வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாலத்தீவு அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பம் 22 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி […]
Tag: MeteorologicalCenter
தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் விவசயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் வெப்பச் சலனத்தால் தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கடலூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை […]
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 16 மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லாரில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 37 டிகிரி செல்சியஸ்_ஸூம் , குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ்_ஸூம் பதிவாகியுள்ளது.வெப்ப சலனம் காரணமாகவும் காரைக்கால் அருகே வளிமண்டல கீழ்அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகின்ற போதிலும் அடிக்கடி பல மட்டங்களில் மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு […]
நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாகவே ஒரு சில இடங்களில் அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர் உட்பட பல பகுதியில் மழை பெய்தது. […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு மாதமாகவே ஒரு சில இடங்களில் அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர்ஆகிய பகுதியில் மழை பெய்தது. மேலும் திருவள்ளூர், திருத்தணி விழுப்புரம் போன்ற இடங்களில் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நங்கநல்லூர், வடபழனி, போரூர், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், கோயம்பேடு, முகலிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அனேகமாக ஒரு […]
14 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வேலூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி, தர்மபுரி , கடலூர் , விழுப்புரம் , புதுவை , நாகை , காரைக்கால் […]
தமிழகத்தின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் இரவில் கன மழை வெளுத்து வாங்கியது. அதே நேரத்தில் பகலில் சாரல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதேபோல் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. அதேபோல சிவகங்கை சோழபுரம் மற்றும் […]
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டம் , தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி மிக கனமழைக்கு […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கர்நாடக பகுதியில் வலுவான நிலையில் உள்ளது. நேற்றைய தினம் தமிழக பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து இன்றும் நிலவி வருவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு […]
தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் , தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழைக்கும், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதோடு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவை […]
தமிழகத்தில் மற்றும் புதுவையில் 3 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்ப சலனத்தின் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசாகவும், மிதமாகவும் மழை பெய்யும். மேலும் பேசுகையில், மேற்கு […]