உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமாத் என்ற பகுதியில் பனி பாறை உடைந்து உருகியதால் தவுளி கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பெரு வெள்ளத்தால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை, பாலங்கள் மற்றும் நீர்மின் திட்ட கட்டமைப்புகள் அனைத்தும் முழுமையாக அடித்துச் செல்லப்பட்ட தோடு, நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காணாமல் […]
Tag: # National News
கடவுள் தனது மகனை பலிகொடுக்குமாறு கட்டளையிட்டார் என கூறி பெற்ற மகனை தாய் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள பூலக்காடு பகுதியில் டாக்ஸி டிரைவரான சுலைமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாகிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இதில் ஷாகிதா தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் வீட்டில் சுலைமான் அவரது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணி அளவில் தனது இளைய […]
திட்டமிட்டபடி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திட்டமிட்டபடி நாளை 9 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பிற வகுப்புகளையும் திறப்பது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய அளவில் பள்ளி கல்வித்துறை 3 வது இடத்தில் இருந்து […]
உச்சநீதிமன்றம் இந்து தெய்வங்களை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காமெடி நடிகருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் முனாவர் பரூக்கி என்ற காமெடி நடிகர் அங்கு நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இந்து தெய்வங்கள் குறித்து தரக்குறைவாகப் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. […]
கடந்த 10 ஆண்டுகளாக வீட்டின் கிணற்றிலிருந்து கிடைத்த வாயுவை பயன்படுத்தி பெண் சமையல் செய்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஆராட்டு வளி பகுதியில் ரமேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம்மா என்ற மனைவி உள்ளார். இவர்கள் குடிநீருக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் வீட்டில் கிணறு தோண்டி உள்ளனர். ஆனால் அந்த கிணற்றில் உள்ள நீரின் நிறமானது மாறி காணப்பட்டுள்ளது. அந்த கிணற்றை மூடிவிட்டு அவர்கள் அதன் அருகில் […]
காதலியின் மீது சந்தேகப்பட்ட காதலன், காதலியின் கையை பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் அந்தேரி லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ் பகுதியில் சாகிர் கான் என்பவர் வசித்து வருகிறார். இவரும் வணிக வளாகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி உள்ளனர். இந்நிலையில் தாஹிர் கானுக்கு தனது காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. […]
மர்ம நபர்கள் கடற்படை அதிகாரியை கடத்தி சென்று எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சூரஜ்குமார் மிதிலேஷ் துபே என்ற கடற்படை அதிகாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கடற்படை பயிற்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜார்கண்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த சூரஜ்குமாரை கடந்த மாதம் 31 ஆம் தேதி 3 மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுவிட்டனர். இதனையடுத்து […]
ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது கீழே விழுந்த மாற்று திறனாளியை ரயில்வே பாதுகாப்பு படையினர் காப்பாற்றிய சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள பன்வெல் ரயில் நிலையத்தில் இருக்கும் ஏழாவது பிளாட்பாரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ரேனு பட்டேல் மற்றும் போலீசார் ஹரிஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் 3:45 அளவில் அங்கு வந்த ரயில் புறப்பட்டபோது, மாற்றுத்திறனாளி ஒருவர் அதில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த […]
தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் 500 கோவில்களைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அறிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சியானது தொலைபேசி மூலம் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி பேட்டி அளித்துள்ளார். அப்போது வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக 4.26 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் […]
பிளஸ் 1 மாணவி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பகுதியில் வசிக்கும் பிளஸ்-1 மாணவி பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் கணக்கு தொடர்ந்து பல வாலிபர்களுடன் நட்பாக பழகி உள்ளார். இந்நிலையில் திடீரென கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி அந்த மாணவி மாயமாகிவிட்டார். இதனையடுத்து அந்த மாணவியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடிப் […]
