நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும் நடந்த குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஒருமுறை சிறைக்கு சென்று விட்டாலே அது அவர்கள் வாழ்க்கையில் பெரும் கரும்புள்ளியாக தான் இருக்கிறது. ஆனால் சிலருக்கு சிறைச்சாலையில் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் சிறைச்சாலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அத்தகைய ஆர்வலர்களுக்காக உத்தரகாண்டில் இருக்கும் […]
Tag: # National News
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் பஞ்சாரா ஹில்ஸ் நந்தி நகரில் 36 வயதுடைய பனோத் லாலு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் லாலு போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தனது மூத்த சகோதரரை பெற்றோர் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்த 7 நிமிடத்திற்குள் பஞ்சாரா ஹில்ஸ் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது […]
தண்டவாளத்தில் தலைவைத்து 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஆத்துவாய்க்கால் பேட் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரகு, ராமு, தமிழ்மணி என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்மணி 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிறந்த நாள் அன்று தமிழ்மணி விளையாட போவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். […]
கேரளாவில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி அருகே அமைந்துள்ள பள்ளிப்படி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மேலும் வெள்ளத்தில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளில் இருந்தவர்கள் ஏற்கனவே நிவாரண முகாம்களுக்கு சென்றதால் உயிர் […]
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓசூரில் இருந்து தமிழக பேருந்துகள் கர்நாடகத்திற்கும் கர்நாடக பேருந்துகள் ஓசூர் வழியாக தமிழகத்திற்கும் இயங்க தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொரனோ ஊரடங்கு காரணமாக தமிழக கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைக்கு இரு மாநிலங்களும் தடை விதித்திருந்தனர். தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து வெவ்வேறு வழித்தடங்கள் வழியாக 250 அரசு பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதுவரை தமிழ்நாடு பேருந்துகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மாநில […]
மத்திய அரசு கேட்டுக் கொண்டதன்படி சீரம் நிறுவனம் ஒரு டோஸ் தடுப்பூசி விலையை 300 ஆகவும் பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு டோஸ் தடுப்பூசியின் விலையை 400 ஆகவும் நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா கோவிஷீல்டு என்ற பெயரிலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற பெயரிலும் தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது ஒரு டோஸ் தடுப்பூசி விலையை திடீரென்று அதிகரித்துள்ளது. அதன்படி […]
கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவசர உதவிக்கு இந்த எண்ணை வாட்ஸப்பில் அழைக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும் தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்படும் மருந்துகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. […]
கிராமவாசிகளின் எதிர்ப்பால் முதியவர் ஒருவர் தனது மனைவியின் உடலுடன் சாலையில் அலைந்து திரிந்த சம்பவம் வேதனையை அளித்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜான்பூர் பகுதியில் திலக்தாரி என்பவரும் இவருடைய மனைவி ராஜ்குமாரி என்பவரும் வசித்து வந்தனர். ராஜ்குமாரிக்கு நீண்ட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு கடந்த திங்கட்கிழமை திடீரென்று உடல்நிலை மோசமானதால் அவருடைய கணவர் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின் மருத்துவமனை நிர்வாகம் ராஜகுமாரியின் உடலை ஆம்புலன்சில் வைத்து […]
இதுவரை 16 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்களில் தற்போது ஒரு கோடி தடுப்பூசிகள் இருப்பு இருப்பதாகவும் அடுத்த மூன்று நாட்களுக்குள் மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு பிரித்து அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. […]
கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலத்தில் பிஜ்வாசன் பகுதியில் வால்மிகி காலனியில் மின்சாரக் கோளாறால் ஏற்பட்ட தீ மளமளவென அருகில் உள்ள குடிசைகளுக்கு பரவியதில் வீட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் இந்த தீ விபத்தில் […]
கொரோனா சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதன்பின் அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் குழு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து தற்போது […]
ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் நோயாளியின் உறவினர் மருத்துவரின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் வேதனையை அளித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை உலகம் முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, உத்தரபிரதேசம் மாநிலங்களில் நோயின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த மருந்து கள்ளச் சந்தைகளில் அதிக பணத்திற்கு விற்கப்படுகின்றது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் […]
இலகுரக போர் விமானம் தேஜாஸ் பைத்தான்-5 ஏவுகணைகள் மூலம் இலக்குகளை துல்லியமாக தாக்கி சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருவில் அமைந்துள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் பொதுத்துறை நிறுவனம் உள்நாட்டிலேயே உருவாக்கிய இலகுரக போர் விமானம் தேஜாஸ். கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ரூபாய் 48 ஆயிரம் கோடி செலவில் இந்த வகை 89 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில் ஐந்தாவது தலைமுறை பைத்தான்-5 வானிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணையை எடுத்துச் செல்வதற்குத் தேஜாஸ் போர் விமானங்களுக்கு […]
