வாகன சோதனையில் சிக்கிய மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தோப்புத்துறை வடக்கு வீதியில் ஷேக் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 4 பவுன் தங்க காசுகளை திருடியுள்ளனர். இதுகுறித்து அகமதுல்லா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை […]
Tag: nagapattinam
மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் கலந்துகொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் முன்னிலை வகித்து நடத்திய இந்த ஊர்வலம் வாஞ்சூர் ரவுண்டானாவில் தொடங்கி புத்தூர் ரவுண்டானா வரை சென்றுள்ளது. இதில் விபத்தில் சிக்கிய 48 மணி நேரத்தில் இன்னுயிர் காப்போம் என்றும், பெண் கல்வியின் அவசியம் […]
ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக வீட்டிலிருந்த படியே புத்தாண்டை கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணியிலுள்ள புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வருடந்தோறும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு ஏராளமானோர் வருவது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் கூடிநின்று புத்தாண்டை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதற்கு பதிலாக வீட்டிலிருந்தபடியே […]
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செட்டிபுலம் கிராமத்தில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராஜகோபால் திடீரென விஷம் அருந்தி விட்டார். அதன்பின் அக்கம்பக்கத்தினர் ராஜகோபாலை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இராஜகோபால் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனம் மோதி நபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கத்தரிப்புலம் கிராமத்தில் விவசாயியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கத்தரிப்புலம் கோவில் குத்தகை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் சுப்பிரமணியன் மீது வேகமாக மோதியது. இதனால் படுகாயமடைந்த சுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த […]
டீக்கடையில் பற்றி எரிந்த நெருப்பை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாழ்மங்கலம் மேலத்தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையில் திடீரென நெருப்பு பற்றி எரிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று நெருப்பை அணைக்க முயன்றனர். ஆனால் பலத்த காற்று வீசியதால் கடை முழுவதும் நெருப்பு பற்றி அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. இதுபற்றி தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் […]
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சித்திவிநாயகபுரம் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையிலுள்ள ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவின் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சில நாட்களாக செல்வகுமார் உடல்நிலை குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் செல்வகுமாரின் சடலம் அவரது சொந்த ஊரான சித்திவிநாயகபுரம் […]
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாமை சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புத்தூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனரான ராஜசேகர் முன்னிலை வகித்துள்ளார். மேலும் நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருமருகல், கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியம் 85 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு 2 நாட்கள் அடிப்படை […]
வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஸ்டூடியோ உரிமையாளர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தகட்டூர் கடைத்தெருவில் தனக்கு சொந்தமான ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தகட்டூரிலிருந்து வேதாரண்யத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ரமேஷ் மருதூர் மாடி கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது தீயணைப்பு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே […]
சிறையிலிருந்த கைதி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புதுச்சேரி பகுதி சிவன் கோவில் தெற்கு தெருவில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சாராயம் கடத்தல் வழக்கில் கீழ்வேளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறைச்சாலையில் காளிமுத்து திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்ட காவல்துறையினர் உடனடியாக காளிமுத்துவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு காளிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே […]
