Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நல்லியான் தோட்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிந்தாமணி என்பதும், சட்டவிரோதமாக தோட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிந்தாமணியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோகூர் கிராமம்… 693 பேர் பங்கேற்பு… சிறப்பு மருத்துவ முகாம்…!!

சுகாதாரத்துறை சார்பில் கோகூர் ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் கோகூர் ஊராட்சி பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் பிரபு தலைமையிலான டாக்டர்கள் பிரபு, விக்னேஷ், கயல்விழி, முருகேஷ் குமார், ஜனனி, தீபிகா ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் இந்த முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், கண் மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேகத் தடையே வேண்டாம்… மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்… பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்…!!

வேகத் தடையை நீக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் தெற்குவெளிக்கு செல்லும் சாலையில் புதிதாக வேகத்தடை ஒன்று அமைக்கபட்டுள்ளது. இதில் வேகத்தடையில் ஒளிரும் விளக்குகள் இல்லை வர்ணமும் பூச படவில்லை. இந்த வழியாக நாகூர் தர்கா, சிங்காரவேலர் கோவில், வேளாங்கண்ணி மாதா பேராலயம் ஆகிய பகுதிகளுக்கு கார், இருசக்கர வாகனம், சரக்கு வாகனங்கள் ஆகியவை அதிக அளவில் செல்வதால் கடந்தவாரம் மட்டும் சுமார் 20க்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தலைமை அஞ்சலகத்தில் பழுதான ஜெனரேட்டர்… பல நாள்களாகியும் சரிசெய்யப்படாததால் வாடிக்கையாளர்கள் சிரமம்…!!

மாவட்ட தலைமை அஞ்சலகத்தில் பழுதடைந்த ஜெனரேட்டர் பல நாள்களாகியும் சரிசெய்யப்படாததால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைமை அஞ்சலகம் இயங்கி வருகிறது. அந்த தலைமை அஞ்சலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட வட்டாரங்களில் நூற்றுக்கணக்கான கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் மாவட்ட தலைமை அஞ்சலகத்திலுள்ள ஜெனரேட்டர் பழுதடைந்து பல நாள்கள் ஆகியும் சரிசெய்யப்படாததன் காரணமாக மின்தடை ஏற்படும் நேரங்களில் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை செய்யமுடியாமல் மிகுந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அன்புதான் காதல்: பெற்றோருக்குப் பாத பூஜை செய்த பள்ளி மாணவியர்

காதலர் தினத்தை முன்னிட்டு, பெற்றோர்களிடம் அன்பு செலுத்தும் விதமாக பள்ளி மாணவ-மாணவிகள் பாத பூஜை செய்தனர். உலகம் முழுவதும் இன்று காதலர்கள் தினம் கொண்டாடும் நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் – மயிலாடுதுறையில் பள்ளி மாணவ- மாணவிகள் காதலர் தினத்தை பெற்றோர்களிடம் அன்பு செலுத்தும் விதமாக, பாதபூஜை செய்து வழிபட்டனர். பிப்ரவரி 14ஆம் தேதியை காதலர் தினமாக காதலர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். காதலர் தினத்தால் பண்பும் கலாசாரமும் பாதிக்காமல் சிறந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறி, […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அபாயம்: கடல் சீற்றத்தால் மீன் பிடிக்க தடை ..!!

நாகைபட்டினத்தில் கடல் சீற்றத்தால் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் வருத்தத்தில் உள்ளனர் . நாகப்பட்டினம் வேதாரண்யம் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது .இதனை அடுத்து கடல் சீற்றத்தின் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வரும் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை . இதனால் கடற்கரை பகுதிகள் முழுவதும் 850-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு […]

Categories

Tech |