ஈரோட்டில் கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை அடுத்த கே.எஸ் நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனை கண்ட ஊர்மக்கள் உடனடியாக ஈரோடு மாவட்ட தலைமை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட போது, தலையின் பின்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் கத்திக்குத்து வாங்கிய வாலிபர் ரத்த […]
Tag: # Murder
திருச்சியில் ஒரே நாளில் இரண்டு கொலைகள் அடுத்தடுத்து நடந்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சியில் பாரதிய ஜனதா பிரமுகர் விஜயரகு நேற்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் நேற்று இரவு திருச்சி மரக்கடை அருகே மாநகராட்சி கழிவறையில் இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்தஇளைஞர் தில்லை நகரைச் சேர்ந்த முகமது இசாக் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக பாலக்கரை […]
திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என்று பாஜகவினர் வற்புறுத்தியுள்ளனர் அப்போது ஏற்பட்ட தகராறில் கடை ஊழியர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காந்தி மார்க்கெட் அருகே உள்ள உப்புபாறை பகுதியை சேர்ந்தவர் விஜயரகு. பாலகரை மண்டல பாஜக செயலாளராக இருந்து வந்த இவர் மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியையும் செய்து வந்துள்ளார். இன்று அதிகாலை மார்க்கெட் நுழைவாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த விஜயரகுவை அடையாளம் […]
விழுப்புரத்தில் மஞ்சள்காமாலை நோயுடன் பிறந்த பச்சிளம் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற பெண்ணை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் காவேரி பாகத்தை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக வாலாஜாபாத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. பின்னர் கணவர் காச நோயாளி என கூறி அவரைப் பிரிந்த மீனாட்சி சென்னையில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அங்கு ஒருவருடன் ஏற்பட்ட உறவில் கர்ப்பமுற்ற மீனாட்சி ஒரு வாரத்திற்கு முன்பாக விழுப்புரம் அருகே […]
நாகையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவரது நண்பரே அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது. கடந்த 14ம் தேதி நாகை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த மணிமாறன். அவரது நண்பரான விஸ்வநாதனுடன் மணிமாறன் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை மணிமாரணின் மனைவி கண்டித்துள்ளார். பின்னர் விடியற்காலை எழுந்து பார்த்தபோது மரத்தில் தூக்கில் தொங்கியபடி மணிமாறன் இறந்து கிடந்தார். இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]
ராணிப்பேட்டை அருகே குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதலில் மாமனாரை கொன்ற மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அலமேலு. இவர் அதே பகுதியில் உறவினர்களால் சீட்டு கம்பெனி ஒன்றில் பணம் போட்டு பின் ஏலத்தில் சீட்டு பணம் போக மீத தொகையை எடுத்துள்ளார். இதை அறிந்த அவரது கணவர் செலவுக்கு பணம் தருமாறு மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் தகராறு முற்றவே […]
தேச துரோகிகளையும், பாகிஸ்தான் ஆதரவாளர்களையும் நம் நாட்டில் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக் தெரிவித்துள்ளார். சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள், நாடு முழுவதும் இன்று கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக் பெங்களூருவிலுள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டத்தின் முன் அனைவரும் சமம். திருடன் எப்போதும் திருடன்தான். தேசத்துக்கு எதிராக […]
திருவண்ணாமலையில் மாணவன் ஒருவன் மர்மமாக இறந்தது கிடந்ததையடுத்து அது கொலையா?விபத்தா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகன் கார்த்திக். இவர் அதே பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய உயர் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 20 ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பிய கார்த்தி சைக்கிளில் வெளியில் […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரண்டாவது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை அடுத்த ஒளிபட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 18ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இறந்தவர், ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணை 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், திருமணத்திற்கு மறுத்த கிருஷ்ணவேணி அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மது போதையில் தாயாரிடம் தகராறு செய்த தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைடுத்த கல்லுகடை வீட்டைச் சேர்ந்தவர் ரவி. இவர் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் மனைவி வேலை செய்யும் இடத்திற்கே சென்று பிரச்சினை செய்துள்ளார். இது தொடர்பாக இவருக்கும் அவரது இளைய மகன் சுதாகரன் ஆகியோருக்கும் இடையே […]
