எனது கடைசி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.. நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பாராட்டு விழா தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிஎஸ்கே கேப்டன் தோனி, ராபின் உத்தப்பா, ஷர்துல் தாகூர் உள்ளிட்ட வீரர்கள் […]
Tag: #@msdhoni
இந்திய அணியின் ஆலோசகராக நியமனம் தோனி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி (இன்று) தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்திய அணி 18ஆம் தேதி (நாளை) நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியையும், 20ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது.. அதனை தொடர்ந்து 24ஆம் தேதி முக்கிய […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திரசிங் தோனி பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு நடனமாடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் தோனி தனது மனைவி சாக்ஷி, மகள் ஜீவாவுடன் நடனமாடும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது…. கண்டிப்பாக ரசிப்பதோடு, […]
சத்தமுமின்றி அமைதியாக தனது ஓய்வு முடிவை எம்.எஸ் தோனி அறிவிப்பார் என இந்திய முன்னாள் கிரிக்கெட் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் தான் ‘தல’ என்று அழைக்கப்படும் எம்.எஸ் தோனி. இவர் கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் ஆடினார். ஆனால், அதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடமலேயே இருந்து வருகிறார். இந்த இடைவெளியில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் (பிசிசிஐ) ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரை […]
2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை நேற்று வெளியான நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் பயிற்சியை தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதவுள்ளன. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி உலகக்கோப்பைத் தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் ஆடாமல் ஓய்வில் உள்ளார். தோனியின் நிலை குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, அணியின் […]
மத்திய பிரேசத்தில் உள்ள புலிகள் காப்பகத்திற்குச் சென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, புலி உறுமும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த தோனி, இந்திய அணிக்காக களமிறங்கி 6 மாதங்கள் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவருகிறார். பலரும் தோனியின் எதிர்காலம் குறித்து பலவிதமான கருத்துகளை தெரிவித்துவந்தாலும், அவர் தனது […]
மாலத்தீவில் தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஆர்.பி.சிங்கிற்கு பானிப்பூரி பரிமாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த தோனி, இந்திய அணிக்காக களமிறங்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவருகிறார். இதனால், இந்திய அணி விளையாடும் போட்டிகளில் மிஸ் யூ தோனி என்ற பேனருடன் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி மாலத்தீவில் தன் சக நண்பர்களுடன் வாலிபால் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. நியூசிலாந்து மண்ணில் இந்தியா வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும். இப்படி கோலி தலைமையிலான இந்திய அணி […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 2021ஆம் ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிச்சயம் விளையாடுவார் என்று அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் உறுதியளித்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியிலிருந்து விலகியிருந்தாலும் அவர் குறித்து செய்திகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் பிசிசிஐ அண்மையில் வெளியிட்ட வீரர்கள் ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை […]
இந்திய அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனியைப் போல் ஆட்டங்களை வெற்றிகரமாக முடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன் முதல் போட்டி வரும் 14ஆம் தேதி மும்பை வான்கடேவில் தொடங்கவுள்ளது. இதற்காக அந்த அணியின் துணை கேப்டன் அலெக்ஸ் கேரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஒருநாள் போட்டிகளை வெற்றிகரமாக முடிப்பதற்கு எம்.எஸ்.தோனியைப் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும். […]
உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆனபோது, ”நான் ஏன் டைவ் அடிக்கவில்லை” என தன்னை கேட்டுக்கொண்டதாக தோனி தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. அதன் கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி ரன் அவுட்டாகியது ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த ரன் அவுட் இந்தியாவின் உலகக்கோப்பைக் கனவையும் சுக்குநூறாக்கியது. அதையடுத்து தோனியும் […]
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியை மரியாதை நிமித்தமாக சந்தித்து நட்பு பாராட்டினார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘தனாஜி தி அன்சங் வாரியர்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அஜய் தேவ்கன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து நட்பு பாராட்டினார். இந்தச் சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள நடிகர் அஜய் தேவ்கன் கூடவே, ‘கிரிக்கெட், திரைப்படங்கள் நம் நாட்டின் […]
சர்வதேச கிரிகெட் கவுன்சில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பத்தாண்டுகளில் மிகச்சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை எழுப்பியதற்கு, அதிகபடியான ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரையே கூறியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த பத்தாண்டுகளில் உலகின் தலைசிறந்த கேப்டன் யார்? என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் வைத்தது. அதற்கு சற்றும் தாமதிக்காமல் பல ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் […]
இந்திய வீரரான ரிஷப் பண்ட், தோனியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்குப் பின் எந்த ஒரு போட்டியிலும் விளையாடாமல் உள்ளார். இதனால், அவரது ஓய்வுக் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்துவந்த நிலையில், இது குறித்து தன்னிடம் அடுத்த ஆண்டு ஜனவரி வரை கேட்க வேண்டாம் என தோனி தெரிவித்திருந்தார். அதேசமயம், தோனிக்குப் பதிலாக இந்திய அணியில் இளம் விக்கெட் […]
