புல்வாமா தாக்குதலின் ஓர் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், நாகர்கோவிலில் விஜய் ரசிகர்களும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய எல்லை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த 2019ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஏராளமான […]
Tag: # Nagarkovil
நாகர்கோவிலில் ரூ 2000 கள்ள நோட்டை திரையரங்கில் கொடுத்து மாற்ற முயன்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பள்ளிவிளையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் படம் பார்க்க திரையரங்கிற்கு சென்று டிக்கெட் எடுக்க 2,000 ரூபாயை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டு மீது திரையரங்கு ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த காவல்துறையினர் ரமேஷ் கொடுத்த நோட்டை பார்த்ததில் அது கள்ள நோட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து […]
நாகர்கோவிலில் பெண்ணிடம் 10 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். நாகர்கோவிலில் தேவாலயத்திற்கு நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொள்ளை சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவமானது அருகே இருந்த மருத்துவமனை […]
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார். நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேட்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.மேலும் மார்க்சிஸ்ட்கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைச் சிறுத்தைகள்கட்சி , மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சி , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் […]