சமூக வலைதளங்களில் பேராசிரியரின் புகைப்படமானது சோகமான கதையுடன் வைரலாகி வருவது போலியான பதிவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஒருவர் குழந்தையை தன் மீது வைத்துக்கொண்டு பாடம் எடுப்பது போல் உள்ள புகைப்படம் நாடு முழுக்க வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம் குறித்த பதிவுகளில் அதில் இருக்கும் கல்லூரி பேராசிரியர், அவரது மனைவி பிரசவத்தின் போது இறந்து விட்டதால் தனது குழந்தையுடன் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த […]
Tag: Mexico
மெக்சிகோவில் இன்று ஒரே நாளில் புதிதாக 770 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை ஏற்பட்டுள்ள மரணங்களின் எண்ணிக்கை 19,080 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெக்சிகோவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மெக்சிகோவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,19,355 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா […]
உரிமையாளருக்காக சீட்டோஸ் பாக்கெட் வாங்க கடைக்குச் சென்ற நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. முதல்கட்டமாக அனைத்து நாடுகளுமே மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. இந்த சமயத்தில் சில மக்களின் கிரியேட்டிவ் ஐடியாவும் வெளியே எட்டிப்பார்க்கிறது. ஆம், மெக்ஸிகோவை சேர்ந்த அன்டோனியோ முனோஸ் (antonio […]
மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் நபர் மரணமடைந்தார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் வேகமாக பரவி வருகின்றது. அந்நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ள […]
மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் போல உடையணிந்து பள்ளி மாணவிகள் ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சத்தில் உறையவைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. இதுவரையில் சீனாவில் 3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பலியானோரின் 4962 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தற்போது சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால் […]
மெக்ஸிகோவில் உள்ள ஒரு தேவாலயத்தில், அனைத்து பெண் சிலைகளும் ஊதா நிற துணியால் மூடப்பட்டுள்ளன. மெக்சிகோ நாட்டில் ஒரு நாளைக்கு 10 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் உள்ளன.ஆகையால் இதனை கண்டிக்கும் வகையில் வருகின்ற 9-ஆம் தேதி அந்நாட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், தேவாலயங்களில் இருக்கும் பெண்சிலைகள் அனைத்துமே ஊதா நிற துணியைக் கொண்டு மூடப்படுவது இயல்பான நடைமுறை […]
மெக்ஸிகோவில் அழிந்து வரும் தேன்சிட்டுக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இளம்பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது. மனிதர்களாகிய நாம் கண்களை இமைப்பதை விடவும் இறக்கையை வேகமாக அடித்துக் கொள்ளும் பறவை தேன்சிட்டுக்கள். இந்த தேன் சிட்டுக்கள் தற்போது மெக்ஸிகோ நகரத்தில் அரிதினும் அரிதாகிப் போய்விட்டது. ஆம் இந்த பறவை அழியப்போகும் நிலையில் இருக்கின்றது. இதையடுத்து அந்தப் பறவைகளை மீட்டெடுப்பதற்கு, உயிரியலாளரான கிளவ்டியா என்ற பெண் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதாவது மகரந்தச் சேர்க்கைக்கு பெரும் பங்குவகிக்கும் தேன்சிட்டுக்களை […]
கலிபோர்னியா வளைகுடாவில் சட்டவிரோத மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை திமிங்கலத்தை விலங்கு நல ஆர்வலர்கள் பாத்திரமாக மீட்டனர். மெக்சிகோ அருகே கலிபோர்னியா வளைகுடாவில் விலங்கு நல ஆர்வலர்கள் கடலில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஹம்ப்பேக் (Humpback) வகை திமிங்கலம் ஓன்று சட்ட விரோதமாக விரிக்கப்பட்ட வலையில் சிக்கி தவித்து வருவதை பார்த்த ஆர்வலர்கள் அதனை காப்பாற்றுவதற்கு போராடினர். அவர்கள் நீண்ட முயற்சிக்கு பின் அதை பத்திரமாக விடுவித்தனர். தற்போது அழியும் நிலையில் இருக்கும் ‘டோட்டோபா’ […]
மெக்சிகோவில் கடற்கரையில் வினோத உயிரினம் ஓன்று இறந்து கரை ஒதுங்கியிருப்பதை பார்த்து அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மெக்சிகோ நாட்டில் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை நகரம் புவேர்ட்டோ வல்லார்டா. இந்த நகரத்தின் எழில் மற்றும் இயற்கை அழகை ரசிக்கவும், கடலில் அலைச்சறுக்கு சாகசங்கள் செய்யவும் பல்வேறு நாட்டு சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்வார்கள். இந்நிலையில், இப்பகுதியில் இருக்கும் டெஸ்டிலாடெரஸ் என்ற கடற்கரையில் கண்கள் இல்லாத பார்ப்பதற்கே விசித்திரமான வினோத உயிரினம் ஒன்று கரை ஒதுங்கி பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்த பலரும் […]