லாட்டரி சீட்டு குலுக்கலில் 80 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்ததால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாலிபர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து விட்டார். கேரள மாநிலத்தில் உள்ள நந்தி லைட் ஹவுஸ் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சையத் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கொல்லம் பகுதியில் உள்ள ஒரு கடையில் 22 லாட்டரி சீட்டுகளை வாங்கி உள்ளார். […]
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக பைகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் லட்டு பிரசாதத்தை வாங்கிச் செல்வதற்காக 2 ரூபாய்க்கு பிளாஸ்டிக் கவர்களை வழங்கிக்கொண்டு இருந்தது. ஆனால் இந்த கவரின் விலையானது 3 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தானம் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் வண்ணம் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக லட்டுவை கொண்டு செல்ல முதலில் அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் தயார் […]
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமிநாசினி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா தொற்று வராமல் தடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடித்து போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு குழந்தைகளை அழைத்து வரும் தாய்மார்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக கிருமிநாசினி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள யாவாத்மால் கிராமத்தில் 1 முதல் 5 வயது வரையிலான […]
அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு டெல்லி எல்லைகளில் இணைய தள சேவை முடக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. தலைநகர் டெல்லியில் பல்வேறு எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர். மேலும் கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதனால் டெல்லியில் இணையதள சேவையானது தற்காலிகமாக பதற்றமான சூழல் மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கும் நடவடிக்கையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
ஆந்திராவில் புதிதாக தாக்கியுள்ள நோய்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலுரு என்ற பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் அப்பகுதியில் வசித்து வரும் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் முதியவர் முதல் குழந்தைகள் வரை என மொத்தம் 615 பேருக்கு தலை சுற்றல், வாந்தி, நடுக்கம், மயக்கம், குமட்டல், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]
சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனேவில் இந்திய சீரம் நிறுவன வளாகத்தில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பணியின் போது, ஒரு கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு விட்டது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் இருந்த சீரம் நிறுவனத் தலைவர் […]
எல்லை பாதுகாப்பு படையினர் 15௦ மீட்டர் மற்றும் 3௦ அடி ஆழமுள்ள ஒரு சுரங்க பாதையை கண்டுபிடித்துள்ளனர். காஷ்மீரில் உள்ள கத்துவா நகரில் சர்வதேச எல்லைப் பகுதியில் 150 மீட்டர் நீளம் மற்றும் 30 அடி ஆழம் கொண்ட ஒரு சுரங்க பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதே பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹெக்ஸாகாப்டர் எல்லை பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டது. அதில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இருந்தது […]
கொரோனா தடுப்பு ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் கொவிஷீல்டு என்ற பெயரில் கொரோனா தடுப்பூசி மருந்தை சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனே சீரம் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றியது. அந்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் […]
மாரடைப்பு வந்த பெண்ணை போலீஸ்காரர் இரண்டு கைகளால் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூருக்கு வடகராவிலிருந்து படத்திலிருந்து ஜன் சதாப்தி எக்பிரஸ் இயங்கிவருகிறது. இந்த ரயிலில் அனிதா என்ற பெண் வடகரையில் இருந்து திருசூருக்கு சென்று கொண்டிருந்தார். ரயில் திருச்சூர் அருகே சென்று கொண்டிருந்த போது மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்த இந்த பெண்ணை கவனித்த மற்ற பயணிகள் இதனை ரயில்வே அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து ரயில்வே போலீசார் […]
காதல் திருமணம் செய்த மாணவியை குத்திக் கொலை செய்துவிட்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெனுமூர் தூர்பள்ளி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற கல்லூரி படிக்கும் மகள் உள்ளார். இவரும் பூதலப்பட்டு சித்தமாகுல பள்ளியில் வசித்து வரும் டெல்லி பாபு என்ற பிளஸ்டூ மாணவனும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் கடந்த 2 […]
