மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிளுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் அமைந்துள்ளது. பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது.கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். மேலும் அருகில் ஆடை, ஆபரண கடைகள், மால் மற்றும் ஏரளமான ஹோட்டல்கள் இருப்பதால் இங்கு ஏராளமான பக்தர்கள் மட்டுமின்று சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருவார்கள். சமீபத்தில் […]
Tag: #Mylapore
மயிலாப்பூரில் பிச்சைக்காரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மூன்று பிச்சைக்காரர்கள் சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பிளாட்பாரத்தில் ஐந்து பேர் பிச்சை எடுத்துவருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே பிச்சை எடுக்கும் நான்கு பேர்களுக்குள் மது குடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மூன்று பேர் சேர்ந்து ஒருவரை அடித்துள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் நேற்று அதிகாலை […]
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சைவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்துமூவர் வீதியுலா வெகுவிமர்சையாக நடைபெற்றது. சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம் மற்றும் சைவ திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இவ்விழாவின் எட்டாம் நாளான நேற்று அறுபத்து மூவர் வீதியுலா நடைபெற்றது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்டோர் முத்துப் பல்லக்கிலும் மற்ற 63 நாயன்மார்கள் கேடயத்திலும் வீதியுலா வந்தனர். இந்த விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த […]