குளத்தில் குளித்துகொண்டிருந்த நபர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நாங்கூர் பகுதியில் கூலி தொழிலாளியான பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவியுடன் அதே பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அவரது வீட்டின் அருகே உள்ள திருப்பாற்கடல் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பத்மநாபன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் கத்தி […]
கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள குமாரமங்கலம் தெற்கு தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளிடத்தில் வேளாண்மை உதவி அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் சட்டநாதபுரம் ரவுண்டானா அருகில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பதுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
குளத்திற்கு சென்ற நபர் நிலைத்தடுமாறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பவுசுப்பேட்டை கிராமத்தில் இளங்கலை பட்டதாரியான சந்திரமோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினக்கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரமோகன் பவுசுபேட்டையிலுள்ள மருத்தானி குளத்தில் கை, கால்களை அலம்பி விட்டு திரும்பும்போது தடுமாறி தண்ணீரில் விழுந்து மூழ்கிவிட்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மூழ்கிய சந்திரமோகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
வேன் ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ்.நல்லூர் மணப்பள்ளி கிராமத்தில் வேன் ஓட்டுநரான பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளி குழந்தைகளை தனது வேனில் ஏற்றிக்கொண்டு நத்தம் கடைவீதியில் இறக்கிவிட்டு குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம் அதே பகுதியில் வசித்து வரும் 2 நபர்கள் முன்விரோதம் காரணமாக பிரவீனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ராதாமங்கலம் கிராமத்தில் தங்கவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் 1-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக அந்த சிறுமியை முதியவர் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]
கைப்பேசி வாங்கிக் கொடுக்காததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பல்லவராயன் வேட்டையில் சாந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாந்தினி தனது தாயிடம் கைப்பேசி வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த சாந்தினி எலி மருந்தை வாங்கி சாப்பிட்டு விட்டு மயங்கி விழுந்தார். இதனை […]
ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய போலீசை பணியிடை நீக்கம் செய்ய சூப்பிரண்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாராய குற்ற வழக்குகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த வாகனங்கள் காடம்பாடியிலுள்ள பழைய ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை அதிகாரியான செல்வகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் […]
ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மடப்புரம், ஆக்கூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் மருத்துவ குடியிருப்பு, பழைய கால்நடை மருத்துவ கட்டிடம், நீர்த்தேக்கத் தொட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள சத்துணவு கூடம் மற்றும் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு செய்துள்ளார். பின்னர் சத்துணவில் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்து, அதன் தரத்தை குறித்து ஆய்வு செய்துள்ளார். இந்த […]
புத்தக பாதுகாப்பு அறைக்குள் பாம்பு புகுந்ததால் பள்ளியில் பரபரப்பு நிலவியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் பிரதான கட்டிடம் ஒன்றில் புத்தக பாதுகாப்பு அறை இருக்கிறது. அந்த அறையிக்குள் திடீரென பாம்பு புகுந்ததை கண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது புத்தக பாதுகாப்பு அறையை முழுமையாக மூடிவைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் […]
மணம் முடிப்பதற்கு மறுத்த காதலனால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தி கிராமத்தில் பி.பி.ஏ. பட்டதாரியான வித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் செட்டிபுலம் கிராமத்தில் வசித்துவரும் எம்.ஏ. பட்டதாரியான புகழேந்தி என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் வித்யா புகழேந்தியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு புகழேந்தி மறுப்பு தெரிவித்ததால், வித்யா வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு பகுதியில் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் அங்கு கஞ்சா விற்பனை செய்த நபர்கள் நரேந்திரன், ராஜேஷ் கண்ணா, விஷ்வா, விஜய் சுதாகரன், மற்றும் டேவிட் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த 5 பேரையும் […]
