Categories
அரசியல்

”முக.ஸ்டாலின் எடுக்க போகும் அதிரடி” முக்கிய முடிவு வெளியாக இருக்கிறது …!!

திமுகவின்  தலைமைச் செயற்குழு கூட்டத்தில் முக.ஸ்டாலின்முக்கிய முடிவு எடுக்கவுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுகவை விட திராவிட முன்னேற்றக் கழகம் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று திமுகவின் தலைமை செயற்குழு அவசரக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் , சென்னை கலைஞர் அரங்கில் திமுக தலைமை அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக உடன் கூட்டணி வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின் – அழகிரி சந்திப்பு..!!

மு.க. ஸ்டாலின் – கே.எஸ். அழகிரி சந்திப்பு கூட்டணி தொடர்பாக நீண்ட நாள்களாக இருந்து வந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். திமுக அரசியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிசாமிக்கு தில் இல்லை”… வெளிநடப்பு செய்தபின் துரைமுருகன் காட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக அரசுக்கு தில் இல்லை என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க திமுக அனுமதி கோரியது. அதற்கு பேரவைத் தலைவர் தனபால் மறுப்பு தெரிவித்ததையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுபோல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீ… சீ…. என்ன ? இது….. ஆளுநர் உரையை கிண்டல் செய்த ஸ்டாலின் ….!!

ஆளுநரின் உரை , பய அறிக்கையாக ( Statement of Fear) மட்டுமே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்: நல்லாட்சி குறியீட்டில் முதலிடம் என சொல்லும் தமிழ்நாடு அரசு, குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளாமலேயே சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குகிறது என எப்படி சொல்லலாம். 250க்கும் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதைப் பற்றி பேசாதீங்க… யாருக்கும் அஞ்சமாட்டோம்…. சட்டப்பேரவையில் காரசார விவாதம்.!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் மூன்றாவது நாளான இன்றும் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவை நிகழ்வில், ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சிச் தலைவர் ஸ்டாலின்: ஆளுநர் உரை, அரசின் செய்தி அறிக்கைபோல் அமைந்துள்ளது . Railway guide போல் உள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தேடித்தேடிப் பார்த்தேன் எதுவும் இல்லை என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர்: […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : NRC-யை முதல் ஆளாக அதிமுக எதிர்க்கும் ….!!

இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பு அரணாக இருக்குமென்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2_ஆவது நாள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.இதில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இந்த பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்றுதான் திமுக இன்று காலை வெளிநடப்பு செய்தது. அதற்குப் பின்னர் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதற்க்கு அமைச்சர் ஆர் பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை ஏன் தேய்பிறை என்று கூறினேன்?… அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

திமுகவை தேய்பிறை என்று கூறியதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்தார் அமைச்சர் ஜெயக்குமார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளையும், உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகளையும் கணக்கு வைத்துப் பார்த்தால் திமுக வாக்கு வங்கி சரிந்துள்ளது. இதை வைத்துதான் திமுகவை தேய்பிறை எனத் தெரிவித்ததாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இதேநிலை நீடித்தால் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்றார். அதேபோல், டிஎன்பிஎஸ்சி விவகாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநர் உரையல்ல… ஆளும்கட்சியின் உரை… கிண்டல் ட்விட் செய்த ஸ்டாலின்..!!

இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை என்று மு.க ஸ்டாலின் கிண்டலாக ட்விட் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020ஆம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆனால் ஆளுநர் உரையை புறக்கணித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்தது. இதேபோல் காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்ட பேரவையில் வெளிநடப்பு… திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து!

திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடத்தப்பட்டு இந்தப் பேரவை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து முடிவுசெய்யப்படும். இந்தச் சட்டப்பேரவையில் திமுகவின் செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கவிருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறையிலேயே எம்எல்ஏக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இசக்கியம்மா… ஸ்டாலினுக்கு நல்ல புத்திய கொடு – இந்து மக்கள் கட்சியினர்!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நல்லபுத்தி வர வேண்டி இந்து மக்கள் கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று தூத்துக்குடிக்கு சென்றார். வேம்படி இசக்கியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அதற்கு எதிராக போராடி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புத்தி வரவேண்டுமென வேண்டியும் கோயிலில் 101 தேங்காய் உடைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மறைகிறதா ‘இரட்டை இலை’…. வரலாற்றை மாற்றி எழுதிய திமுக..!!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்ற வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று, ஜனவரி 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. 513 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 5087 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2021இல் எல்லாம் மாறும் – ஸ்டாலின் நம்பிக்கை.!

2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து தமிழ்நாட்டில் அனைத்தும் மாறும் என திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக தென்சென்னை கட்சி அலுவலகத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், சிலை அமைப்பது கருணாநிதிக்குப் பெருமைத் தேடிதருவதற்கு அல்ல; அவரது உழைப்பையும், அவர் ஆற்றியுள்ள பணிகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக எனக் கூறினார். இரண்டு நாள்களாக உள்ளாட்சித் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி.!!

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தனது சகோதரருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். திமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இன்று 52ஆவது பிறந்தநாள். பிறந்தநாள் குறித்து அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், எனது பிறந்தநாளைக் கொண்டாட தேவையில்லை” என முன்கூட்டியே அறிவித்திருந்தார். அதன்படி, தனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடாமல் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட கவுன்சிலர்… “சபாஷ் சரியான போட்டி”… அதிமுக 176… திமுக 172..!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில்  இன்று காலை 8 மணி முதல் பத்திரமாக எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு மையங்கள் முழுவதும் 30,354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட கவுன்சிலர்… “போட்டி போடும் திமுக”… விட்டுக்கொடுக்காத அதிமுக..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் பத்திரமாக எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30,354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இரவு முழுவதும்…. நாளை வரை வாக்கு எண்ணிக்கை ….!!

நாளை வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடருமென்று மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் 97,975 பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஊரகப்பகுதிகளில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாவட்ட கவுன்சிலர் : முன்னிலை வகிக்கும் அதிமுக… பின் தொடரும் திமுக..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் பத்திரமாக எண்ணப்பட்டு வருகின்றது.வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30,354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஒன்றிய கவுன்சிலர்… ”அதிமுகவை தட்டி தூக்கிய திமுக..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கோலம் போட்டால் குடும்பம் அலங்கோலமாகி விடும்”- பொன். ராதாகிருஷ்ணன்.!

திமுக சொல்லி பெண்கள் கோலம் போட்டால் குடும்பம் அலங்கோலமாகி விடும் என்று பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை பெசன்ட் நகரில் கோலம் போட்ட பெண்களை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதற்கு பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதை தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி சென்னை, தூத்துக்குடியிலுள்ள தனது வீடுகளிலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டிலும், ஸ்டாலின் வீட்டிலும் கோலம் போட்டு திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜன.6இல் கூடுகிறது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்..!!

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கேரள சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனை மேற்கொள்காட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஜனவரியில் கூடும் தமிழ்நாடு சட்டபேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடரும் கோல போராட்டம்… அழகான கோலம் போட்டு எதிர்ப்பை காட்டிய திருமா!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது வீட்டின் வாசல் முன்பு கோலம் போட்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்டத்தால் மத்திய அரசுக்கு எதிர்ப்பலை நாடு முழுவதும் உருவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வித்தியாசமான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது… ஸ்டாலினை சந்தித்த மாணவர்கள்..!!

மாவுக்கோலம் போட்டதால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் முக ஸ்டாலினை சந்தித்தனர்.   மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் வரக்கூடிய நாட்களில் இச்சட்டத்தினால் இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதே போராட்டக்காரர்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘வேண்டாம் CAA – NRC’ – கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கோலப் போராட்டம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரது வீட்டு வாசல்களில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் வரக்கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘கோலம் போட்டது ஒரு குற்றமா’… அலங்கோல அரசின் அராஜகம்…. ஸ்டாலின் கண்டனம்!!

தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்ததால் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். கேரளா, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்கள் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் விடுமுறையை ரத்து செய்வதா? – அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்..!!

பொங்கல் விடுமுறையன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் உரையினைக் காண்பதற்கும், கேட்பதற்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பொங்கல் விடுமுறை தினமான 16ஆம் தேதி அன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். மோகன் மறைவு: மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

உடல் நலக்குறைவால் உயிரிழந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ். மோகனின் உடலுக்குத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் எஸ். மோகன் (90). இவர், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். உடல்நலக்குறைவின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், திமுக தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

“ஸ்டாலினும், மம்தாவும் மக்களை கசக்கி எறிவார்கள்”…. பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு..!!

அரசியல் லாபத்துக்காக மக்களை பயன்படுத்திவிட்டு கசக்கி எறிவதை ஸ்டாலினும், மம்தாவும் கையாண்டுவருவதாக பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தனி பெரும்பான்மை கட்சியாக பாஜக வராவிட்டாலும் அதிகப்படியான வாக்குகளை பெற்ற கட்சியாக ஜார்கண்டில் நிலைபெற்றுள்ளது. தேர்தல் அந்தந்த மாநிலத்தின் நிர்வாகங்களை அடிப்படையாகக்கொண்டது. கூட்டணி சரியாக அமையவில்லையென்றால் மிகப்பெரிய சறுக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது. தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீ…சீ…. இவ்வளவுதானா ? இது கேவலம் இல்லையா ? வெகுண்டெழுந்த ஜெயக்குமார்

திமுக நடத்திய பேரணி திமுகவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய கேவலம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நேற்று குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக  திமுக தலைமையில் கூட்டணி கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி , மாணவர் அமைப்பு , ஆசிரியர் அமைப்பு , நடிகர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று திமுக பேரணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில் , திமுக நடத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி பண்ணிட்டாங்களே தளபதி…!.. 4 பிரிவில் சிக்கிய 8,000 பேர்… கதறும் தோழமைகள் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக  திமுக தலைமையில் கூட்டணி கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் தொடர்ச்சியாக இந்த பேரணிக்கு முழுமையாக அனுமதி அளிக்கப்படவில்லை என்று எழும்பூர் போலீசார் பேரணியில் பங்கேற்ற 8,000 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். திமுக தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு” அதிரடி காட்டிய அதிமுக …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக  திமுக தலைமையில் கூட்டணி கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் தொடர்ச்சியாக இந்த பேரணிக்கு முழுமையாக அனுமதி அளிக்கப்படவில்லை என்று எழும்பூர் போலீசார் பேரணியில் பங்கேற்ற 8,000 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். திமுக தலைவர் மு க ஸ்டாலின், […]

Categories
மாநில செய்திகள்

தந்தை பெரியார் 46ஆவது நினைவு நாள்: ஸ்டாலின் மரியாதை..!!

தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திராவிட இயக்கத்தின் பிதாமகன், சமதர்ம சமத்துவ அரசியல் தமிழ்நாட்டில் கோலோச்சுவதற்கு அடித்தளமிட்டவர் என்றெல்லாம் தமிழர்களால் கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னை சிம்சனில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

பேரணி மட்டும் இல்ல… இது ஒரு போர் அணி… ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இன்று நடந்தது ‘பேரணி மட்டும் இல்லை இது ஒரு போர் அணி என்று முக ஸ்டாலின் பரபரப்பாக பேசினார். சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பேரணிக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு எடுக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

திமுக, கூட்டணி கட்சிகளின் CAA-க்கு எதிரான பேரணி : 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு..!!

திமுக, கூட்டணி கட்சிகளின் சார்பில் CAA-க்கு எதிரான பேரணியில்  110 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பேரணிக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு எடுக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தது.   இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னை தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்தம் : தடையை மீறிய திமுக பேரணி நிறைவு..!!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் தோழமைக்கட்சிகள் நடத்திய பேரணி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பேரணிக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு எடுக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து பேரணியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேரணிக்கு அனுமதி மறுப்பு: தடையை மீறுமா திமுக?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக தலைமையில் நாளை நடைபெறவுள்ள பேரணிக்கு மாநகர காவல் துறையினர் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பேரணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கல்லூரி மாணவர்கள், எதிர்க்கட்சிகள் என ஒன்றாகத் திரண்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதற்கு மறுபுறம் பாஜக, இந்து அமைப்புகள் சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

‘தடையை மீறி திமுக நடத்தும் பேரணி’… சிசிடிவியை சரிபார்க்கும் பணியில் போலீஸ்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தடையை மீறி திமுக நடத்தும் பேரணியில், ஏதேனும் வன்முறை நடந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வகையில் காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராக்களை சரி செய்து வருகின்றனர். சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாளை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து பேரணியாகச் சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர். அந்தப் பேரணி தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து, லேங்ஸ் தோட்டச் சாலை வரை நடைபெறுகிறது.பேரணியில் பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ விஷ விதைகளை விதைக்கிறார் ஸ்டாலின்’ – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்.!!

மத நல்லிணக்கத்தோடு இருக்கின்ற தமிழ்நாட்டில் விஷ விதைகளை விதைக்கும் சதி வேலையில் ஸ்டாலின் ஈடுபடுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வருங்காலத்தில் அண்ணாவின் பெயரும் நீக்கப்படும் என்று ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய அமைச்சர், “குறுகிய எண்ணம் படைத்தவர்களுக்குத்தான் இது போன்ற குறுகிய சிந்தனைகள் ஏற்படும். ஸ்டாலினின் கவலை எல்லாம் உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது முன்னிலைப்படுத்திவிட வேண்டும் என்பதுதான், நாங்கள் எப்போதும் அண்ணாவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘வரும் 23ஆம் தேதி, சென்னையில் திமுக தலைமையில் பேரணி..!!

 சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைமையில் வரும் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பாக பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை மசோதா : தடை விதிக்க முடியாது… உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த தாக்குதலை கண்டித்தும் மசோதாவுக்கு எதிராகவும் தமிழகம் உட்பட பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை மசோதா: அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் – கமல்ஹாசன் ஆவேசம்..!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ”தேச விரோத சக்திகளின் தொடக்கம் இது. இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் கிராமங்களில் விவசாயிகள் தற்கொலையை தடுக்காமல் அரசு சூழ்ச்சி செய்து வருகிறது. வாக்கு வங்கிக்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஷத்தை கலக்குகிறார்கள்… குடியுரிமை சட்டமா? குழிபறிக்கும் சட்டமா?… கொதித்தெழுந்த ஸ்டாலின்.!!  

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு முக ஸ்டாலின் குடியுரிமை சட்டமா? குழிபறிக்கும் சட்டமா?  என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : குடியுரிமை சட்ட திருத்த மசோதா : திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசின் அலட்சியத்தால் 17 பேர் உயிரிழப்பு – ஸ்டாலின் குற்றச்சாட்டு..!!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சுவர் குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்காமல் விட்டதே இத்தனை பேர் உயிரிழந்திருப்பதற்கு காரணம் என அப்பகுதியில் […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடலூரில் சுவர் இடிந்து உயிரிழந்த குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதி உதவி..!!

கடந்த 29ஆம் தேதி சுவர் இடிந்து மூன்று பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். கடலூரில் பெய்த தொடர் கனமழையால் கடந்த 29ஆம் தேதி கம்மியம்பேட்டை பகுதியில் நாராயணன் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நாராயணன், மனைவி மாலா மகேஸ்வரி, பேத்தி தனஶ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை மோடி பெற்றுத்தர வேண்டும்” – ஸ்டாலின் கோரிக்கை.!!

இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை மோடி பெற்றுத்தர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, “ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை” என்றும், “பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை” என்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச “தி இந்து” ஆங்கில பத்திரிகையில் பேட்டி அளித்திருப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராமதாஸூக்கு கெடு விதித்த திமுக… மீறினால் ரூ 1,00,00,000 இழப்பீடு..!!

திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக அவதூறு கூறியதற்காக, ராமதாஸ், பாஜகவைச் சேர்ந்த ஆர். சீனிவாசன் ஆகியோர் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்களுக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து பேசிய அசுரன் படத்தைப் பாராட்டியதையடுத்து, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில்தான் அமைந்துள்ளது என்று விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கே இப்படீன்னா… மக்களின் நிலை?.. அசிங்கப்பட்ட அமைச்சர்கள்… ஆத்திரமடைந்த ஸ்டாலின்.!!

அரசு விழாக்களில் கலந்துகொண்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், நா.கார்த்திக் ஆகியோர் தொடரந்து அதிமுகவினரால் எதிர்க்கப்பட்டதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், சர்வாதிகாரபோக்கை தொடரும் அதிமுக அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கான முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தமிழ்நாடு வணிகத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தன் கோரிக்கைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பஞ்சமி நிலம்; இரு கட்சிகளின் பிரச்னை மட்டும் அல்ல…!!

இது இரு கட்சிகளுக்கு இடையிலான பிரச்னை மட்டும் இல்லை. லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் எப்படி, சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல் காணாமல் போயின என்பதைக் கண்டறியும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது – ஸ்டாலின் பரபரப்பு பேட்டி …!!

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றம் சென்றோம் என்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது , தேர்தலை நடத்தக்கூடாது என்பது எங்களுடைய நோக்கம் கிடையாது. முறையா நடத்தவேண்டும். இடஒதுக்கீடு முறையை சரி செய்து , முறையாக தேர்தல் நடத்துங்க என்று தான் நீதிமன்றத்துக்குப் போனோம் .  சட்டமன்றத்திலும் , மக்கள் மன்றத்திலும் நாங்கள் இதைத்தான் சொல்லி வருகின்றோம். ஆனால் அதிமுக இதை பற்றி கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஊராட்சி பகுதிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலினுக்கு அல்வா கொடுத்துள்ளார்கள்” – எடப்பாடி பழனிசாமி அதிரடி ..!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆனால், […]

Categories

Tech |