சென்னையில் AC மெக்கானிக் ஆட்டோவில் கடத்தி சென்று கொல்லப்பட்ட சம்பவத்திற்க்கான cctv காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சென்னை ஐஸ்ஹவுஸ் சாலையில் ராம்குமார் சென்ற நபரை ஆட்டோவில் மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்த நிலையில், அவரை ஆட்டோவில் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்ட ராஜ்குமார் கோவளத்தில் உள்ள கல் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுவரை 5 பேரை கைது செய்துள்ள காவல்துறை அதிகாரிகள் முக்கிய குற்றவாளிகள் 6 பேரை தேடி வருகின்றனர். இந்த […]
தேனியில் சொத்துக்காக தம்பியை கொன்றவருக்கு 7 ஆண்டு சிறை மற்றும் கூடுதலாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சிவாஜி நகரில் வசித்து வருபவர் மாயாண்டி. இவரது மனைவி ராஜாமணி. இவர்கள் இருவருக்கும் 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் பாண்டிய ராஜன் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் தனபாண்டி மூன்றாவது மகன் சுந்தரபாண்டி. கடந்த 2016-ம் ஆண்டு மூத்த மகன் பாண்டியராஜனுக்கும் இரண்டாவது மகன் தன பாண்டியனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. […]
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஆண்டிபட்டியை சேர்ந்த பூபதி என்ற இளைஞன் தந்தை பழனிசாமி ,மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். இதற்கிடையே தனிக்குடித்தனம் செல்லும் படி தந்தை பழனிசாமி தொடர்ந்து வற்புறுத்தியதால், ஆறு மாதங்களுக்கு முன்பு பூபதி குடும்பத்துடன் தனிக்குடித்தனம் சென்றுள்ளார். அதன்பின்னர் சொத்தை பிரித்து தரக்கோரி பூபதி கூறியதால் தந்தை மகனுக்கு இடையே பிரச்சினை நீடித்து வந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட […]
தர்மபுரியில் மகன் மகளின் உதவியுடன் மனைவியே கணவன் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவர் தர்மபுரியை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. நாள்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவி மகன் மகளுடன் போதையில் தங்கராசு சண்டையிடுவது வழக்கம். இதையடுத்து சம்பவத்தன்று மது அருந்திவிட்டு தனது மனைவி, மகன் மகளுடன் சண்டையிட்டு உள்ளார் தங்கராசு. இதையடுத்து […]
உசிலம்பட்டி அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). இவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் உத்தப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த முத்தையா (47) என்பவர் உள்ளாட்சித் தேர்தலில் பால்ராஜ்ஜுக்கு எதிராக சில மறைமுக செயல்களில் ஈடுபட்டதாக கூறி முத்தையா தரப்பினர் சிலர் தகராறில் ஈடுபட்டதாகக் […]
மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக மச்சானை, அவரின் மாமாவே வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவருக்கும், அவரது அக்கா கணவர் முனுசாமி என்பவருக்கும், தொழில் நிமித்தம் காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதனால், வெளியூருக்குச் சென்று வேலைபார்த்துவந்த மணிகண்டன், பொங்கலை முன்னிட்டு மயிலாடுதுறைக்கு வந்துள்ளார். இந்நிலையில், மணிகண்டன் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த முனுசாமி, அவருடைய நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு […]
புதுக்கோட்டையில் மனைவியை நண்பனுடன் சேர்ந்து கொன்று 3 வருடம் கணவன் நாடகமாடி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்தவர் சரண்யா. இவரும் அதே பகுதியை அடுத்த பள்ளத்திவிடுதியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞரும் கடந்த 2005 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தை மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் ஆகும். இவ்வாறு இருக்கையில் […]
நாமக்கல்லில் உல்லாசம் அனுபவித்து, பணம் பறித்துவிட்டு காதலியை காதலனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்த ஆண்டவலசு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் ஜோதிடர் ஆவார் இவரது மகள் வெள்ளையம்மாள். இவரது மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான 6 மாதங்களிலேயே கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் […]
SI வில்சன் கொலை வழக்கில் தமிழக – கேரள நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நான்கு பேரை நுண்ணறிவுப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 8ஆம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தௌபீக், முகமது சமீம் ஆகியோர் இந்தக் கொலையில் தொடர்புடையதாக போலீசார் அறிவித்துள்ளனர். தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் பத்து தனிப்படை […]
திண்டுக்கல் அருகே பெண் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட மதுரையை அடுத்த நிலம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் திவ்யபாரதி, கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவனைப் பிரிந்த இவர் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது சடலம் புதூர் அருகே உள்ள காட்டு பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்துள்ளது. தகவல் அறிந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