கொரோனாவால் தங்கள் வாழ்வாதாரம் இழந்து உணவின்றி வாடும் மக்களுக்கு இஸ்கான் கோவில் சார்பாக உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்கள் வறுமையில் வாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் மக்கள் வெளியில் செல்ல முடியாமலும் வேலைக்கு செல்ல முடியாமலும் ஒரு வேளை உணவுக்குக் கூட கஷ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களும் சமூக அமைப்புகளும் வழிபாட்டுத்தலங்களும் தங்களது […]
கொரோனா வைரஸ் உள்ளதா என கண்டறிவதற்கு ஒரு வழி வைரலாகும் தகவல் உண்மையல்ல என கூறிய உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் ஆக்சிஜனும் படுகைகள் வசதிகள் இல்லாமலும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் ஒவ்வொருவருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளதா என கண்டறிய இதை செய்து பாருங்கள் போதும் எனக்கூறும் பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பதிவில் கூறியதாவது “பயனர்கள் 20 நொடிக்கு மேல் தங்களின் […]
முகேஷ் அம்பானியின் வலது கரமாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் மூத்த அதிகாரியாகவும் இருந்தவர் சைன மத துறவி ஆகியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் வலதுகரமாக இருந்தவர் பிரகாஷ் ஷா. இவர் அந்த நிறுவனத்தின் திட்ட பிரிவு துணைத் தலைவராக பணியாற்றியவர். இவரது ஓய்வு பெறும்போது இவருடைய ஆண்டு வருமானம் ரூபாய் 75 கோடி ஆகும். இவர் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து எளிமையாக வாழ ஆரம்பித்தார். இந்நிலையில் இவர் […]
கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வாய்வழி உட்கொள்ளும் மருந்தை கண்டுபிடிக்க உள்ளதாக பைசர் நிறுவனம் நம்பிக்கையூட்டும் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த நோய் தோற்றால் 14 கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இது உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை […]
மருத்துவர்களால் இறந்ததாக கூறப்பட்ட மூதாட்டி தகனம் செய்யும் இடத்தில் உயிர் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் நகரில் லக்ஷ்மி பாய் என்ற வயதான மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு லட்சுமிபாய்க்கு பரிசோதனை நடந்த போது அவரின் உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து இருந்தது. இந்த பரிசோதனையின் முடிவில் மருத்துவர்கள் லக்ஷ்மிபாய் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். […]
ஏழு ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த மனைவியை அவருடைய காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரை பற்றி கேள்விபடும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. பீகார் மாநிலத்தில் சுல்தான் கஞ்ச் நகரில் உத்தம் பட்டேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுகாரியா மாவட்டத்தில் வசிக்கும் சப்னா என்ற பெண்ணை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் எப்போதும் போல அமைதியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்வில் உறவினர் என்ற பெயரில் ஒருவர் வந்துள்ளார். […]
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவுவதன் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் தடுப்பூசி போடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் இதுவரை இந்தியாவில் 14,78,27,367 டோஸ் தடுப்பூசி போடப் பட்டுள்ளன. இது நேற்று காலை ஏழு மணி படி நிலவரம் ஆகும். அதேபோல் இதில் முன்கள பணியாளர்களில் 1 கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 975 பேர் […]
மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான எட்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று கொண்டிருக்கின்றது. மேற்கு வங்காளத்தில் எட்டாவது கட்ட வாக்குப்பதிவு 35 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. இதுவே இறுதி கட்ட வாக்குப்பதிவு ஆகும். அந்த மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடந்த நிலையில் 8ஆவது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று கொண்டிருக்கின்றது. மால்டா பாகம் 2, முர்ஷிதாபாத் பாகம் 2, கொல்கத்தா வடக்கு, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 […]
18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பெரும்பாலான மாநிலங்களில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை தன் கவனத்திற்கு கொண்டு வந்த மத்திய அரசு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என […]
இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் நீண்ட காலமாக நல்ல நட்புறவு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இவர்கள் பேசியதை தொடர்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சில குறிப்புகளை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது “நான் எனது நண்பரான ரஷ்ய அதிபர் […]
கொரோனா பிடியில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு உதவும் வகையில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் தன்னார்வ அமைப்பு ரூபாய் 34 கோடி நிதி திரட்டியுள்ளது. இந்தியாவின் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் புதிதாக பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனாவின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்பதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் தன்னார்வ அமைப்பு நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியானது சுமார் 100 மணி நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் திரட்டிய நிதியின் […]
கொரோனாவால் மகனை இழந்த பெற்றோர் தங்களது வங்கியில் வைப்பு நிதியில் இருந்து ரூபாய் 15 லட்சத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலவு செய்வதற்கு முன் வந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் ரசிக் மேத்தா மற்றும் கல்பனா மேத்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் கடந்த ஆண்டு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த இழப்பு அவர்களுக்கு தாங்க முடியாத மன வேதனையை தந்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு இந்தியாவில் நோய்த்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மற்றவர்களுக்கு உதவ […]
