புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜெயபாலை கொலை செய்து கோரிமேடு காவலர் குடியிருப்பு அருகே மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். கோரிமேடு பகுதியில் உள்ள தீயணைப்புத்துறை அதிகாரிகள் குடியிருப்பு அருகேயுள்ள காலி இடத்தில், குப்பை அகற்றும் தொழிலாளி ஒருவர், இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவலளித்தார். உடனே அங்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் மேட்டுப்பாளையம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பதும், அவர் […]
Tag: Mettupalayam
மேட்டுப்பாளையத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். இன்று பகல் மூன்று மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோயம்புத்தூரை நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசு பேருந்தும் நிலைத்தடுமாறி ‘எங்கேயும் எப்போதும்’ பட பாணியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. காரமடை மெட்ரோ பள்ளி அருகே நடந்த இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் உட்பட பேருந்தில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு […]
மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்துச் சேவை, தண்டவாள சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழைக் காரணமாக, ரயில் பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாளங்கள் பாதிப்புக்குள்ளாகின. இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்துச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தண்டவாளங்களில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது அப்பணிகள் […]
மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த சுற்றுச்சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்படார் . கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகில் உள்ள நடூர் பகுதியில், மழையால் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. சுற்றுச்சுவர் விழுந்ததில், அதனை ஒட்டிய வீடுகள் இடிந்து 17 பேர் பலியாகினர் . இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச் சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி அப்பகுதி […]
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சுவர் குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்காமல் விட்டதே இத்தனை பேர் உயிரிழந்திருப்பதற்கு காரணம் என அப்பகுதியில் […]
மேட்டுப்பாளையத்தில் குழந்தையின் உடலில் தடுப்பூசியின் ஒரு பகுதி உடைந்து சிக்கியது. கோவை மாவட்டம் எம் எஸ் ஆர் புரத்தைச் சேர்ந்த தம்பதிகள் பிரபாகரன் மலர்விழி. இவர்களுக்கு கடந்த 26ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் குழந்தைக்கு தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. அதில் தடுப்பூசியின் ஒரு பகுதி உடைந்து குழந்தையின் உடலிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு ஊசியின் உடைந்த பகுதியை மருத்துவர்கள் […]
மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியுள்ள நிலையில் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக பெய்ததால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் நடுவே […]
கோவை மாவட்டத்தில் பட்டியலின பெண்ணை காதலித்ததால் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் போலீசில் சரணடைந்தார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கனகராஜும் அதே பகுதியில் வசித்து வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வர்ஷினி கனகராஜின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கனகராஜின் அண்ணன் […]