தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டள்ளார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சித்தரிப்பேட்டையில் காய்ச்சல் பரிசோதனை மற்றும் முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறியுள்ளார். பீலா ராஜேஷ் மாற்றம் முழுக்க முழுக்க நிர்வாக நடவடிக்கையே, வேறு எந்த […]
Tag: # Minister Jeyakumar
நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்கிட மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளனது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 40வது கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர், மத்திய அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். ஜிஎஸ்டி கவுன்சில் குழுக்கூட்டத்தில் கூட்டத்தில் வைரஸ் ஊரடங்கால் […]
ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற ஓமியோபதி மாத்திரை உயிரைக் காக்கும் கேடயம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மனித குலத்திற்கே சவாலான ஒரு விசயமாக உள்ளது என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற ஓமியோபதி மாத்திரைகளை சாப்பிடலாம் என கூறியுள்ளார். ஆர்சனிக் ஆல்பம் 30சி நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் உருவாக்கும் வல்லமை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் வீதம் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். மூன்று […]
தமிழக கடற்பகுதியில் நாட்டுப்படகுகளில் மட்டுமே மீன்பிடித்துள்ளனர் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்., 15ம் தேதி முதல் மே 15ம் தேதி ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட மொத்தம் 13 கடற்கரை மாவட்டங்களில் 6 ஆயிரத்து 500 விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி […]
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் […]
ரஜினிகாந்தை கண்டு அதிமுக பயப்படவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் “அண்ணா, பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவர்களுக்கும் எந்த இழுக்கு ஏற்பட்டாலும் அதனை கண்டித்து அதிமுக குரல் கொடுக்கும்” என தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற சமயம் பார்த்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் பாஸ்கரன் கூறியிருப்பது அவரது சொந்த கருத்தாக இருக்கலாம் எனவும் […]