குத்துச்சண்டை போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பாக்சிங் செய்து அசத்தியுள்ளார். தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், குத்துச்சண்டை வீரருடன் பாக்சிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். பாக்ஸர் கோச்சுடன் சிறிது நேரம் சண்டையிட்டு அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்தார். மேலும் ‘கையை அப்டி வெக்கக் […]
Tag: #MinisterJayakumar
ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘ மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை. எதிர்காலத்தில் கொடுக்கவும் கொடுக்காது. மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டுவர முடியாது. கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறுவது, தூங்குவது போல் நடிப்பது போன்று […]
முதல்வராக எண்ணுபவர்கள் வேணுமென்றால் நித்யானந்தாபோல் தனியாக தீவு வாங்கி, முதலமைச்சர் ஆகலாம் என்று ஸ்டாலினை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.!! சென்னையில் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி தங்களது மரியாதையை செலுத்தினர். இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்பொழுது, ஒரு குழப்பம் நிறைந்த கட்சி திமுக.மேலும் நீதிமன்றத்திடம் சென்று தேர்தலை ரத்து செய்யவும் முயற்சித்தனர். […]
ராஜிவ் காந்தி குறித்து கூறிய கருத்தினை சீமான் தவிர்த்திருக்கலாம் என்றும் சீமான்தான் தனிமைப்பட்டு போவார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அக்டோபர் 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் போது மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வந்தாரை வாழவைப்பவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு அனைத்து மக்களும் வாழும் அமைதிப் […]
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து திமுகவினர் இனி அங்கேயும் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ரத்து செய்யக்கோரிய மசோதாவுக்கு ஆதரவு மற்றும் எதிரான கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். தற்பொழுது இதுகுறித்து மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற பெரும்பான்மையான மக்களின் எண்ணத்தையே மத்திய அரசு நிறைவேற்றி இருப்பதாக குறிப்பிட்ட அவர், […]
காஷ்மீர் விவகாரத்தில் ஜெயலலிதா அன்று சொன்னது இன்று நிறைவேறியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு அரவிந்த் கெஜ்ரிவால் , மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று சென்னை அயனவரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் , ஜம்மு காஷ்மீர் […]
திமுகவினர் தான் கெலும்பு இல்லாதவர்கள் அவர்களுக்கு எங்களை சொல்ல என்ன தகுதி இருக்கின்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மீது திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது அ.தி.மு.க மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குறுக்கிட்டுப் பேச முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த டி.ஆர்.பாலு, ஏய்.. […]
பேரவையில் இன்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்களை நினைவில் கொள்ளுமாறு அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்து பேசினார். சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் பேசத் தொடங்கும் முன்பு கலைஞர்,திமுக தலைவர் ஸ்டாலின்,இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு பேசத் தொடங்குவது வழக்கம். இதனை தொடர்ந்து இன்று செய்தித் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்ட […]
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக பின்னடைந்தது போல் இந்திய அணி பின்னடைந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு […]
திமுக எதிரி கட்சி என்று டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள நிதி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்துக்கு GST நிலுவை தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் […]
தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிலுவை மற்றும் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். 35_ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. புதிதாக தேர்வாகியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில நிதியமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , 69 பொருளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தமிழகம் சார்பில் […]
அரசுக்கு தொல்லை கொடுக்க திமுக போராட்டம் நடத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பின்பு இன்று டெல்லியில் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க அனைத்து மாநில நிதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இதில் பங்கேற்ற பின் செய்தியாளரை சந்தித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் , 69 பொருளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தின் […]
சந்து பொந்து எல்லாம் சென்று மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை வீரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் மீன்வளத்துறைஅமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.இந்த ஆண்டுக்கான 100% பருவ மழையில் 40% தான் மழை பெய்துள்ளது. 60 சதவீதமான மழை இல்லை. பாதிக்குமேல் பருவமழை கிடையாது. இந்த சூழ்நிலையில் வைத்துக்கொண்டு அரசு சமாளித்து வருகிறது. எனவே யாரும் இதில் அரசியல் செய்வது என்பது […]
அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் அதிமுகவின் தலைமை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக அதிமுகவிற்கு ஜெயலலிதா போல ஒற்றைத்தலைமை வேண்டும். தற்போதைய நிலையில் அதிமுகவின் அதிகாரம் யாரிடம் இருக்கின்றது என்று அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். MLA ராஜன் செல்லப்பா_வின் இந்த கருத்துக்கு சில MLA _க்களின் ஆதரவையடுத்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டடு அதிமுக_வின் தலைமை அனைத்து தொண்டர்களுக்கும் […]
மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் செய்த தவறான பிரச்சாரம் வென்று விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]
விரோதமும் துரோகமும் அதிமுகவிற்கு எதிராக ஒருங்கிணைத்துள்ளது என்று ஸ்டாலின் மற்றும் ttv தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட புதிய ஆட்டோ சேவையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்டோவை சிறிது தூரம் ஓடிச்சென்று தொடங்கிவைத்தார் இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகிறது ஆனால் […]
தமிழக தேர்தல் அதிகாரி எந்த போனையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில் சத்ய பிரதா சாகு மீது புகார் அளிக்கப்பட்டது. நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர் […]
பணத்தின் மீது நம்பிக்கை இல்லை ஜனநாயகத்தை தான் நம்புகின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர் அரசியல் அக்கட்சி […]