Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

2 குழந்தைகளுடன் காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொளஞ்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி(35) என்ற மகள் உள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்திக்கும், தாமோதரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு விஷ்வாணிஸ்ரீ(10), அக்ஷிதாஸ்ரீ(6) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஆர்த்தி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பயிற்சிக்கு செல்கிறேன்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரிஜிவானா என்ற மகள் உள்ளார். இவர் முசிறியில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் ரிஜிவானா தனியார் மருத்துவமனைக்கு பயிற்சிக்காக செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் இளம்பெண் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து மாணவியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீனவரின் நிலை என்ன…..? பரிதவிக்கும் குடும்பத்தினர்…. தேடுதல் பணி தீவிரம்…!!

கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் இரண்டு நாட்களுக்கு பிறகும் கிடைக்காததால் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை கிராமத்தில் வசிக்கும் பிரான்சிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள் கடந்த 17-ஆம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் சுமார் 40 நாட்டிக்கல் தொலைவில் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது ஜெபமணி என்பவர் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அபயக்குரல் எழுப்பிய அ.தி.மு.க பிரமுகர்…. 3-வது நாளாக தொடரும் தேடுதல் பணி…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அ.தி.மு.க பிரமுகரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான முனிய கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மாபேட்டை பேரூராட்சியின் 15-வது வார்டு அ.தி.மு.க செயலாளராக இருக்கிறார். நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் நேற்று முன்தினம் முனிய கவுண்டர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இரவு 8 மணி அளவில் வேலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு போவதாக கூறி சென்ற பெண்…. 2 குழந்தைகளுடன் மாயமான சம்பவம்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…!!

குழந்தைகளுடன் காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காவடிக்காரனூர் பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹாசினி என்ற மகளும், சர்வின் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் இருப்பதாக கூறிவிட்டு மதியம் வீட்டில் இருந்து சென்ற ஜீவிதாவும், குழந்தைகளும் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் ஜீவிதா மற்றும் அவரது குழந்தைகளை பல்வேறு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என் கணவரை காணவில்லை…. கண்டுபிடிச்சு கொடுங்க…. கதறும் மனைவி….!!

காணாமல் போன கணவனை தேடித் தருமாறு மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு உறவினரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் அவருடைய மனைவி அனுசுயா வருவது வழக்கமான ஒன்று. அப்படி ஒருநாள் அவர்கள் வந்திருக்கும்போது தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே போல் இருவரும் வந்து ரவியின் வீட்டில் தங்கியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

டீ குடிக்கதான் போனாங்க… அப்புறம் திரும்பி வரல… மாயமானவரை தேடும் பணியில் போலீஸ்…!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென்று மாயமானதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் வசித்து வருபவர் ஜாபர்சேட். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் இவருக்கும் இவருடைய மகனான மீரானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் அவர் தடுமாறி கீழே விழுந்ததால் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அவர் கடந்த இரண்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அய்யோ..!! “என் மகளும் பேத்திகளும் போன இடம் தெரியலையே” கதறும் தாத்தா…. தேடுதல் வேட்டையில் போலீஸ்….!!

தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மாயமான சம்பவம் குறித்து வெள்ளியணை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியணையில் ஜல்லிப்பட்டிகுடி தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மகள் மகேஸ்வரி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரெங்கசாமி என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரி ரெங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகேஸ்வரி தனது தந்தை பொன்னுசாமியின் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து […]

Categories

Tech |