2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை விளையாடிய தலைசிறந்த வீரர்களை வைத்து ஆஸ்திரேலியா உருவாக்கும் ஒருநாள் அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். 2019-ஆம் ஆண்டு முடிந்து 2020-ஆம் ஆண்டு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், 2010 முதல் 2019 வரை 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அதன் வாரியம் அறிவித்துள்ளது. இதில் குறிபிடத்தக்க விஷயமாக […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வயது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சர்ஃபராஸ் அகமதுவின் மனைவி கேள்வியெழுப்பியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து சர்ஃபராஸ் அகமதுவை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கியது. அவருக்குப் பதிலாக டெஸ்ட் அணிக்கு அசார் அலியும், டி20 அணிக்கு பாபர் அசாமும் கேப்டனாக செயல்படுவார்கள் என்று அதிரடியாக அறிவித்தது.சமீபத்தில் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடியது. இதில் […]
இந்திய அணித்தலைவராக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்யவுள்ளார் விராட் கோலி. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆன்டிகுவா நோர்த்சவுண்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் விராட் கோலி தோனியின் சாதனையை சமன் செய்வார். இந்திய டெஸ்ட் அணிக்கு தலைவராக விராட் கோஹ்லி கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது. இதுவரை கோஹ்லியின் […]
ராணுவத்தில் கௌரவ பதவி வகிக்கும் மகேந்திர சிங் தோனி லடாக்கில் ராணுவ வீரர்களுடன் நேரத்தை செலவிட்டார். 38 வயதான கிரிக்கெட் வீரர் தோனிக்கு ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டு உள்ளது. பேராஷூட் ரெஜிமென்ட் படைப்பிரிவில் சேர்ந்து தோணி பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் ஸ்ரீ நகர் அருகே உள்ள முக்கிய பகுதிகளில் காவல் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் தோணி தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் ராணுவ சீருடையில் […]
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் காலிறுதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் தோல்வியுற்று வெளியேறியது . இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர் . இதன்பின் இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கீப்பர் வாய்ப்பு இளம் வீரர் ரிஷப் பண்ட்கு கிடைத்தது. இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு […]
தோனிக்கு யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கத் தேவையில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் தெரிவித்துள்ளார் உலகக் கோப்பை தொடருடன் டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தோனி ஓய்வை அறிவிக்கவில்லை. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான தொடரில் இருந்து தோனி விலகியுள்ளார். காரணம் அவர் பாராமிலிட்டரி பிரிவில்பணி புரிவதற்கு விரும்பியதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து […]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்க மாட்டார் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-நியூசிலாந்து ஆணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணியின் தோல்வியை விட தோனியின் ரன் அவுட் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்விற்கு பின் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் செய்தி குறிப்பில் கூறியதாவது, இந்திய-மேற்கிந்திய […]
அருமையான நண்பர் தல தோனிக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தோனியின் பிறந்த நாளுக்காக ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் […]
நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய அண்ணன் என்று தல தோனியை கேப்டன் விராட் கோலி புகழ்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தோனியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு 6 ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி வாழ்த்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த […]
இந்திய கிரிக்கெட் அணியின் தோனி இன்று தனது 38_ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் உலகளவில் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகின்றது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி உலகளவில் தன்னை மிஞ்ச எவராலும் முடியாது என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்ட தோனி. தனது தலைமையின் கீழ் இந்திய அணிக்கு 50 ஓவர் உலக கோப்பை , T 20 உலக கோப்பை மற்றும் மினி உலக கோப்பை என அடுத்தடுத்து 3 ICC கோப்பையை பெற்றுக் […]
நடப்பு உலக கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியை அசைக்க முடியாத இடத்துக்கு கொண்டு சென்றவர் தோனி. இந்திய அணியை 50 ஓவர் உலக கோப்பை , T 20 உலக கோப்பை மற்றும் மினி உலக கோப்பை என 3 ICC கோப்பையை இந்திய அணிக்கு இவரின் தலைமையில் கிடைத்தது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி உலகளவில் தன்னை மிஞ்ச எவராலும் முடியாது […]
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் தோனி நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்கு சவ்ரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 25 வது லீக் போட்டியில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது. இப்போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்தது. இதையடுத்து சென்னை […]
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் தோனி நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது . இப்போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜாஸ் பட்லர் […]
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தல தோனியை “மான் கட்” முறையில் ஆட்டமிழக்க செய்ய முயற்சி செய்து குருனால் பாண்டியா ஏமாற்றமடைந்துள்ளார். 15-ஆவது ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடியது . இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் […]
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி கேப்டன் ரசிகருடன் ஓடிப்பிடித்து விளையாடினார். கடந்த சில வாரத்திற்கு முன்பு தான் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போது டோனியை தொட முயன்ற போது ஓட்டம் பிடித்து ஆட்டம் காட்டினார் இறுதியில் அவர் ஆசையை நிறைவேற்றினார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதற்காக சென்னை அணியின் கேப்டன் டோனி தலைமையில் சேப்பாக்கம் […]