இஸ்லாமிய பெண்ணின் விவாகரத்து தொடர்பான காரணத்தைக் கேட்ட நீதிமன்றம் வியப்பில் ஆழ்ந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்கான ஷாரியா நீதிமன்றத்தில் இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் கணவனிடமிருந்து விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். இந்த விவாகரத்திற்கு அவர் கூறிய காரணம் நீதிமன்றத்தாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் “என்னுடைய கணவரின் அன்பு என்னை மூச்சுத்திணற செய்கிறது. என்னிடம் கோபமாக பேசுவதில்லை, என்னை எந்த ஒரு விஷயத்திலும் வருத்தமடைய செய்வதில்லை, எனக்காக சமைத்துக் […]
Tag: # National
தனது தாய்க்காக இரவு உணவு கொண்டு வந்த மகன் தாய் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தான். கிழக்கு டெல்லி பகுதியை சேர்ந்தவர் மம்தா, இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் கணவருடன் விவாகரத்து கோரிய நிலையில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து மம்தா, பிரம்மா சிங் என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய மகன் பாட்டியுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு தனக்கு சாப்பிட உணவு […]
தலைமை நீதிபதி பாப்டே கான்ஷ்யாமின் மனு குறித்து கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் கடந்த ஜூலை பத்தாம் தேதி எட்டு காவலர்களை கொலை செய்த வழக்கு மற்றும் 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபே என்ற ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு துபே மற்றும் அவரின் கூட்டாளிகளின் என்கவுண்டர் தொடர்பான வழக்கினை விசாரிக்க அமைக்கப்பட்டது. இந்த நிலையில் […]
அயோத்தியில் கட்டப்பட இருக்கும் ராமர் கோவிலின் பூமி பூஜைக்கு இஸ்லாமியர் ஒருவர் 800 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் சந்த்குரி என்ற கிராமம் ராமரின் தாயான கௌசல்யா பிறந்த இடமாக கருதப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த முகமது பயாகான் என்ற இஸ்லாமியர் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்கும் நோக்கத்துடன் சுமார் 800 கிலோமீட்டர் அவரது கிராமத்தில் இருந்து நடந்தே அயோத்தி வந்தடைந்துள்ளார். இந்நிகழ்வை விமர்சிக்கும் மக்களை பற்றி பேசிய பயாஸ்கான்,” பாகிஸ்தானில் […]
அமிதாபச்சன் மனைவி இரவு தனது வீட்டருகே நடந்த சம்பவத்தினால் கோபம் கொண்டு காவல்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளார். மும்பையில் ஜிகு பகுதியில் இருக்கும் ஜல்சா பங்களாவில் பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன், இரவு சுமார் 11:30 மணியளவில் இந்த பங்களாவிற்கு அருகே அதிக இரைச்சலுடன் பைக்குகள் அங்குமிங்குமாக சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பைக் இரைச்சல்கள் காதை அடைந்ததால் எரிச்சலடைந்த அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயா பச்சன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு […]
மனைவியை நினைத்து இலைகளினால் வடிவமைத்த இதயத்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. துபாயில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் தெலுங்கானாவை சேர்ந்த ரமேஷ் ரங்கராஜன் காந்தி என்பவர். அவரின் மனைவி, தாய், தந்தை என அனைவரும் இந்தியாவில் உள்ளதால் ரமேஷின் நினைவுகளும் இந்தியாவிலேயே உள்ளது. இதற்குச் சான்றுதான் அவர் உருவாக்கிய காய்ந்த இலைகளினால் ஆன இதயம். வழக்கம் போல் சாலையோரங்களில் இருந்த காய்ந்த இலைகளை சேகரித்து அள்ளிக்கொண்டு தன் பணியில் செயல்பட்டிருந்தார். அச்சமயம் தனது மனைவியின் நினைவு வந்ததால் […]
ஆன்லைன் படிப்பிற்காக தனது பசு மாட்டை விற்று ஸ்மார்ட்ஃபோன் வாங்கிய குடும்பத்தினருக்கு பிரபல நடிகர் சோனுசூட் உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால்ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க ஸ்மார்ட் போன், லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் ஏதேனும் ஒன்று தேவையாக இருக்கிறது. இதை வாங்குவதற்கு ஏழ்மையில் உள்ளவர்கள் தவிக்கிறார்கள். இமாச்சல பிரதேசத்தில் உள்ள கும்மர் என்ற கிராமத்தில் வசித்து வரும் குல்தீப் குமார் தனது […]
ஃப்லிப்கார்டு நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றி புதிய திட்டத்தை தீட்டியுள்ளது. வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளதாக ப்லிப்கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக ப்லிப்கார்டு நிறுவனம் புதிதாக டிஜிட்டல் விற்பனையகம் தொடங்கி மளிகை கடை, சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்லிப்கார்டின் இந்த புதிய திட்டம் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனத்தின் ஜியோ நெட் சேவைக்கு கடும் போட்டியாக அமையும் என […]