ஈரோட்டில் சொந்த பாட்டியின் தலையில் பேரனே டிவியை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை அடுத்த விவேகானந்த நகரில் வசித்து வருபவர் ஜோகரம்மாள். இவரது மகன் சாதிக் பாஷா பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். சாதிக் பாட்ஷாவின் மகன் பீர்முகமது சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாதிக் பாட்சாவின் மனைவி இறந்துவிட மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதையடுத்து பீர்முகமதுக்கு மது அருந்தும் பழக்கம் […]
செங்கல்பட்டில் சிவாலயத்திலிருந்து வெளியே வந்த 9 ஆம் வகுப்பு மாணவனை மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் உஷா தம்பதியினர். இவரது மகன் புருஷோத்தமன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவர்களுக்கு சொந்த ஊர் விழுப்புரம் ஆக இருக்கும் பட்சத்தில் இங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். உஷா அதே பகுதியில் […]
பெங்களூரு: பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை சிறப்பு புலனாய்வு பிரிவினர் ஜார்கண்டில் கைது செய்தனர். கடந்த 2017 செப்.5 ஆம் தேதி, பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ், பெங்களுரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டின் வாசலில் அடையாளம் தெரியாக நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவுனர், கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட 16 நபர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும், கொலையில் தொடர்புடைய […]
கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு செக்போஸ்டில் காவலுக்கு இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதில் சம்பவ இடத்திலேயே வில்சன் உயிரிழந்தார். வில்சனை சுட்டுக்கொன்றுவிட்டு ஸ்கார்பியோ காரில் தப்பியோடிய நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
பாகிஸ்தானிலுள்ள சீக்கிய குருத்வாரா மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் நடந்த சுவடு மறைவதற்குள் சீக்கிய இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஆகவே அனைத்துக் கட்சி சீக்கிய குழுவினரை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் எனக் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங் பாஜ்வா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற (மாநிலங்களவை) உறுப்பினரான பிரதாப் சிங் பாஜ்வா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானில் கடந்த 70 ஆண்டுகளாக சிறுபான்மையினரின் நிலை பரிதாபமாக உள்ளது. குருநானக் […]
செங்கல்பட்டில் பேருந்திற்காக காத்திருந்த பயணியை மர்மநபர்கள் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள சிவானந்தா குருகுலம் எதிரில் அமைந்திருக்கக் கூடிய பேருந்து நிலையத்தில் அதிகாலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உடலை […]
கன்னியகுமாரியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பில்டிங் காண்ட்ராக்டரை பெண்ணின் காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை அடுத்த தெரிசனங்கோப்பு நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவர் பில்டிங் கான்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் பெண் ஒருவரை அம்பலத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவானந்த் என்பவர் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்ததோடு தேவானந்தாவை பலமுறை கண்டித்தும் உள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் பகை ஏற்பட்டது. […]
கடலூரில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட தகராறில் அதிமுக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை அடுத்த எத்தனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காந்தாராவ். இவர் நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் நேற்றையதினம் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் அருள் காந்தாராவின் வீட்டிலுள்ள மேஜையை அவரது அனுமதி இன்றி எடுத்து வந்து கேக் வெட்டியதோடு […]
ஹரியானா மாநிலத்தில் காவல்துறை அதிகாரியான தனது கணவரை கொலை செய்து விட்டதாகவும் அதற்காக தம்மை தூக்கிலிட வேண்டும் என்று கோரியும் அமைச்சரிடம் பெண் ஒருவர் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜி மக்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்த பொழுது மறைந்த காவல்துறை உதவி ஆய்வாளரின் மனைவி சுனில்குமார் மனு அளித்தார். அதில் அவர் மதுவுக்கு அடிமையான தனது கணவர் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இரவு வழக்கம் போல் […]