மாவட்ட ஆட்சியர் தனது அலுவலகத்திற்கு பேருந்தில் பயணித்ததை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்களால் காற்று மாசடைவதை தடுப்பதற்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும் சைக்கிள், பேருந்து, ரயில் போன்ற போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனது முகாம் அலுவலகத்திலிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொய்கைநல்லூரில் மணிமாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஹரிஹரன் என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் மணிமாறன் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரும் தங்களது நண்பர் மனோஜ்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் மூவரும் தெற்கு பொய்கைநல்லூர் பைலட் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள வேகத்தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் தலைமை தாங்கியுள்ளார். இதனை ஒன்றிய செயலாளர் தொடங்கி வைத்தார். அதன்பின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து திருப்பூண்டி காரைநகர் பகுதியில் அமைந்துள்ள மயானத்திற்கு செல்லும் சாலையை சீர் […]
நெடுஞ்சாலைதுறையினரை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை என்.எச்45.ஏ. நான்கு வழிசாலை அமைக்கப்படுவதால் கொள்ளிடத்திலிருந்து பொறையாறு வரை உள்ள நிலம் மற்றும் வீடு ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலைப் பணிகளை செய்துவரும் நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க வலியுறுத்தியும், நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும், விவசாய சங்கத்தினர் தொடர் […]
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அதனை வெளியேற்றுவதற்காக பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் 5000 ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கனத்த மழையால் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். தேத்தாகுடி ரயில்வே சுரங்கப்பாதையில் […]
ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி மீட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு அருகிலுள்ள வண்டிக்காரத் தெருவில் ஆனைகட்டி குளம் உள்ளது. இந்த குளம் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாததால் சிலர் அதனை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சீர்காழி தாசில்தார் தலைமையில், காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஆனைகட்டி குளத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் ஜே.சி.பி. மூலம் அகற்றப்பட்டது. இதனால் வண்டிக்காரத் தெருவில் […]
கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரங்களை தொழிலாளிகள் மூலம் அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருவெண்காட்டை சுற்றியுள்ள பெருந்தோட்டம், பூம்புகார், திருநகரி, திருவாலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் திருவாலி சாலையில் 2 மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மேலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் சுற்றுப்புற பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களை […]
அரிசியில் குருணை மருந்தை கலந்து ஆடுகளை கொன்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் இருக்கும் திடலில் மேய்ந்து கொண்டிருந்த 5 ஆடுகள் திடீரென இறந்து விட்டது. இந்நிலையில் அதே திடலில் மேய்ந்து கொண்டிருந்த 15 ஆடுகள் நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது குறித்து அறிந்த ஆட்டின் உரிமையாளர்கள் திடலுக்கு சென்று பார்த்தபோது அரிசியில் குருணை மருந்தை […]
திடீரென மாயமான 31 பவுன் தங்க நகை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆயப்பாடி மெயின் ரோடு பகுதியில் அப்துல் குத்தூஸ் தனது மனைவியான மெகராஜ்கனியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டிற்கு சென்று விட்டு தனது கணவருடன் சொந்த ஊரான நீடூருக்கு திரும்பியுள்ள தனது மகளை பார்த்துவிட்டு, நகைகளையும் கொடுத்து விட்டு வருவதற்காக ஆயப்பாடியிலிருந்து மெகராஜ்கனி மயிலாடுதுறைக்கு பேருந்தில் வந்துள்ளார். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கிய மெகராஜ்கனி ஒரு கடையில் இனிப்பு வாங்குவதற்காக […]
மயிலாடுதுறையில் உள்ள வர்த்தகர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் இம்மாத இறுதிக்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வின்போது வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுதற்கான […]
மயூரநாதர் கோவில் யானைக்கு கபசுர குடிநீர் வழங்கி மூலிகை சாம்பிராணி புகை போட்ட பாகனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா தொற்று மனிதர்களிடையே மட்டும் பரவாமல் விலங்குகளுக்கும் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வன ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயூரநாதர் திருக்கோவில் சார்பாக கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் […]