80 லட்சம் மதிப்புள்ள கைப்பேசியின் பக்கங்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள நொய்டா எனும் பகுதியில் சாம்சங் நிறுவனத்திற்காண மிகப் பெரிய கடை ஒன்று இயங்கி வருகிறது. இதில் சுமார் 80 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகளுக்கான பாகங்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த குறித்த சம்பவத்திற்கு தொடர்புடைய நான்கு நபர்களை தற்போது கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 50 லட்சம் பணமாக மீட்டுள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முருகன் கைப்பேசி திரைகள், சார்ஜர்கள் உட்பட மேலும் […]
அண்ணிக்கு நடக்கவிருந்த துயரத்தை தனது உயிரை பணயம் வைத்து மைத்துனன் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஷரதா நகரை சேர்ந்தவர்கள் முன்னா அவரது மனைவி சோனி தேவி. நேற்று வீட்டில் தேவி தனியாக இருந்த நேரத்தில் திடீரென வீட்டிற்குள் வந்த அரவிந்த் மற்றும் சோட்டு என்று இருவர் தேவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர். அச்சமயத்தில் வீட்டிற்குள் வந்த மைத்துனர் ராமன் மற்றும் மகன் குமார் தேவியிடம் இருவர் தவறாக நடப்பதற்கு முயற்சிப்பதை கண்டு […]
நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை புரிந்துள்ளது. தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி இரும்புத்தாது ஏற்றிச் செல்ல பயன்படும் சரக்கு பெட்டிகளை கொண்ட நான்கு ரயில்களை ஒன்றாக இணைத்து, மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலை உருவாக்கினர். நான்கு ஜோடி மின்சார எஞ்சின்கள், 4 காட்வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரெயிலில் 251 காலி சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு […]
உலகில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை டெல்லியில் ஆளுநர் திறந்து வைத்துள்ளார். கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பத்தாயிரம் படுக்கைகளைக் கொண்ட உலகில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை ஆளுநர் அனில் பைஜால் திறந்து வைத்துள்ளார். டெல்லியின் உள்ள சத்தர்பூர் பகுதியில் பத்து நாட்களில் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இந்த சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டது. இங்கு மிதமான மற்றும் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள். […]
புதிதாக ஆட்கள் சேர்ப்பதை நிறுத்திவைக்க பொது மேலாளருக்கு ரயில்வே துறை கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்கள் பணிபுரியும் துறையாக ரயில்வே துறை உள்ளது. அத்துறையில் 12 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். துறைக்கு வரும் வருவாயில் 65% வரை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இரயில்வே துறை வேலையில் நெருக்கடியை சமாளிக்க பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் புது இடங்கள் […]
பிரதமர் மோடி யோகாவானது உலக மக்களிடையே ஒற்றுமையும் தோழமையும் அதிகரிக்கும் தினமாகும் என்று குறிப்பித்துள்ளார். ஆறாவது சர்வதேச யோகா தினமான இன்று காலை காணொளி மூலமாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மனித சமூகத்தின் ஒற்றுமையையும், தோழமையையும் வளர்க்கும் சக்தியாக யோகா இருந்து வருகிறது. இனம், நிறம், பாலினம் , மதம் , தேசங்களை கடந்து அனைவருக்கும் சொந்தமானது யோகா. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமூகமாக நாம் மாற யோகா உறுதுணையாக இருக்கின்றது. சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக […]
சீன செயலிகளான டிக் டாக், யூசி ப்ரவுசர், கிளீன் மாஸ்டர் உள்ளிட்ட 52 செயலிகளை தடை செய்ய மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. சீன மொபைல் செயலிகள் மூலம் பயனாளிகள் விவரங்கள் திருடப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. ஜூம் என்னும் வீடியோ அழைப்பு செயலியால் உலக அளவில் கடும் புகார்கள் எழுந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் தைவான்,ஜெர்மன் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் ஆகியவை இந்த செயலியை உபயோகிப்பதை தவிர்க்க அறிவுறுத்தினர். […]
தேசிய அளவிலான இறப்பு விகிதத்தில் இரண்டாமிடம் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா நோயின் பாதிப்பு பெரும்பாலும் அதிகரித்து வருகிறது. இதுவரை மகாராஷ்டிராவில் 4128 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 1505 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிபிசி செய்தி நிறுவனமானது “மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் தான் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது எனவும், தேசிய சராசரியை விட இரு மடங்கு […]
