Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாழ்க்கை படத்தை கற்க நாகை மாவட்ட பள்ளி மாணவர்கள் முதல் அடி வைத்துள்ளனர்.

நாகை அருகே மீனவர்களின் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ளும் முயற்சியாக நடுக்கடலுக்கு மாணவ-மாணவிகள் படகில் சென்றனர். பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் வெளி உலகில் நடக்கும் சம்பவங்களை அனுபவரீதியாக தெரிந்து கொள்வதற்காக பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியை தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக மீனவர்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்வதற்காக நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மற்றும் கலசம் பாடி ஆகியோர் ஊர்களிலுள்ள இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கடலுக்குள் சென்றனர். நடுக்கடலுக்கு சென்ற அவர்களுக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை மாவட்ட வனவிலங்கு சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு…!!

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் டேங்கர் லாரி மூலம்  தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் குதிரைகள்,மான்கள், குரங்கு உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. அப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் அங்குள்ள நீர்நிலைகள் தற்போது வறட்சி அடைந்து காணப்படுகின்றது. . இதனால் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகள்  டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை வரவழைத்து அங்குள்ள தொட்டிகளில் நிரம்புகின்றனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை மாவட்டம் எலிகளால் நாசமாகும் பருத்தி சாகுபடி…விவசாயிகள் வேதனை…!!

இருமருகல் அருகில் உள்ள கிராமங்களில் எலிகளின் தொல்லையால்  600 ஏக்கர் அளவில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை கடைமடை சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையால்  குறுவை நெல் சாகுபடி கடந்த ஏழு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியில் மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் குறைந்த நீரில் பயிரிடக்கூடிய பருத்தி சாகுபாட்டில்  ஈடுபட்டனர் .ஆனால் எலிகளால் சுமார் 600 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பருத்தி அனைத்தும் நாசமாகி உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நெல் சாகுபடியை அடுத்து பயிரிடப்படும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெயிலை தணிக்க நாகை மாவட்டத்தில் தர்பூசணி அறுவடை…!!

வேதாரண்யம் பகுதியில் தர்பூசணி அறுவடை அமோகமாக நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் அருகே செம்போடை ,புஷ்பவனம், தேத்தாகுளம் ,கத்தரிப்புலம், பெரியகுத்தகை ஆகிய பகுதியில் குறைந்த தண்ணீர் மூலம்  அதிக விளைச்சல் பெறக்கூடிய தர்பூசணிகள் ஏராளமாக  பயிரிடப்பட்டுள்ளது. இப்போது கோடைகாலம் என்பதால் தர்பூசணிக்கு எதிர்பார்ப்பு  இருப்பதால் விவசாயிகள் அனைவரும் தர்பூசணி அறுவடையில் ஈஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தர்பூசணி கிலோ ரூபாய் 15க்கு விற்கப்பட்டு வருகிறது. இங்கு விளையும் தர்பூசணிகலில் அதிக  நீர்ச்சத்து இருப்பதால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தணிக்க இந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பராமரிக்கப்படாத ஆற்றினை தூர்வார வேண்டும்” நாகை பொதுமக்கள் கோரிக்கை …!!

கீழ்வேளூர் பகுதி தேவநதி ஆற்றை முறையாக பராமரித்து  தூர்வார வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் கீழ்வேளூர் பகுதியில், கடுவையாறு, ஓடம்போக்கியாறு, வெட்டாறு,  பாண்டவையாறு ,தேவநதி ஆறு ஆகிய ஆறுகளின் மூலம் ஆயிரக்கணக்கான எக்டேர் நிலங்கள் நீர் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த ஆறுகள் மூலம் காவிரி நீர் திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் மூலம், அகரகடம்பனூர்,  கீழ்வேளூர்,ஆழியூர், சிக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீர் செல்கிறது. இந்த நிலையில் கீழ்வேளூர் பகுதியில் உள்ள […]

Categories

Tech |