சூர்யாவின் படத்தில் ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது சூர்யாவிற்கு சொந்தமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இத்திரைப்படத்தில் சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இயக்குனர் பார்த்திபன், பாக்கியராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக […]
Tag: #movie
புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பார்த்திபன் சிங்கிள் டேக்கில் உருவாகும் படம் பற்றி கூறியுள்ளார் கோவையில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று தான் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்ட பார்த்திபன் அவர்கள் விழாவில் பேசிய பொழுது ரசிகர்கள் இருவர் அவர்கள் எழுதிய புத்தகங்களை பார்த்திபனுக்கு பரிசாக வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து ரசிகர்களிடம் பேசிய பார்த்திபன் தான் நடிக்கவிருக்கும் அடுத்த படமான இரவின் நிழல் படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில்இரவின் நிழல் திரைப்படம் முழுவதும் சிங்கிள் டேக்கில் […]
மெர்சல் சீனியம்மாள் பாட்டி அமிதாப்பச்சனுடன் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார் பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் சீனியம்மாள் பாட்டி சமீபத்தில் நடித்து வரும் பேய் படத்தை தொடர்ந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் பேய் படத்தில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அத்துடன் தமக்கு அமிதாப்பச்சனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருப்பதாகவும் கூறியுள்ளார் மெர்சல் சீனியம்மாள். காரணம் தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைவருடனும் நடித்து […]
டே நைட் – விமர்சனம்
டே நைட் நடிகர் : ஆதர்ஷ் புல்லனிகட் நடிகை : அன்னம் ஷாஜன் இயக்குனர் […]
திரைப்பட இயக்குனர் முருகதாஸுக்கு பாதுகாப்பு தருவது குறித்து பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்பார் திரைப்படம் நஷ்டம் தொடர்பாக மிரட்டல் வருவதால் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முருகதாசின் கோரிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து பிப்ரவரி 10ஆம் தேதி விளக்கம் அளிக்க காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்துக் கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் நடித்ததாக நடிகர் யோகி பாபு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் யோகி பாபு நடிப்பில், இயக்குநர் விஜய முருகன் இயக்கியுள்ள திரைப்படம் “காக்டெய்ல்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் யோகி பாபு முருகன் வேடத்தில் நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஆஸ்திரேலிய வகைக் கிளியான காக்டெய்ல் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது. இது இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாகக் கூறி, இந்து மக்கள் முன்னணி அமைப்பு […]
விமல் நடித்து வரும் சோழ நாட்டான் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் விமல் வரலாற்று கதைக்களத்தில் நடித்துவரும் படம் சோழ நாட்டான். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதையில் விமல் நடிக்கும் முதல் படம் ‘சோழ நாட்டான்’ ஆகும். இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சத்தியமங்கலம், மலைப்பகுதிக்கு செல்லவுள்ளனர். இதையடுத்து தஞ்சாவூர், ஹைதராபாத், வைசாக் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த […]
நாங்கள் வழிபடும் கடவுளை, நாங்களே எப்படி தவறாக சித்தரிப்போம்’ என காக்டெய்ல் பட இயக்குநர் விஜய முருகன் தெரிவித்துள்ளார். ‘காக்டெய்ல்’ பட கதைப்படி முருகன் சிலை, ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விஜயமுருகன் தெரிவித்துள்ளார். பி.ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பில் அறிமுக இயக்குநர் விஜயமுருகன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் ‘காக்டெய்ல்’. யோகிபாபுவுடன் ரமேஷ், மிதுன் மற்றும் ‘விஜய் டிவி கலக்கப்போவது யாரு’ புகழ் பாலா, குரேஷி, […]
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் சீனு ராமசாமி என்ற புதிய படத்திலிருந்து சர்ச்சைக் குரிய நடிகர் ஷேன் நிகம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் போன்ற படங்கள் வெளிவராமல் இருக்கின்றன. இந்த படத்தின் வரவை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கும் பணிகளில் சீனு ராமசாமி ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் மலையாள படங்களில் […]
புதிய தோற்றத்தில் மன்மதன் …!!
புதிதாக உருவாக இருக்கும் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்ததில் வைரலாகி வருகிறது. தன்னுடைய சின்ன வயதிலேயே தமிழ் சினிமாவில் தனித்திறமையின் மூலம் புகழைப் பெற்றவர் நடிகர் சிம்பு . அதற்குப் பிறகு சிம்புவின் கோவில், மன்மதன்,வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் மிகவும் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன. இந்த ஆண்டில் சுந்தர். சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் திரைக்கு வந்தது . இதனைத்தொடர்ந்து […]
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துவந்த ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் சசிகுமார், மிருணாளினி ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கியுள்ள படம் ‘எம்ஜிஆர் மகன்’. இதில் சமுத்திரகனி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் பாடகர் அந்தோனிதாசன் இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த […]
தணிக்கையின் போது நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் காணொளியாக வெளியிட்டது ‘கோமாளி’ படத்தின் படக்குழு. அறிமுக இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது “கோமாளி” திரைப்படம். இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது எழுந்த சர்ச்சையின் காரணமாக சில காட்சிகள் மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தில் தனிக்கைக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட காட்சிகளின் மாற்றங்கள் அனைத்தையும் காணொளியாக படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
நடிகை வரலட்சுமி மற்றும் நடிகர் விமல் இணைந்து நடித்துள்ள கன்னிராசி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘கன்னிராசி’. ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் எஸ்.முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வரும் 13-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘கன்னிராசி’ திரைப்படம் நகைச்சுவை நிறைந்ததாகவும், காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். மேலும் இன்று வெளியாகவிருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் […]
நகைச்சுவை நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் யோகிபாபுவின் புதிய திரைப்படத்திற்கு ‘ட்ரிப்’ என பெயர் சூட்டியுள்ளனர். நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவின் நடிப்பில் உருவாகவுள்ள புது திரைப்படத்தின் தலைப்பு நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கவுள்ள இந்த புதிய திரைப்படத்திற்கு ‘ட்ரிப்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இந்த புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் யோகிபாபுவுடன் கருணாகரன், சுனைனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“கோமாளி” படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கவுள்ளார். இயக்குனர் அகமத் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் இப்புதிய படத்தில் நடிகை டாப்ஸி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்த புதிய படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் பாலக்கோட் மற்றும் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் திரைப்படமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்புதிய திரைப்படத்தை பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தயாரிக்கவுள்ளார். இவ்வருட இறுதியில் இத்திரைப்படத்தை தொடங்கவுள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் விமானப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கான தேர்வும் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. கன்னட உலகில் முக்கிய கதாநாயகனாக வலம் வரும் நடிகர் கிச்சா சுதீப், ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பயில்வான்‘ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஒரு மல்யுத்த […]
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள “கோமாளி” திரைப்படம் இன்று முதல் திரைக்கு வந்துள்ளது. அடங்க மறு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படம் இன்று முதல் வெளியாகிறது. கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது ‘நண்பா நண்பா’ என்ற […]