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கிடப்பட்ட மின்சார அளவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் கொரோனா காலகட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட வேண்டிய மின் கணக்கீட்டானது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கிடப்பட்டது. இதனால் மின் கட்டணம் அதிகரித்ததோடு, இதில் பல்வேறு குளறுபடிகளும் ஏற்பட்டன. இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை […]
முறைகேட்டில் ஈடுபட்ட சிபிஐ போலீஸ் சூப்பிரண்டு உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிபிஐ அதிகாரிகள், வங்கியில் ரூபாய் 4,300 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக சில நிறுவனங்கள் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் உதவி செய்வதற்காக இன்ஸ்பெக்டர் கபில் தன்காட், சிபிஐ துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.கே. ரிஷி மற்றும் ஒரு வக்கீல் என மூன்று பேர் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் […]
ஆடம்பர செலவு செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் கேட்ட மனைவி மீது கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பனாசாவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு இஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த அமித்திடம், செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டு இஷா அடிக்கடி தொல்லை செய்ததோடு, தனக்கு […]
பசுவதை தடை அவசர சட்டமானது கர்நாடக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டால் பசுக்களைக் கொன்றால் 7 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டசபையில் பசுவதை தடை சட்டம் மசோதாவானது நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு மேல்-சபையில் இன்னும் ஒப்புதல் அளிக்காத சமயத்தில், பசுவதை தடைக்கு மாநில அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த அவசர சட்டமானது கர்நாடகத்தில் 18ஆம் […]
கடுமையான குளிர் நிலவுவதால் டெல்லியில் வாகனங்கள் கண்ணுக்குத் தென்படாத வண்ணம் சாலையில் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த குளிர்காலங்களில் காலை வேளையில் பனி மூட்டமானது அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் டெல்லியில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பனிமூட்டமானது அதிக அளவில் காணப்பட்டதால் அங்கு சாலைகளில் வாகன ஓட்டிகள் வண்டிகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மேலும் இந்த கடும் குளிர் காரணமாக வெளியில் […]
மத்திய கலாச்சார அமைச்சகம் ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவானது கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. நாட்டுக்காக பங்காற்றிய தலைவர்களில் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை ஒவ்வொரு தினமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் விழாவை ஜனவரி 23ஆம் தேதி கொண்டாட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும் இதனைப் பற்றி மத்திய கலாச்சார அமைச்சகம் கூறும்போது, பராக்கிராம் திவாஸ் […]
சபரிமலை கோவில் மண்டல மகரவிளக்கு பூஜையானது நாளையுடன் நிறைவடையும் நிலையில் பக்தர்களுக்கு இன்று மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் களபாபிஷேகம் நடந்தது. இந்த விழாவானது கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் சுரேஷ் குமார் வர்மா மற்றும் பிரதீப் வர்மா போன்றோர் பங்கேற்றனர். இதனையடுத்து வழக்கமான பாரம்பரிய முறைப்படி தந்திரி, மேல்சாந்தி மற்றும் கீழ் சாநதிகளுக்கு மன்னர் குடும்ப பிரதிநிதிகள் பணமுடிப்புகளை […]
சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள கோசம்பா என்ற இடத்தில் சாலையோரம் வெளி மாநில தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி அவர்களின் மீது ஏறியதில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்து விட்டனர். இந்த விபத்தில் காயம் அடைந்த 6 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தை […]
திடீரென நடந்த தகராறு காரணமாக சுற்றுலா பயணிகளின் படகு கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் உள்ள ஏரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். இந்நிலையில் படகு சவாரி செய்வதற்காக வந்த சுற்றுலா பயணிகள் படகில் இருந்து இறங்கும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் 15 பேர் காயமடைந்த நிலையில், படகிலிருந்து சுற்றுலா பயணிகள் அவசரமாக படகை விட்டு வெளியே […]
ராணுவ உயர் அதிகாரியாக பணிபுரிந்தவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் எல்லையில் ராணுவ அதிகாரி ஒருவர் திடீரென தற்கொலை செய்துவிட்டார். இவர் தங்டார் செக்டாரில் ராணுவ உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். இவ்வாறு ராணுவ உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தவர் திடீரென ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. மேலும் சம்பவம் பற்றி ராணுவத் தரப்பில் கூறும்போது, ராணுவ உயர் அதிகாரி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதற்கான […]