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த தம்பதியை பார்க்கும்போது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆனால் குணமடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சிறிது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலம் லட்டூர் மாவட்டம் கட்ஹான் தண்டா கிராமத்தில் தெஹ்னு சவான் என்ற 105 வயதுள்ள முதியவரும் அவரது மனைவி மோடாபாய் 93 வயதுள்ள மூதாட்டியும் […]
10 நாட்கள் இந்தியாவுக்கான விமான தடையானது நடைமுறைக்கு வந்து ஞாயிற்றுக்கிழமையில் இருந்து டிக்கெட் எதுவும் வழங்கப்படவில்லை. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளது. அதிலும் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இடையேயான வழித்தடத்தில் விமான சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முதலிலிருந்தே நிறுத்தி வைத்துள்ளது. அதனால் அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக […]
82 கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளி லல்லு யாதவ் என்கிற வினோத் யாதவ். இவர் மீது 82 கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் போலீசாரிடம் பிடிபடாமல் வெகுநாட்களாக தப்பித்து வந்துள்ளார். இந்நிலையில் மாவூ மாவட்டம் பான்வர்பூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று […]
நண்பரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆசிரியர் ஒருவர் 1400 கிலோமீட்டர் கடந்த ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் பகோரா மாவட்டத்தில் தேவேந்திர என்ற ஆசிரியர் வசித்து வருகிறார். இவருடைய நண்பர் ரஞ்சன் அகர்வால் என்பவர் டெல்லியில் உள்ள நொய்டாவில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திடீரென்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ஆக்சிஜன் கிடைக்காததால் அவருடைய உடல்நிலை திடீரென்று மோசமானது. அதனால் […]
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து செவ்வாய்க்கிழமை வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,01,187 உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே இறப்பு எண்ணிக்கையில் உச்சகட்டம் ஆகும். அதேபோல் நேற்று ஒரு […]
விவசாயி தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தை கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருத்துவ ஆக்சிஜன் வாங்குவதற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகின்றது. மேலும் நாடு முழுவதும் பல நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளும் ஆக்சிஜனும் கிடைக்காமல் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் அல்லாடும் நிலையை நம்மால் பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நீமுச் மாவட்டத்தில் விவசாயி குர்ஜால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக ரூபாய் 2 […]
தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி கிடைக்காமல் பெண் உயிர் இழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக டெல்லியில் தலை விரித்து ஆடுகிறது. இந்நிலையில் டெல்லியில் சரிதா விஹார் என்ற இடத்தில் அப்பல்லோ மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனைக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 62 வயதுள்ள ஒரு பெண் அழைத்துவரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி இல்லாததால் அவர் வெகு […]
கொரோனா வைரஸ் வராமல் தடுக்க இந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் வெளியிட்ட வீடியோ இன்னும் மருத்துவ ரீதியாக உண்மை என்று நிரூபிக்கப்படாததால் அதனை மருத்துவ கவுன்சில் தடை செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றது. இதனால் நாடு முழுவதும் நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் வசதிகள் இல்லை. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க இந்த ஏழு உடற்பயிற்சிகளை செய்தால் போதும் என்று ஒரு மருத்துவர் சமூகவலைதளங்களில் […]
கொரோனா பரவல் காரணமாக தேர்தல் முடிவுக்கு பின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. மேலும் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகின்றது. இதனால் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி […]
தினமும் 300 க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழப்பதனால் அங்குள்ள சுடுகாடுகள் எரிந்துகொண்டே இருப்பது வேதனை அளிப்பதாக சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறியிருக்கிறார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக டெல்லி மாநிலத்தில் தினந்தோறும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிலக்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 350 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் உயிரிழக்கும் எண்ணிக்கையாகும். இதை தவிர்த்து பலர் வீடுகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று […]
கர்ப்பிணி மனைவியை கணவர் தனது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலத்தில் நிஜாமுதீன் பகுதியில் சாய்னா என்பவர் வசித்து வந்தார். இவர் வாசீம் என்பவரை ஓராண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் சாய்னா மீது போதைப் பொருள் வழக்கு ஒன்று இருப்பதால் அவர் சிறைக்கு சென்று கடந்த 24-ஆம் தேதி ஜாமீனில் வெளி வந்துள்ளார். இவர் சிறையில் இருக்கும்போது வாசீம் சாய்னாவின் […]
தகனம் செய்ய வேண்டிய சடலங்கள் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி கண் கலங்க வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. மேலும் அங்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தட்டுப்பாடும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்காமல் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். Shubhashnagar Crematorium. pic.twitter.com/pXQmWKXC0s — Bharat Jodo Nyay Yatra ! […]
