ஆப்கானிஸ்தான் குடியிருப்பு பகுதியில் குண்டு வெடித்ததால் 15 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசுக்கும் அந்த நாட்டில் வசிக்கும் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் இருதரப்பும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனாலும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதே சமயத்தில் ராணுவமும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்திக் […]
Tag: Military
நைஜீரியாவில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கிளர்ச்சியாளர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான நைஜீரியாவில் போகோஹராம், ஐ.எஸ், கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்பு படையினரையும், அந்நாட்டின் பொதுமக்களையும் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு இதுவரை ஏராளமான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில், அந்நாட்டின் கட்சினா மற்றும் சம்பரா ஆகிய […]
ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் பட்டப்படிப்பு படித்த ஆண்- பெண் இருபாலரும் சேர்க்கப்படுகிறார்கள். ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கையின் படி தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது தொழில்நுட்ப பிரிவில் 55-வது சேர்க்கையின்படி ஆண்களும், 26-வது சேர்க்கையின்படி பெண்களும் சேர்க்கப் படுகிறார்கள். எஸ்.எஸ்.சி. (டெக்) கோர்ஸ் காமென்சிங் அக்டோபர் 2020 எனும் இந்த பயிற்சி சேர்க்கையில் மொத்தம் 191 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் பெண்களுக்கு 16 இடங்கள் உள்ளன. ஆண்களுக்கு 175 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் […]
ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் தீவிர நடவடிக்கையால் கடந்த சில வாரங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒடுக்க ராணுவத்தினர் தங்கள் நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளனர். அதன்படி ஆப்கன் ராணுவமும், காவல் துறையும், புலனாய்வுத் துறையும் ஒருங்கிணைந்து பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன்படி கோர் மாகாணத்தின் மேற்கு பகுதியிலுள்ள ஷாஹ்ராக் மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, செவ்வாய்கிழமை (ஜனவரி 21) ஒரே நாளில் மட்டும் சுமார் 40 தாலிபான்கள் தங்கள் ஆயுதங்களை […]
அசாமிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உல்பா, போரோலாண்ட் சோராய்க்வ்ராவின் தேசிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்கள் 1990ஆம் ஆண்டுகளில் அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை எட்டப்பட்டு சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது. இதனால் அங்கு அமைதி திரும்பி வருகிறது. இதையடுத்து அங்கு ராணுவத்தை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அசாமில் அமைதி திரும்புவதற்கான […]
நாட்டிற்காக பாடுபடும் ஒவ்வொரு ராணுவ வீரனும் நாட்டையே தன் வீடாக நினைக்கிறான். ஒரு வீரன் தான் ராணுவத்தில் இணைந்து இருப்பதை எப்படி பெருமை அடைகிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த அந்நியம். அவன் மனதின் எண்ணங்களே இந்த தொகுப்பு. அனுதினமும் போர்க்களம், அனுக்கனமும் போர், எந்த நேரமும் தயார் நிலை, 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் ஓய்வு அறியாமல் உழைத்து கொண்டு இருக்கின்றனர் ராணுவ வீரர்கள். எப்பொழுது மரணிப்போம், எப்பொழுது உயிர் பிழைப்போம் என்று அவர்களுக்கே […]
இந்திய ராணுவம் ஒரு பார்வை….. கரடு முரடான மலை சிகரங்கள், கடும் குளிர் மற்றும் பனி மலைகள், சுட்டெரிக்கும் பாலைவன வெயில், மழை, வெள்ளம், புயல், விஷக்கிருமிகள், மிகக் கொடிய வனவிலங்குகள், விஷப்பாம்புகள் என இயற்கை சீற்றங்கள் எல்லாம் தாண்டி மனம் தளராமல் நாட்டைக் காக்க உறுதியோடு போராட தன் வீடு சுகம் துக்கம் சோகம் என அனைத்தையும் மறந்து போராட்டமே பொழுதுபோக்காக கொண்டவர்கள்தான் ராணுவ வீரர்கள். வீரம் என்ற வார்த்தைக்கான இலக்கணம் இவர்கள் தான். தேசத்தை […]
ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடும் கொடுமையிலும் நமது நாடும் நாட்டு மக்களும் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கின்றனர் என்றால் அதற்கு காரணம் எல்லையில் தங்களது பந்தம் பாசம் குடும்பங்கள் எல்லாம் மறந்து நாட்டுக்காக மட்டும் போராடும் லட்சக்கணக்கான நமது இராணுவ வீரர்கள்தான். தாயுள்ளம் கூட தனது பிள்ளைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால் நமது வலிமை வாய்ந்த இந்திய ராணுவ வீரர்கள், நம் தேசம் மட்டுமின்றி பிற நாடுகளில் ஏதேனும் இயற்கை சீற்றங்கள் உண்டாகி இருந்தால் கூட அங்கும் சென்று […]
அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் நவீன பீரங்கியை இந்திய ராணுவம் சோதனை செய்துள்ளது . அமெரிக்காவிடமிருந்து கூடுகள் தொலைவு சென்று தாக்கும் வெடிகுண்டுகளை இந்திய ராணுவம் அண்மையில் வாங்கியது. அந்த குண்டுகளை அமெரிக்காவின் m777 நவீன ரக பீரங்கி மூலம் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய ராணுவம் வெடிக்கச் செய்து சோதித்துப் பார்த்தது. ஜெனரல் ரவி பிரசாத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீரங்கி மூலம் […]
ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், புல்வாமா தாக்குதலையடுத்து பயங்கரவாதிகள் கார் குண்டுகள் மூலம் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தயிருப்பதாகவும், இதில் லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அரசு வாகனங்களைக் கடத்தி அந்த வாகனம் மூலமே தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் […]
ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை தாக்குதல் நடத்தி இந்திய இராணுவம் முறியடித்துள்ளது. காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இந்திய இராணுவம் மற்றும் உளவு துறையும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டு ராணுவத்தால் துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டுகள் வேட்டையாடுதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டு இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஊடுருவ முயற்சி […]
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜார்க்கண்டின் தும்கா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த ராணுவ வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், அங்கிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சண்டையில் காயமடைந்துள்ள […]