ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ரூ. 3.75கோடி மதிப்பில் புதிய மணிக்கூண்டை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாட்கள் குறைவாக இருப்பதால் பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதற்கென முதல்வர் ஆணையின் படி 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின் படி பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதனிடையே 10ம் வகுப்பு மாணவர்களுக்கு […]
Tag: # minister senkottaiyan
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என மொத்தம் […]
தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்துவது கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என தகவல் அளித்துள்ளார். பொதுமுடக்கத்தின் போது கல்வி […]
ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா, வேண்டாமா? என்பது குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவுகளுக்கு இடையே தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களையும் அரசு காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி தேர்வுகள் மற்றும் 9ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மார்ச் 27ம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மே […]
ஈரோட்டில் மழை வேண்டி நடந்த யாகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் , தமிழகத்துக்கு மழை வேண்டி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் […]