தேர்தல் முன் விரோதம் காரணமாக அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல முயன்ற கூலிப்படையினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (47). இவர் அதிமுக ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் முன்னாள் ஒன்றியச் செயலராக இருந்தவருக்கும் கட்சி பதவி, குடும்ப பிரச்னை போன்றவற்றால் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அசோக்குமார் சக்கரைக் கோட்டையில் 9ஆவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே […]
சென்னை மதுரவாயல் பகுதியில் மணி பர்சை திருடியதால் வந்த தகராறு காரணமாக சொந்த நண்பனையே தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவள்ளூர் பகுதியை அடுத்த வேப்பம்பட்டை நகரை சேர்ந்தவர் முரளி. இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த சிம்சன் சுப்பிரமணியன் அரவிந்த் ஆகிய மூன்று பேருடன் மதுரவாயல் பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இவர்கள் நான்கு பேரும் கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். […]
கோவையில் வெறும் வாட்டசாப் வதத்ந்தி ஒருவரின் உயிரையே எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் அருகே கடந்த மூன்றாம் தேதி காயங்களுடன் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் என்பது தெரியவந்தது. வாட்ஸாப்ப் வதந்தி : சண்முகத்தின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு […]
மொக்க காரணத்திற்க்காக மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் ஆன ஜெயராஜும் அவரது மனைவி 24 வயதான இலக்கியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இலக்கியா வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒன்றாம் தேதி அன்று வீட்டில் ஜெயராஜன் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து பார்த்த பொழுது இலக்கியா தூக்கில் பிணமாக தொங்கினார். தன்னுடன் சண்டை […]
தனியார் நிறுவன உரிமையாளர் கொலை வழக்கில் வடமாநில தொழிலாளர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(27). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சான் பிளாஸ்டிங் என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் நேற்று நிறுவனத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது தந்தை ஆனந்தன், பிரபாகரனை தேடி நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது நிறுவனம் பூட்டியிருந்தது. இதில் சந்தேகமடைந்த அவர், […]
வேலூரில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததன் காரணமாக தாயே பெற்ற குழந்தையை கொடூரமாக மூச்சு திணற கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி ஓராண்டு முடிந்த நிலையில், ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவரது குழந்தை பெயர் மௌனிகா. இவரது கணவர் நேற்றைய தினம் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் வீட்டில் பவித்ரா அவரது குழந்தையுடன் வீட்டு வேலை […]
பிரபல தொழிலதிபரை கொல்லும் முயற்சியில் பெட்ரோல் குண்டு வீசியதில் தீக்காயமடைந்த தொழிலதிபரின் மனைவி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தபாபு. இவரது மனைவி நீலிமா. இவர் அப்பகுதியில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவியும் கடந்த 11ஆம் தேதி வழக்கம்போல் தொழிற்சாலைக்கு காரில் சென்றுள்ளனர். ஆனால் திரும்பும்பொழுது வேலை இருந்ததால் ஆனந்தபாபு மனைவியை மட்டும் வீட்டிற்கு போகுமாறு […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்த கொடியும் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது முதல் மனைவி இறந்த உடன் இரண்டாவதாக வண்ணமயில் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தை முதல் மனைவி மகளுக்கு சுப்பிரமணி எழுதி வைத்தால் இரண்டாவது மனைவி […]
அண்ணன் , தம்பி , சித்தப்பா என்று சொல்லி பல ஆண்களுடன் நெருக்கம் வைத்திருந்த பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கவிதா. 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பெருமாள், கவிதாவை விவாகரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. கணவனை பிரிந்து வாழ்ந்துவந்த கவிதாவிற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த எட்வின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கவிதாவை தூத்துக்குடிக்கு அழைத்துவந்த எட்வின், குமரன் நகரில் வீடு பார்த்து […]
காரில் சென்றவர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் அன்பு ரஜினி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று இரவு இவர் காரில் முத்தியால்பேட்டை சாலை தெருவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரை வழிமறித்து திடீரென காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். பின்னர் அன்பு ரஜினியை காரிலிருந்து வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். […]
புதுச்சேரியில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஒருவர் வெடிகுண்டு வீசியும் தலை துண்டிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். புதுசேரி சுப்பையா நகரை சேர்ந்த பாண்டியன் என்கின்ற ரவுடி 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர். நேற்று மாலை பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அவரை குறுகலான சந்தில் வழி மறித்த மர்ம கும்பல் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் தலையை துண்டித்தும் கொலை செய்து விட்டு […]