எலிகளைப் பிடிப்பதற்காக விவசாயி வைத்த கூண்டில் அரியவகை விலங்கான மரநாய் சிக்கியுள்ளது. நாகை மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளான பிரதாபராமபுரம், வேளாங்கண்ணி, காமேஸ்வரம், பொதிகை நல்லூர், வடக்கு பொய்கைநல்லூர், புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு போன்ற பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள் போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் எலிகள் உள்ளிட்டவைகள் விளை நிலங்களில் புகுந்து காய்கறிகளை சேதப்படுத்தி வருகின்றது. அவற்றை பிடிப்பதற்காக விவசாயிகள் தங்கள் நிலங்களில் கூண்டுகளை வைத்துள்ளனர். அவ்வாறு ஒரு விவசாயி தனது விளைநிலத்தில் வைத்திருந்த ஒரு கூண்டில் அரியவகை விலங்கான மரநாய் […]
கொரோனா ஊரடங்கால் வியாபாரிகள் மாங்காய் வாங்க வராததால் மாங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளான நாலுவேதபதி, தேத்தாகுடி, செம்போடை, பெரியகுத்தகை, புஷ்பவனம், தாமரைகுளம், குரவப்புலம், கத்தரிப்புலம் ஆகிய பகுதிகளில் 5,000 ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட மாங்காய் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்த நிலையில் வைரஸ் தாக்குதல் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு பிறப்பதால் மாங்காய்களை வாங்க எந்த வியாபாரிகளும் வரவில்லை. இதனால் ஒரு கிலோ மாங்காய் […]
தீயில் 6 வீடுகள் கருகி சாம்பலானதில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கிராமத்தில் தமிழக அரசால் கடந்த 15 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளது. இந்த வீடுகள் பழுதடைந்து உள்ளதால் அவர்கள் வீடுகளுக்குப் பின்புறம் உள்ள காலி இடத்தில் தென்னங்கீற்று குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் செல்வம் என்பவரது வீட்டின் பின்புறத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. அப்போது காற்று […]
கடலில் சூறைக்காற்று வீசியதால் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலில் சூறைக்காற்று வீசப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம், மணியன்தீவு, ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், கோடியக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சூறை காற்று வீசியதால் 5000 மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லவில்லை. அவர்களின் படகுகளை பாதுகாப்பான இடத்தில் […]
ஆழ்கடலில் வசிக்கக்கூடிய அதிக விஷத்தன்மை கொண்ட பேத்தை மீன் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் கடற்கரையில் அதிக விஷத்தன்மை கொண்ட பேத்தை மீன் ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இந்த மீன் ஆபத்துக் காலங்களில் தன்னை பாதுகாப்பதற்காக பந்து போல் உருமாறி கொள்ளும் தன்மை கொண்டது. மேலும் இந்த மீனின் உடலில் முட்கள் அமைந்திருக்கும். கோடியக்கரையில் இருந்து நாலுவேதபதி கடற்கரை பகுதி வரை கடல் சீற்றம் மற்றும் படகுகளின் விசிறியில் அடிபடுவது போன்ற […]
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நேருக்கு நேர் மோதியதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழி கோவில் தெருவில் ரமேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் பழையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் ஓலகொட்டாய்மேடு அருகில் சென்று கொண்டிருந்தபோது, எருக்கூர் கிராமத்தில் வசித்து வரும் யுவராஜ் என்பவர் ஓட்டி வந்தார் மோட்டார் சைக்கிள் ரமேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இது படுகாயமடைந்த ரமேஷ் […]
நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது, குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குருவியான்பள்ளம் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இளைய மதுக்கூடம் கிராமத்தில் வசிக்கும் தனது மகள் அமலா கிருஷ்ணகுமார் வீட்டிற்கு சென்று பொங்கல் சீர்வரிசை பொருட்களை கொடுத்து விட்டு அங்கிருந்து தனது பேரனான ஆக்ரிஷ் என்பவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அந்த சிறுவன் தனது தாத்தா வீட்டின் அருகே உள்ள குளம் பகுதியில் மற்ற சிறுவர்களுடன் இணைந்து […]
கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பாலக்கரைகடை பகுதியில் சிங்காரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்ட காரணத்தால், மனமுடைந்த புவனேஸ்வரி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அப்போது […]