கொரோனா வைரஸ் அழிந்துவருகிறது என்று லதா மங்கேஷ்கர் ட்விட் செய்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் வீடுகளில் இருக்கும் ரசிகர்கள் பொதுமக்கள் என பலருக்கும் திரை பிரபலங்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டின் கானா குயில் என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் ரசிகர்களுக்கு கொரோனா பரவல் குறித்த அறிவுரை ஒன்றை தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வணக்கம் ஊரடங்கு உத்தரவுகள் தளர்க்கப்பட்டுள்ளது. இருந்தும் […]
ஐ.பி.எல் தொடரில் இழிவான சொற்களால் நான் இனவெறி தாக்குதலை எதிர் கொண்டேன் என மேற்கிந்திய கிரிக்கெட் வீரரின் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிலாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டின் பெரும் அளவில் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல பிரபலங்கள் இனவெறிக்கு எதிராக எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் மேற்கு இந்திய வீரரான டேரன் ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில் ” இது அமெரிக்காவில் மட்டும் அல்ல, தினசரி நடக்கும் பிரச்சனையாகும். சர்வதேச கிரிக்கெட் […]
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திரிகள் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு மற்றும் வெளிநாடு சுற்றுப்பயணங்களில் இதுவரை ரூ.393 கோடி செலவாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் பிரதமர் அலுவலகத்திற்கு சென்று தகவல் அறியும் உரிமையின் சட்டத்தின்கீழ் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள், 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாடு சுற்றுப்பயணங்களில் செய்த செலவு விவரங்களை கோரி இருந்தார். அதற்க்கு அளிக்கப்பட பதிலில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மந்திரிகளும் 2014-15-ம் […]
தேர்தல் பிரசாரத்திற்காக பா.ஜ.க. வேட்பாளர் சாந்தனு தாகூர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி காயம் அடைந்துள்ளார். மேற்கு வங்காளத்தில் போங்கான் (தனி) தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சாந்தனு தாகூர் என்பவர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இதனால் சாந்தனு தாகூர் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக கல்வானி என்ற பகுதிக்கு காரில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த போலீஸ் வேன் ஒன்று நிலைதடுமாறி சாந்தனு தாகூர் கார் மீது மோதியத்தில், சாந்தனு தாகூர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக […]
பானி புயலின் தாக்கம் எவரெஸ்டையும் விட்டுவைக்காமல், அங்கு அமைக்கப்பட்டுள்ள 20 முகாம்கள் காற்றில் பறக்கவைத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறி நேற்று ஒடிஸா மாநிலத்தின் வழியாக கரையைக் கடந்தது. ஒடிஸாவில் இந்த புயல் கரையை கடக்கும் போது பூரி, குர்தா, புவனேசுவரம் போன்ற மாநிலங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது கன மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 1 மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக் கான […]
10 ஆம் வகுப்பு மாணவனுடன் 7 நாட்கள் உல்லாசம் அனுபவித்த பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பெங்களூரில் சிக்கிய ஆசிரியை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் பிரபல விடுதி ஒன்றில் நடந்த சோதனையில் அம்மா மகன் என்று கூறிக்கொண்டு தங்கியிருந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் போலிசார் மேற்கொண்ட விசாரணையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவனை அந்த பள்ளியில் பணிபுரியும் 35 […]
குடிபோதையில் தூக்கு போட்ட மாதிரி நண்பருக்கு வீடியோ கால் மூலம் நடித்துக்காட்டிய இளைஞர் கயிறு இறுகி உயிரிழந்தார். திருப்பதி அருகே திருச்சானூர் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர். இவர் மதுபோதையில் தனது நண்பருக்கு வீடியோ கால் மூலம் தூக்கு போட்டு நடித்துக் காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தூக்குக் கயிறு இறுகியதில் ஷங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்பு தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஷங்கரின் உடலை கைபற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டாக […]
இறந்த வீட்டில் அழுது கொண்டிருந்த ஒருபெண்ணை மனிதர்களை போலவே குரங்கு ஒன்று அரவணைத்து ஆறுதல் கூறிய நெகிழவைத்தது. பெங்களூரில், கர்நாடகாவின் நர்குந்த் நகரில், 80 வயது முதியவர் ஒருவர் இறந்து விட்டார். அங்கு பெண்கள் உள்பட பலரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென்று வந்த ஒரு குரங்கு, அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை மனிதர்களை போலவே அரவணைத்து ஆறுதல் கூறிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்குள்ள அனைவரும் கதறிஅழுகும் பொது அவரது கண்ணீரையும் தனது கையால் துடைத்து அனைவரையும் வியக்க வைத்தது. இது […]