பொய் வழக்குப்பதிவு செய்ததாகக் கூறி காவல் துறையை கண்டித்து, வழக்கறிஞர்கள் 160 பேர் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் வினாயக், விஜய கமலன் ஆகிய இருவர் மீது நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் இட பிரச்னை ஒன்றில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று நாகப்பட்டினம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் 160 பேர் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து காவல் துறைக்கு எதிர்ப்பை […]
Tag: Nagapattinam district
நாகப்பட்டினம் அருகே பஞ்சலோக அம்மன் சிலை உள்பட 9 சிலை கடத்திய இருவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். நாகப்பட்டித்ததில் பஞ்சலோக அம்மன் மற்றும் நடராஜர் சிலை விற்க முயற்சிகள் நடப்பதாக தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு மேற்பார்வையில் கூடுதல் சூப்பிரண்ட் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. குருக்கள் […]
வேதாரண்யம் பகுதியில் புதிய பைக் வாங்கி வந்த இளைஞர் எதிரே வந்த பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் வீரப்பன். அவருடைய மகன் சிவதாஸ் வயது 22 . இவர் புதிய பைக் வாங்கி அண்டர்காடு சாலை வழியாக வேதாரண்யத்திற்கு ஒட்டிச் சென்றார். அப்போது எதிரே விஜயராகவனும் , ஞானவிக்னேசும் ஓட்டி வந்த பைக் சிவதாஸ் மீது எதிர்பாரத விதமாக வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் […]