சாராயம் விற்ற 2 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிழவேலூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் வருவதாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அய்யனார்குளம் பகுதியில் சாராயம் விற்ற ஜெகவீரபாண்டியன் மற்றும் ஆழியூர் சாலையில் சாராயம் விற்ற தாமரைக்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். […]
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆசிட் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். ஆறுமுகம் பெயிண்டராக பணிபுரிகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்ட போது மிகுந்த மனவேதனை அடைந்த ஆறுமுகம் தனது வீட்டில் இருந்த ஆசிட்டை குடித்துவிட்டார். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை […]
நிலத்தை வாங்கிவிட்டு தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனின் நில உரிமையை சப்-கலெக்டர் ரத்து செய்தார் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் ரத்தினவேலு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ரத்தினவேலு தனக்கு சொந்தமான 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை தானம் செட்டில்மெண்ட் ஆவணம் மூலம் தனது இளைய மகனாகிய ஆனந்த் என்பவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். […]
செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காக வந்த இளம்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமாக வீடியோ அனுப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்குட்பட்ட கிளியனூர் அகரவல்லம் என்ற கிராமத்தில் வசித்து வருபவன் இதயதுல்லா மகன் முகமது அப்ரீத்.. வயது 21 ஆகிறது.. இவன் அதே ஊரில் பணப்பரிமாற்றம் (money transfer) மற்றும் செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யும் கடையையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 12ஆம் […]
மயிலாடுதுறையில் பிரபல ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரது மகன் பாபு.. 45 வயதுடைய இவர் திமுக நகரசெயற்குழு உறுப்பினராவார்.. இவரின் மீது நல்லாசிரியர் நீலகண்டன் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு பின் வீடு திரும்பிய போது வீட்டின் அருகேயுள்ள குளக்கரையில் பதுங்கியிருந்த […]
சீர்காழி அருகே கடல் அலையில் சிக்கி காணாமல் போன 6 வயது சிறுமியை தீவிரமாக தேடும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சபாநாயகர் தெருவை சேர்ந்த ஹாஜாமைதீன்(32) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹனிதா (25) என்ற மனைவியும், அஃப்ரா (6) என்ற மகளும் உள்ளனர்.. அஃப்ரா சீர்காழியிலுள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார். தாய் ஹனிதா, அஃப்ரா மற்றும் குடும்பத்துடன் […]
குடிப்பதற்கு பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற போது சகோதரரும் , காப்பாற்றிய உறவினரும் தீவிபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (39). இவர், திருமணம் நடைபெறாத விரக்தியில் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இந்நிலையில், மகேஷ் திருவள்ளுவரில் வசிக்கும் தனது சகோதரி மஞ்சுளா(36) வீட்டிற்கு துக்க காரியத்துக்கு வந்துள்ளார். அங்கு குடிக்க பணம் கேட்டு, தனது சகோதரி மஞ்சுளாவிடம் தகராறு […]
வேதாரண்யத்தில் கண்டெய்னர் மூலம் கடத்தி வரப்பட்ட 661 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து, 5 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட போலி தனியார் நிறுவன கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஆந்திராவிலிருந்து வந்த […]
மயிலாடுதுறையில் பட்டப்பகலில் சட்டத்திற்குப் புறம்பாக, பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த நபரை பொதுமக்களே பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகரில், கீழப்பட்டமங்கலம், கேணிக்கரை, ஆரோக்கியநாதபுரம், ஆராயத்தெரு, அண்ணாநகர், சாந்திகாப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பாக, பாண்டிச்சேரி சாராயத்தின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தற்போது மதுபானங்களின் விலையேற்றத்தால் மலிவு விலையில் கிடைக்கும், பாண்டிச்சேரி சாராயத்தை (ரூ.50) வாங்க குடிமகன்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதை வாங்க வரும் குடிமகன்களின் கூட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு […]
கடலோர மாவட்டங்களில் ‘ஆபரேஷன் சாகர்கவாச் என்னும்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் வேடத்தில் இருந்த ஏழு் காவல் துறையினர் கைது செய்யப்பட்டனர். இந்தியா முழுவதும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கடலோர மாநிலங்களில் ‘ஆபரேஷன் சாகர்கவாச்’ என்னும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் உள்ள 18 சோதனை சாவடிகளிலும், துறைமுக கடல் பகுதிகளிலும் கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினர் நேற்று (பிப். 06) படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். […]