கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக புயல், மழை உள்ளிட்ட காலநிலை சம்பந்தமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இந்த பிரச்சனை நமது நாட்டில் மட்டுமல்லாமல், உலக அளவில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து நாசா நிறுவனம் தற்போது எச்சரிக்கை விடுக்கும் படி பதிவு ஒன்றை அவர்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், பூமியைச் சுற்றிலும் பல்வேறு வழிகளில் கடுமையான வெப்பம் வெளியேறுகிறது. மற்ற வருடங்களை காட்டிலும் தற்போது பூமி அதிக வெப்பமடைந்து வருகிறது. இந்த கடுமையான […]
Tag: NASA
விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டது. அதன்படி உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் நாசாவைச் சேர்ந்த ராபெர்ட் பென்கன் மற்றும் டக்லஸ் ஹர்லி ஆகிய இரண்டு விண்வெளி வீரர்கள் வானில் பறக்க தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த 28ம் தேதி ராக்கெட் ஏவப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வானிலை சரியாக இல்லை எனக் கூறிய நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நாசாவை […]
அறைகளில் இருக்கும் வைரஸ்களை முழுவதுமாக அழிக்கும் கருவியை நாசா கண்டுபிடித்து அமெரிக்காவை மகிழ்ச்சியாக்கியுள்ளது அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரப்படி நேற்று முன்தினம் 1258 இறப்புகள் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதுவரை 51,016 மரணங்கள் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாசா மற்றும் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அந்த குழு வடிவமைத்த கருவிகள் […]
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இந்த ஆண்டில் நிகழவிருக்கும் முதல் சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ எனபெயரிட்டுள்ளது…!! பூமி நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வு சந்திர கிரகணம் ஆகும்.சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் மீது விழும். மேலும் 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும்போது கிரகணம் உச்சத்தில் இருக்கும். […]
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்ட சூரியனின் ஒலியை, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, சூரியனிலிருந்து வரும் ஒலி ‘ஓம்’ என்ற சத்தத்துடன் ஒலிக்கிறது என்று கூறி சமூக வலைதளங்களில் பெரும் கேலி கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறார். புதுச்சேரி: நாசா வெளியிட்ட சூரியனின் ஒலி குறித்து சர்ச்சையைக் கிளப்பும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. புதுச்சேரி […]
நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள் போலியானவை என தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நிலவை சுற்றி வரும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் இருக்கும் இடத்தை கண்டறிந்து புகைப்படம் எடுத்துள்ளதாகவும் அவர் உடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரின் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த நிலையில் விக்ரமின் புகைப்படத்தையும் […]
நாசா விஞ்ஞானிகள், பூமியைப் போலவே இருக்கும் புதிய கிரகத்தை கண்டபிடித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள், டெஸ் என்ற தொழில்நுட்பத்தின் துணையுடன் இந்த புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர் . விஞ்ஞானிகள் இந்தக் கிரகத்திற்கு ஜி ஜே 357 என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் கிரகமானது பூமியிலிருந்து சுமார் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றது .மேலும் இந்தக் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தக் கிரகம் நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வருவதனால் அதிகக் குளிராகவோ, அதிக சூடாகவோ இல்லாததால் […]
கியூரியாசிட்டி ரோபோ செவ்வாய் கிரகத்தில் சிறிய மலை உச்சி ஒன்றை படம் பிடித்துள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செந்நிற கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா கியூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோ ஒன்றை உருவாக்கினர். பின்பு நவம்பர்26, 2011 அன்று இந்த ரோபோ புளோரிடாவின் கேப் கேனவரல் வான்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் 5 ஏவுகணை மூலம் அனுப்பப்பட்டு 2012 ஆகஸ்ட் 6ஆம் நாள் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த ரோபோவானது செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் நகர்ந்து அடிக்கடி ஆச்சரியம் மூட்டும் புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி […]
முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை படம் பிடித்து வெளியிட்டது நாசா ஆராய்ச்சி மையம். பல்வேறு நாடுகளால் ஆராய்ச்சி செய்யப்படும் கோள் செவ்வாய். கடந்த ஆண்டு ‘இன்சைட் ‘ என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தின் உள்ளே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலத்தில் பதிவாகியுள்ளது. செவ்வாய் […]
நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு, 1.5 லட்சம் கோடி ரூபாய் நிதியை, அமெரிக்க அரசிடம், நாசா விண்வெளி ஆய்வு மையம் கேட்டுள்ளது. நாசா விண்வெளி ஆய்வு மையம், அடுத்த 10 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்று திரும்பும் வகையிலும், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் வகையிலும் விண்கலம், ராக்கெட்டுகளை தயாரிக்கும் முதற்கட்டப் பணியில் இறங்கியுள்ளது. இதற்க்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நிலவில் தங்கியிருந்து அங்குள்ள மேலும் பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம் முனைப்பு […]