மெக்ஸிகோவில் 7 வயது பள்ளி சிறுமியை காதல் ஜோடி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ள ஒரு பள்ளியில் பாத்திமா என்ற 7 வயது சிறுமி படித்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல பள்ளி முடிந்ததும் தனது அம்மாவிற்காக காத்திருந்தார். ஆனால் மற்றொரு பெண் சிறுமி பாத்திமாவை தன் கையால் அழைத்துச் சென்றார். இதையடுத்து சிறுமியின் அம்மா வந்து பார்த்தபோது அவள் அங்கு இல்லை. பின்னர் போலீசாரிடம் சிறுமியின் அம்மா புகாரளித்தார். இந்த […]
சிறைக்குள் மோதல் – 16 கைதிகள் பலி
மெக்சிகோவில் சிறைக்குள் ஏற்பட்ட மோதலில், 16 கைதிகள் கொல்லப்பட்டனர். மெக்சிகோவின் ஜகாடிகாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில், 16 கைதிகள் கொல்லப்பட்டதாவும், ஆறு பேர் காயமடைந்ததாவுகம் சிறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “இன்று மாலை 5 மணியளவில் (உள்ளூர் நேரம்) கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் 16 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஆறு […]
சட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்களை மெக்சிகோ அரசு தாய்நாட்டுக்கு மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளது. மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமான முறையில் மக்கள் நுழைவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இதனைத் தடுக்க மெக்சிகோ முயற்சி எடுக்கவில்லை எனில் அந்நாட்டு பொருட்களின் மீது வரி சுமத்தப்படும் எனவும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, மெக்சிகோவின் எல்லைகளில் அந்நாட்டு அரசு பாதுகாப்பினை பலப்படுத்தியது. இந்நிலையில், தோலுசா நகர சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்களை தாய்நாட்டுக்கு மெக்சிகோ […]
மெக்சிகோவில் இரவு விடுதிக்குள் நடந்த பெட்ரோல் குண்டு தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மெக்ஸிகோவின் வெராக்ரூஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரை நகரமான கோட்ஸாகோல்கோஸில் (Coatzacoalcos) ஒரு இரவு விடுதியில் அந்நாட்டு நேரப்படி கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை அன்று இரவு திடீரென ஒரு கும்பல் விடுதிக்குள் நுழைந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீக்காயங்களுடன் 13 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு […]
மெக்சிகோவில் இரவு விடுதிக்குள் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மெக்ஸிகோவின் வளைகுடா கடற்கரை நகரமான கோட்ஸாகோல்கோஸில் ஒரு இரவு விடுதி வழக்கம் போல செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்நாட்டு நேரப்படி கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை அன்று இரவு திடீரென ஒரு கும்பல் விடுதிக்குள் நுழைந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. பெட்ரோல் குண்டு வெடித்து தீ பிடித்ததில் 15 ஆண்கள், 8 பெண்கள் சேர்த்து மொத்தம் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். […]
மெக்ஸிகனை சேர்ந்த கல்லூரி மாணவி பால் கனியில் யோகா செய்யும் போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். மெக்ஸிகன் கல்லூரியில் பயின்று வரும் மாணவி அலெக்ஸா டெர்ரஷாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றின் 6- வது மாடியில் வசித்து வருகிறார். தினமும் தனது வீட்டின் பால்கனியில் இருந்து யோகா பயிற்சி மேற்கொண்டு வருவார். அதன்படி தன்னுடைய பால்கனியின் வெளிப்புற கம்பியில் தலைகீழாக நின்றபடி யோகா பயிற்சி செய்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி சுமார் 80 அடி கீழே சென்று தரையில் […]
மெக்சிகோவின் ஸகாடகஸ் மாநிலத்தில் வானத்திற்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து சுழற்காற்று வீசியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மெக்சிகோவின் ஸகாடகஸ் (Zacatecas) மாநிலத்தில் இருக்கும் ஃப்ரஸ்னிலோ (Fresnillo) என்ற இடத்தில் கடந்த சில தினங்களாகவே காற்று மிக பயங்கர வேகத்தில் வீசி வந்தது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென புழுதிப் புயலும், சுழற்காற்றும் சுழன்று அதிவேகமாக வீசத் தொடங்கியது. அப்போது சுழற்காற்றின் அசுர வேகத்தில் தூசு மண்டலம் ஒன்றிணைந்து வானத்திற்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து மணிக்கு 112 கி.மீ […]
மெக்சிகோ நாட்டில் குடும்ப விழாவில் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாநிலத்தில் உள்ள மினாடிட்லன் நகரில் ஒரு குடும்ப விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு மர்ம நபர் அந்த விழாவில் புகுந்து திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை, 5 பெண்கள், 7 ஆண்கள் என மொத்தம் 13 பேர் எதற்கு இறந்தோம் என்றே தெரியாமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]