்றுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் அவர் வீட்டுக்குத் திரும்பி வராத காரணத்தினால் சந்தேகமடைந்த […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகாமையிலிருக்கும் புதுப்பேட்டையில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மங்கம்மாபேட்டை ரயில்வே கேட் அருகாமையில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் அவர் மீது மோதியுள்ளது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த […]
பரவலாக மழை பெய்ததால் அணை நீர்மட்டமானது 31 அடியாக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்திருக்கிறது. இந்நிலையில் கோமுகி அணையின் மொத்த நீர்மட்டமானது 46 அடி ஆகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலமாக கல்வராயன்மலை அடிவாரம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் 11,௦௦,௦௦௦ ஏக்கர் விவசாய […]
ரேஷன் அரிசிகளை கடத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி தாண்டவபுரம் பகுதியில் குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு குடிசை வீட்டில் அதிகமாக ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வீட்டின் உள்ளே 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை […]