விமானங்களில் வரும் வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனா உள்ளிட்டா சில நாடுகளில் புதியவகை பிஎப். 7 கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் 3 பேருக்கு புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு மக்கள் சென்று தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையில், அவர்கள் […]
Tag: MK Stalin
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சீனா உள்ளிட்டா சில நாடுகளில் புதியவகை கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு மக்கள் சென்று தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையில் அவர்கள் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் […]
தொல்லியல் துறை சார்பிலான பட்டய படிப்பில் தமிழ் மொழி இணைக்கப்பட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மத்திய அரசின் தொல்லியல் துறை கல்லூரியில் முதுநிலைப் படிப்பிற்கான இரண்டு ஆண்டுகால பட்டயப்படிப்பு மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது. முதுகலை படிப்பிற்கான தகுதி பட்டியலில் தமிழ்மொழி தவிர்க்கப்பட்டிருந்தது.இதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின், மூத்த தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் முதலானோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. இதனிடையில் மத்திய […]
ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ‘மாநிலங்களில் உள்ள 1,540 கூட்டுறவு வங்கிகளை (1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள்) ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்’ என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
பொறுப்பற்ற அரசினால் பொதுமக்களுக்கு பேராபத்து என்ற தலைப்பில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்று பேசிய இணையவழி செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய அம்சங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மார்ச் 7ஆம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரையில் தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு கட்ட ஊரடங்கின் முடிவிலும் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. மே 12-இல் 8,718 18ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 44,000 […]
மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தம் விவசாயிகள், ஏழைகளின் இலவச மின்சார திட்டத்துக்கு ஆபத்து என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. மேலும் மின் […]
டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்து அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிடுங்கள் என உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், திடீரென மதுபான கடைகளை திறப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறப்பதால் சமூக தொற்று மேலும் […]
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும். அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது. 26ம் தேதி முதல் 29 வரை சென்னையில் மளிகை, இறைச்சி, பேக்கரி கடைகள் […]
தேர்தலை கணக்கில் வைத்து திசை திருப்பும் நோக்கில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா அதிவிரைவு பரிசோதனை கருவிகளான ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் சோதனை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் எத்தனை வந்துள்ளது? என அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கருவிகளை வாங்கிய விலை, எண்ணிக்கை ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். […]
திமுகவின் மக்கள் பணியை தடுக்கும் உள் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். கொரோனா தாக்குதலில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க தேவையான உதவிகளை திமுகவினர் செய்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கான நிவாரணத் தேரை அனைவரும் ஒன்று கூடி இழுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒற்றுமை எண்ணமே இல்லாத முதலமைச்சரை தமிழகம் பெற்றிருப்பது கெட்ட வாய்ப்பு என தெரிவித்துள்ளார். பக்குவம் பெறாத அரசியலுக்கு தக்க தருணத்தில் நிச்சயம் […]
பிரதமரிடம் எதிர்பார்ப்பது அறிவுரை மட்டுமல்ல, உயிர்வாழ்வதற்கான நிவாரணமும் தான் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் ஆறுதல் தரும் வகையிலான உரையை பிரதமர் மோடி எப்போது […]
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னிச்சையாக நிவாரணம் வழங்க கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உணவின்றி வாடுபவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண நிதியாகவும், உணவுப்பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என புகார்கள் வந்தன. இதனை அடுத்து தமிழக அரசு தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் […]
வருவாயின்றி மக்களிடம் மெல்ல வறுமை புகும் சூழலில், நிவாரணத் தொகையான ரூ.1000 போதவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கொரோனாவின் இறுதி விளைவாக பட்டினிச்சாவுகள் ஏற்பட்டு விடாமல் தடுக்க உரிய திட்டமிடலை அரசுகள் அலட்சியமின்றி மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், கொரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றி, தமது வாழ்க்கைக்கான அன்றாடத் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சோனியா கேட்டுக்கொண்டுள்ளார். சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்தும் திமுக ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் நாட்டு மக்கள் விரைவில் கொரோனா பதிப்பில் இருந்து விரைவில் […]
இந்தியா உட்பட உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை கொரோனா வைரசுக்கு இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அனுமதிக்க போதிய இடவசதி ஏற்படுத்துவதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தங்களால் முடிந்த உதவி செய்யவும் […]
2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவையை ஒத்திவைக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போதிய பாதுகாப்பும், மருத்துவ உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது. கொரோனா தடுப்பு […]
அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால் என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானம் போட தமிழக அரசு மறுக்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று காலை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. அதில் என்.பி.ஆர் குறித்து சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில் […]
தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி துறையில் ஊழல் நடக்கிறது, அரசு அதிகாரிகள் பலர் ஊழலுக்குத் துணை போகின்றனர். சுமார் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் […]
அவதூறு வழக்கில் ஏப்., 8ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மு.க. ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சித் துறையில் ஊழல் நடக்கிறது, அரசு அதிகாரிகள் பலர் ஊழலுக்குத் துணை போகின்றனர். சுமார் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு […]
திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக, பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய கையெழுத்து இயக்கம் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்து குடியுரிமைச் சட்டத்தின் ஆபத்தை விளக்கி […]
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒற்றுமையாகத் தான் உள்ளது என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திருச்சி சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், தற்போது திமுக – காங்கிரஸ் கட்சிகளிடையே நிலவும் சுமுகமான பேச்சு வார்த்தைக் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சேர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சுமுகமான […]
தமிழ் வழிபாட்டு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழ் முறைப்படி நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் பிப்ரவரி 5ஆம் நாள் நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்து, தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு நடத்துகிற மாநாடு முன்வைத்திருக்கும் கோரிக்கை அனைவருடைய கவனத்திற்குமானது. திராவிடக் கட்டடக்கலை என உலக […]
கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும் என்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசிய பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவிவந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சந்தித்துப் பேசினார். உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் ஒதுக்கீடு செய்வதில், திமுக […]
மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் தாயாரின் கூற்று, தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக் காட்டுகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி) மாணவி, ஃபாத்திமா லத்தீப், தனக்குத் தரப்பட்ட மனஉளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அவர், தனது தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள குறிப்பில், தனது மரணத்திற்குக் காரணமான பேராசிரியர்களின் பெயர்களை வெளிப்படுத்தி […]
மிசா காலத்தில் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று முக.ஸ்டாலின் விளக்க வேண்டுமென்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாருரே, மா.பாண்டியராஜனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் , மிசா காலத்தில் கைது செய்தது குறித்து இஸ்மாயில் கமிசன் , ஷா கமிசனில் முக. ஸ்டாலின் பெயர் இல்லை. MP ஆக இருந்த செழியன் மிசா கால கொடுமை குறித்து […]
திருவள்ளுவர் குறித்து பாஜக பதிவிட்டுள்ள கருத்து சர்சையை ஏற்படுத்திய நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது. இதற்க்கு திமுக உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு குறள் விளக்கம்: எல்லா எழுத்துக்களும் […]
‘திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார். கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது. மானுட நேயத்தைப் போதித்த திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது […]
டெங்குவை கட்டுபடுத்த திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பல்வேறு பகுதியில் டெங்கு பரவி வருகின்றது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசும் , சுகாதாரத்துறையும் டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் டெங்கு பரவாமல் இருக்க திமுக சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கு நிகச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதை அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் […]
காமராசர் சமாதிக்கு இதுவரை மலர்வளையம் வைத்திருக்கிறாரா மு.க.ஸ்டாலின்? – கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் கூறுகையில் தென் சென்னையில் இருக்கின்ற அனைத்து நிர்வாகிகளும் காங்கிரஸ் படம் போட்டு, தலைவர் ராகுல் காந்தி , அன்னை சோனியா காந்தி , தலைவர் சிதம்பரம் படத்தை போட்டு தான் நாங்க போஸ்டர் அடிக்கின்றோம். எங்களை பொறுத்த வரைக்கும் காங்கிரஸ் கட்சியோட ஆதரவாக இருக்கின்றோம். இன்னைக்கு வந்து காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கும் அழகிரி திமுக […]
திருநாவுக்கரசர் நடிகர் ரஜினியை நன்றாக பயன்படுத்திவிட்டார், அவர் விஸ்வாசமற்றவர் என்று கராத்தே தியாகராஜன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது , திருநாவுக்கரசர் ரஜினியை பயன்படுத்தி விட்டார். ஒருநாள் பட்டியில் சொல்றாரு எனக்கு நெருங்கிய நண்பர் 40 ஆண்டு கால நண்பர் என்று சொல்கிறார்கள். ஒரு தடவை ரஜினியை சொந்தக்காரர் என்று சொல்கிறார். இப்போ ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்று சொல்கிறார். திருநாவுக்கரசு ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் என்றால் ”தப்பா நினைச்சுக்காதீங்க […]
வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்_துக்கு ஆதரவாக திமுக பொறுப்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த […]
மக்களவை தேர்தலில் வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்குவோம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில், முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடி வந்திருந்த திருமதி துர்காஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணாவுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார்.சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர் வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளர்கள் திடீர் சுவாமி தரிசனம் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ”இது வழக்கமான தரிசனம் தான்” என்று பதில் கூறினார்.மேலும் கோயிலுக்குச் செல்வது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் கூறினார்.
மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை முறியடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையின் தலைநகரான கொழும்புவில் அந்தோணியார் தேவாலயத்தில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதே நேரத்தில் கிங்ஸ்பெர்ரி, ஷாங்ரிலா, சின்னமான்கிராண்ட் ஆகிய நட்சத்திர விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொழும்புவுக்கு அருகே உள்ள மற்றொரு தேவாலயத்தில் குண்டுவெடித்துள்ளது. இதே போல தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு பகுதியிலும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 8 இடங்களில் குண்டு […]