இந்தியாவின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் மணிரத்னத்தின் ‘இருவர்’ இடம்பெற்றிருக்கும் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார். மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், ரேவதி, கௌதமி, தபு, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படம் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்று காவியமாகப் பார்க்கப்படுகிறது. நட்பு, அரசியல், மொழி, கலாசாரம் பற்றி ஆழமாக கருத்து விதைத்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட […]
Tag: mgr
முரசொலி பற்றி ரஜினி தவறாக கூறவில்லை என்றும் நமது அம்மாவை படியுங்கள் பொது அறிவு வளரும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை தமிழ்நாடு மக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103-ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினர். பின்னர், அமைச்சர் […]
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டி எம்ஜிஆர் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செய்தார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் […]
அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பெயரில் ஆட்சி செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை என்று மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் , பேருந்து நிலையங்களில் , அரசுக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் , பேருந்து நிலையம் உட்பட அரசு கட்டடங்களில் டெங்கு பரப்பக்கூடிய அழுக்குகள் இருக்கக்கூடிய ஒரு சூழலிலே அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் வீரியமாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசுகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் ஆட்சி […]
சிறந்த அரசியல் தலைவர் கலைஞரா ? எம்ஜிஆரா ? என்பது குறித்து சட்டப்பேரவை கூட்டத் தொடரில் காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் சுகாதார மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சரவணன், உங்கள் தலைவர் எம்ஜிஆர்க்கு தலைவர் எங்கள் தலைவர் கலைஞர் தான் என்றும், எனவே உங்களுக்கும் எங்களுக்கும் […]