திருச்சி தனியார் வேளாண் கல்லூரி விடுதி காப்பாளரை மாணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மகன் அப்துல் ஹக்கீம்(20). இவர் துறையூர்- முசிறி சாலையில் உள்ள கண்ணனூர் பகுதியில் இயங்கும் இமயம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் அப்துல் ஹக்கீம், கடந்த சில நாள்களாக கல்லூரி, விடுதிக்கு வராமல் இருந்துள்ளார். […]
ஈரோடு பீரோ தயாரிக்கும் ஆலையில் கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் வரதராஜன் தெருவில் தங்கம் என்பவருக்கு சொந்தமான பீரோ தயாரிக்கும் ஆலையில் பணிபுரிந்த ஈரோட்டைச் சேர்ந்த தொழிலாளி பூகேஷ் ஆலையின் அறை ஒன்றில் கழுத்தறுபட்டு இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து வந்த சூரம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை பூகேஷை […]
காஞ்சிபுரத்தில் தான் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை நண்பன் எடுத்து குடித்ததால் ஆத்திரம் தாங்காமல் நண்பனின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த நந்திவரம் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் அதே நந்திவரம் பகுதி எழில் அவன்யூ தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் நீண்ட கால நட்பு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் சீனிவாசன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து மது அருந்துவதை சூர்யா வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் நேற்றைய […]
குடிக்க பணம் தராததால் சொந்த தந்தையை மகனே தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ரங்கராஜன் நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவரது மகன் சசிகுமார் குடி போதை பழக்கம் உள்ளவர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து குடிபோதை முற்றிய நிலையில் சில மாதங்களாகவே […]
சென்னையில் சாதி மாற்றி திருமணம் செய்ததால் இளைஞர் துடி துடிக்க கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய மகாபலிபுரத்தை அடுத்த கரப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் முரளி. இவர் பணி முடித்து விட்டு வருகையில் தேனீர் கடை ஒன்றில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட மர்ம கும்பல் தப்பி ஓடியது. படுகாயமடைந்த முரளி […]
சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு முகம் சிதைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை அடுத்த கோரிகாடு என்னும் கிராமத்தில் புதர் அருகே இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். இரவோடு இரவாக கொலை செய்யப்பட்ட அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. இதனை கண்ட ஊர்மக்கள் பதற்றத்துடன் சேலம் காவல்துறையினருக்கு தகவல் […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே திருமண வரவேற்பு வீட்டில் குடி போதையில் தகராறு செய்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ராணி மகாராஜா புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ராஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் குடி போதையில் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து குமாரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் […]
அமெரிக்காவில் வீட்டில் வளர்த்த மலைப்பாம்பு கழுத்தை இறுக்கி அதில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்கா இண்டியான பகுதியைச் சேர்ந்த லாரா என்ற இளம்பெண் தனது வீட்டில் 140 க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்த்து வந்தார். அதிலும் செல்லப்பிள்ளையாக மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார் லாரா. இந்நிலையில் கடந்த வாரம் அவரது வீடு பூட்டப்பட்டு உள்ளே துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டை உடைத்து […]
ரவுடியை மூன்று பேர் கொண்ட கும்பல் சாலையின் நடுவே ஓட ஓட துரத்தி சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரவுடி ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலை நடந்தது எப்படி? ரவுடி மஞ்சுநாத் அவரது காதலியுடன் மகாதேவாபுரம் அருகே தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மஞ்சுநாத்தை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அலறியடித்து […]
இந்து சமாஜ் இயக்கத்தின் தலைவர் கமலேஷ் திவாரி உடலில் 15 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமேலேஷ் திவாரி, கடந்த 18ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நாகா பகுதியில் மர்மநபர்களால் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.அவரின் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டது. அவரின் எலும்புகள் மற்றும் மார்புகளிலும் கத்தி இறங்கியிருந்தது.இந்த கொடூரக் கொலையில் ஈடுபட்டதாக ஹூசேன் ஷாஜீர்ஹீசேன் சேஷ் (34), மொய்னுதீன் […]