இஸ்லாமியர் குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் அது கட்சியின் கருத்தல்ல என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரம் நார்த்விக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர். மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”தமிழ்நாடு முழுவதும் இதுவரை 45.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், […]
Tag: Minister Rajendra Balaji
அந்தக் காலத்தில் பேசிய பெரியார் கருத்தை இந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, சிக்கிம் மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் தோட்டக்கலைத் துறை அமைச்சர் லோக்நாத் சர்மா, அமைச்சரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “சிக்கிம் மாநிலத்தில் பல மொழி பேசக்கூடிய மக்கள் இருக்கின்றனர். […]
பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினிக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும், தன் கட்சியினரும் கொந்தளித்துக்கொண்டிருக்க, பாலாஜியோ கூலாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. போருக்கு தயாராகி இருக்கும் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்ததாகவும் அதை துக்ளக் இதழ்தான் வெளியிட்டதாகவும் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு […]
நடிகர் ரஜினி மீது எந்த காட்டமும் தனக்கில்லை என்றும், அவர் படங்களைத் தான் மிகவும் விரும்பிப் பார்ப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலகத் துறை சார்பாக திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலம் 1.05 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இலவச போட்டித் தேர்வு மையத்தை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் தனியார் பங்களிப்போடு தொடங்கப்பட்ட முதல் ஐஏஎஸ், […]
முக.ஸ்டாலினுக்கு நினைவாற்றல் குறைந்து வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது திமுக தலைவர் முக.ஸ்டாலின் திருவள்ளுவருக்குப் பதிலாக தந்தை பெரியார் என பிள்ளையார்பட்டியில் கூறினாரே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்க்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மு.க.ஸ்டாலினுக்கு நினைவாற்றல் குறைந்து வருகிறது என்றார். மேலும் பதற்றத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். குறிப்பாக திருமண இல்லத்திற்கு சென்றிருந்தபோது மணமகன் பெயருக்குப் […]
திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். கேள்வி: திருக்குறளை பொறுத்தவரையில் உலகப் பொது மறை நூல். ஆகையால் எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது என்று கேள்விகள் எழுகிறதே? பதில்: ‘அவர் (திருவள்ளுவர்) மதங்கள் குறித்து எழுதவில்லை. எல்லா மதங்களையும் போற்றிதான் எழுதியுள்ளார். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று இதுகுறித்து ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே அவர் இந்துவாகத்தான் இருப்பார் என்ற கருத்தை மையப்படுத்தி சிலர் கூறி […]
‘திருவள்ளுவர் கடவுள் பக்தி கொண்டவராகவே இருந்திருப்பார். நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட சூடான கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி அளித்த பதில் பின்வருமாறு: உள்ளாட்சித் தேர்தல்: கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி? வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? பதில்: ‘ஏற்கெனவே இருந்து வரும் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கூறியுள்ளார்கள். வெற்றி வாய்ப்பைப் […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமானின் கருத்து கொழுப்புத்தனமான பேச்சு என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டித்துள்ளார். நெல்லை மாவட்டம் களக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறியது முட்டாள்தனமான மடத்தனமான வார்த்தை என்றார். தமிழன் எதிரிக்கு கூட துரோகம் இழைக்காதவன். ராஜீவ் காந்தியின் கொலை தமிழக மண்ணில் நடந்ததையே கேவலமாகக் கருதுபவர்கள் தமிழக மக்கள். அப்படியிருக்கையில் ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள் […]
மக்கள் நீதி மய்யம் மழையில் முளைத்த காளான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் ஓரளவுக்கு கணிசமான வாக்குகளை பெற்றது.இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் எடுத்து வருகின்றது. தேர்தலுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டத்தில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. சமீபத்தில் கூட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூடுதலாக 5 பொதுச்செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டனர். அதே போல […]
பாஜக எடுக்கும் முடிவு அதிமுகவை கவர்ந்துள்ளது, முதல்வரின் கொடி அமெரிக்காவில் நாட்டப்படுமென்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். முதல்வரின் இந்த பயணம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகின்றார். நீலகிரி மழை வெள்ள பாதிப்பை பார்வையிட செல்ல நேரமில்லாத முதல்வர் அமெரிக்கா செல்கின்றார் , சீன் போட செல்கின்றார் என்று விமர்சித்த்தார். இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி […]