நம் ஒவ்வொருவருக்கும் என்றாவது ஒருநாள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு சிறந்த சிந்தனை கண்டிப்பாக தோன்றும், அது வாழ்க்கைக்கு சரிவராத அதீத கற்பனையாக இருந்தாலும், விடா முயற்சியை செலுத்தினால் கண்டிப்பாக வெற்றியை நோக்கி செல்லலாம். ஆனால் அதை ஒரு சிலர் மட்டுமே கடைப்பிடித்து வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். அதற்கு காரணம், ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்து விட்டு, அதை சிறிது நேரம் கழித்து செய்யலாம் அல்லது சில நாட்களுக்கு பிறகு செய்யலாம் என்ற அலட்சிய மனோபாவம் […]
Tag: #motivation
அமேசான் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைவரான ஜெப் பெசோஸ்இன் மகத்தான வெற்றி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர், சிஇஓ மற்றும் தலைவரான ஜெப் பெசோஸ் 200 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 14.63 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரரான உலகின் முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலகின் இரண்டாவது பெரும் பணக்காரரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்சின் சொத்தை விட இது 90 பில்லியன் […]
இந்தியாவில் 15 வயதிலிருந்து 39 வயது வரையில் உள்ளவர்கள் மரணம் அடைவதற்கான முக்கிய காரணமாக தற்கொலை இருக்கிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 10.5% பேர் என்ற அளவில் தற்கொலை விகிதம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஒருவர் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வது குறித்து பேசுவது அல்லது அதற்கான முயற்சிகளையே தற்கொலை நடத்தை என்கிறோம். இத்தகைய தற்கொலை எண்ணங்கள் மற்றும் நடத்தை உளவியல் ரீதியான அவசர நிலையாக கருதப்படவேண்டும். இது ஒரு எதிர்மறை விஷயம் போல் […]
மனித நாக்குக்கு எலும்புகள் கிடையாது. ஆனால் அது அது ஒரு மனித இதயத்தை உடைக்கும் அளவிற்கு வல்லமை கொண்டது. கோபத்தில் சமநிலை இழந்து நமக்கு பிடித்தமான நபர்களையே தாறுமாறாக பேசி விடுகிறோம். அவசரத்தில் வார்த்தைகளை விட்டு விடுகிறோம். இதன் மூலம் நம் மீது தீராத அன்பு கொண்டவர்கள் கூட நம்மைப் பார்த்து வெறுக்க தொடங்கி விடுவார்கள். நாம் ஒருவரை உடலளவில் காயப்படுத்தும் சமயங்களில் அதனுடைய காயம் வெளிப்புறத்தில் இருக்கும். அது காலப்போக்கில் ஆறிவிடும். அந்த வலியும் அதற்கான […]
இந்திய அணியின் தொடக்க வீரரான பிரித்வி ஷா மீண்டும் அணியில் இடம்பிடிப்பேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் தனது பேட்டிங் திறமையின் மூலம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் பிரித்வி ஷா. இவர் ஊக்கமருந்து உபயோகித்தது உறுதி செய்யப்பட்டதினால், பிசிசிஐயின் மூலம் எட்டு மாதத் தடையை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது 20ஆவது பிறந்த நாளைக் காணும், பிரித்வி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் […]