மியான்மரில் இருந்து காவல்துறையினர் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது.இந்த தாக்குதலை கண்டித்து அந்த நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு காவல்துறையினர் 3 பேர் இந்திய மாநிலமான மிசோரமில் எல்லையை தாண்டி வந்துள்ளனர். இதனை அறிந்த மாநில காவல்துறையினர் அவர்களை இரு நாட்டு எல்லையில் இருந்து சற்று […]
Tag: Myanmar
மியான்மர் நாட்டில் சுரங்க விபத்தில் பலியான தொழிலாளர்கள் எண்ணிக்கை 162ஆக அதிகரித்துள்ளது. மியான்மர் நாட்டில் பச்சை மரகத கல்லை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நடைபெற்ற விபத்தில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் தொழிலாளாளர்கள் சிக்கினர். முதலில் இந்த இடிபாடுகளில் சிக்கிய 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. இருந்தும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருந்ததால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்து வந்தது. இதையடுத்து மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி ஈடுபட்டு வந்தனர். மீட்கப்பட்ட பல […]
மியான்மரில் புரட்சியாளர்களால் கடத்தப்பட்ட இந்தியத் தொழிலாளி உயிரிழந்தார். மியான்மர் நாட்டில் புரட்சிப்படையினரான அரக்கன் ராணுவத்துக்கும் அரசுக்கும் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் ஐந்து இந்திய கட்டட தொழிலாளர்கள், ஒரு மியான்மர் எம்.பி. உள்பட 10 பேர் கடத்தப்பட்டனர்.இந்நிலையில் நான்கு இந்தியர்கள் உள்பட எட்டு பேரை புரட்சிப் படையினர் விடுவித்தனர். இதனால் கடத்தப்பட்ட ஒரு இந்தியர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. இத்தகவலை அரக்கன் ராணுவம் உறுதி செய்தது. தங்கள் குறி அப்பாவி மக்கள் இல்லை என்றும் மியான்மர் […]
மியான்மரில் 89 பேரை ஏற்றிச்சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மியான்மர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான யுபி-103 விமானத்தில் 7 பணியாளர்கள் உள்பட 89 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் அந்த நாட்டு சுற்றுலா நகரமான மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு தரையிறங்க முயன்றது. அப்போது அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்துள்ள நிலையில், உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி சாதுரியமாக […]