சரோஜ் மற்றும் கங்காராம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் ஆக்சிஜன் வசதியும் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு திடீரென்று ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனால் […]
நாசாவில் பணிபுரிந்த ஒருவர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை தகனம் செய்வதற்கு இடமில்லாமல் போனது என இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதில் “என்னுடைய உறவினர் ஒருவர் அமெரிக்காவில் Nuclear Science படித்து விட்டு நாசாவில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் டெல்லியில் இருக்கும் போது கொரோனா தொற்று ஏற்பட்டு பலியாகியுள்ளார். ஆனால் […]
ஆக்சிஜன் சப்ளை தடுப்பவர்கள் குறித்து ஒரு சம்பவத்தை உதாரணமாக அரசு காட்டினால் அவர்களை தூக்கில் போடுவோம் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆச்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. அதனால் ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு அமர்வுக்கு வந்த இந்த வழக்கில் “பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் […]
நகரும் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை ஜெர்மனியிலிருந்து இந்திய ராணுவ மருத்துவப் பிரிவு இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையிலான நோய் தொற்றுகள் உருவாவதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய ராணுவ மருத்துவப் பிரிவு நகரும் ஆக்சிஜனை தயாரிக்கும் கருவிகளை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்த கருவி மூலம் ஒரு மணி நேரத்திற்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன் 20 முதல் 25 நோயாளிகளுக்கு தேவைப்படும் […]
நகைச்சுவை நடிகர் விவேக்கின் கடைசி ஆசை நிறைவேறாமல் போனது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அதிகாலை 4.35 மணி அளவில் காலமானார். இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது கடைசி ஆசை என்பது படங்களை இயக்க வேண்டும் என்பதாம். அது நிறைவேறாமலேயே அவர் இறந்து போனது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அவரது நிலை மோசமானதால் அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கழித்தே எதுவும் கூற முடியும் என தெரிவித்துள்ளனர். […]
வாக்களிக்கும் முன் சிந்திக்க மறவாதீர்கள் என்றும், சிந்தித்த பின் வாக்களிக்க தவறாதீர்கள் என்றும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டி பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தனர். இதனையடுத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தியும் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தியுள்ளனர். இந்நிலையில் வாக்களிப்பது குறித்து கவிஞர் வைரமுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் “வாக்களித்தல் என்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு.நரேந்திரமோடி வரும் 8ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. முதன்முறையாக பாதிப்பு எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதன்படி 1 லட்சத்து 3 ஆயிரத்து 558 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 ஆயிரத்து 247 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் […]
பேருந்தில் ஒன்றாக பயணம் செய்த முஸ்லீம் வாலிபரையும், இளம் பெண்ணையும் நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூருவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு சென்ற ஒரு பேருந்தில் அன்வர் முஹமத் என்ற முஸ்லீம் வாலிபரும், 23 வயது இந்து இளம்பெண்ணும் பயணம் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி படிப்பு முதல் ஒருவரை ஒருவர் அறிந்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த இந்த பேருந்தை ஒரு மர்ம […]
இரு கால்களும் செயலிழந்த தனது காதலிக்கு துணையாக நின்று அவரை திருமணம் செய்து கொண்ட இளைஞரின் உண்மையான காதல் அனைவரையும் வியக்க வைக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்கமங்களூரு மாவட்டத்தில் பக்தரஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஸ்வப்னா என்ற பெண்ணும், மனு என்ற ஆணும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் 12-ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளனர். அதன்பின் உயர்நிலை படிப்புகளை தொடர முடியாத காரணத்தால் கல்லூரி படிப்பில் இருந்து […]
ரயிலில் ஏற முயன்ற போது கீழே விழுந்த முதியவரின் உயிரை விரைந்து சென்று காப்பாற்றிய போலீஸ்காரரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மதபூர் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு ரயிலில் முதியவர் ஒருவர் ஏற முயற்சிக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டுள்ளார. இவ்வாறு அவர் […]
துணை செவிலியர் ஒருவர் பெண்ணிற்கு அலட்சியமாக இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தற்போது அனைத்து இடங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு இடங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக மேற்கொள்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மந்தவுளி என்ற கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி […]
ஏப்ரல் 1-ஆம் தேதி தனது நண்பர்களை ஏமாற்றுவதற்காக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நடித்த சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலத்திலுள்ள ஆலப்புலா பகுதியில் சித்தார்த் அஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய்குமார் என்ற 12ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்தான். இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு உணவு அருந்தி விட்டு தனது அறைக்குள் சென்ற அஜய்குமார் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அஜய் குமாரின் தாயார் […]