ஒழுங்காக படிக்கவில்லை என கூறி, ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகனை தீ வைத்து கொளுத்திய தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குஹட்பல்லி என்ற பகுதியில் பாலு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் சரண் என்ற ஒரு மகன் உள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்ட காரணத்தால் தனது வீட்டிலேயே இருந்தவாறு ஆன்லைன் வகுப்பில் சரண் படித்து வந்தார். இந்நிலையில் மாணவர் சரண் […]
அருணாச்சல பிரதேசத்தில் சீனா 1௦1 வீடுகளைக்கொண்ட புதிய கிராமத்தை உருவாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான எல்லை பிரச்சினையானது தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு இரு நாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக் கொண்டதில் இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். அதன்பின் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும், சீனா பின் வாங்குவதில் தயக்கம் காட்டுகிறது. இந்நிலையில் சீனா அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி சூ ஆற்றங்கரையில் 1௦1 வீடுகளைக் […]
மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மடுகரை முத்து நகர் பகுதியில் வேலாயுதம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து மனைவியை இறந்த வேதனையில் இருந்த வேலாயுதம் தனது மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் மிகவும் மனவேதனையுடன் தவிர்த்துள்ளார். இந்நிலையில் […]
மகரஜோதி விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் தீ மிதித்தும், கைகளால் பலகாரம் சுட்டும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மகரஜோதி விழாவில் திரளான பக்தர்கள் அணிவகுத்துச் செல்வர். அங்கு பொங்கல் தினத்தன்று ஆண்டுதோறும் பொன்னம்பலமேட்டில் காட்சி தரும் மகரஜோதி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டு செல்வது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே […]
காவல்துறை தலைமை அலுவலகம் அருகிலேயே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நீலம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அந்தப் பெண் தினக்கூலி வேலை பார்த்துவிட்டு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரால் நடக்க முடியாத காரணத்தால் நீலம் பூங்காவில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என எண்ணி அமர்ந்துவிட்டார். அந்தசமயம் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்தவர்களில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மீதம் உள்ளவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரோப்வாய் கிராமத்தில் வசித்து வந்த பொதுமக்கள் பலர் விஷ சாராயத்தை குடித்துள்ளனர். இதனால் விஷ சாராயம் குடித்தவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இருந்த 6 பேரையும் மீட்டு […]
உறவினர் மற்றும் கிராமத்தினருடன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்த வாலிபரை மரத்தில் கட்டி வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள கடாலிமுண்டா கிராமத்தில் ராஜ்கிஷோர் பிரதான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்கள் மற்றும் கிராமத்தினருடன் மது குடித்து விட்டுஅடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ராஜ்கிஷோர் மது அருந்திவிட்டு உறவினர்களுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது மிகுந்த கோபமடைந்த அவரது உறவினர்கள் ராஜ்கிஷோரை ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். […]
பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு வசதியான 150 மீட்டர் நீள சுரங்க பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். காஷ்மீரில் உள்ள ஹிராநகர் செக்டாரில் சர்வதேச எல்லையை ஒட்டி பயங்கரவாதிகள் கட்டிய சுரங்கப் பாதையை கண்டுபிடிப்பதற்காக எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சர்வதேச எல்லையான போமியான் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளனர். இந்த சுரங்கப் பாதையின் மறுமுனையானது பாகிஸ்தான் பகுதியில் முடிவடைகிறது. இதனையடுத்து பாதுகாப்பு படை […]
இண்டிகோ மானேஜர் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் இண்டிகோ அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில் ரூபேஷ் என்பவர் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது வீடு புனைசாக் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் இருக்கிறது. இந்நிலையில் பணிமுடிந்து ரூபேஷ் அந்த அபார்ட்மெண்டுக்கு எதிரில் காருக்குள் இருந்த போது, திடீரென மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி […]
தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தையுடன் ஒரு பெண் சண்டையிட்டு உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பட்கவா தேயிலை தோட்டத்திற்கு ஒரு பெண் பணிக்குச் சென்று இருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த சிறுத்தை அவரை தாக்க முயன்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் ஆயுதமின்றி, வெற்று கரங்களுடன் அந்த சிறுத்தையுடன் சண்டை போட முயன்றார். இதனையடுத்து சுமார் பத்து நிமிட போராட்டத்திற்கு பின் அந்த சிறுத்தை அவரை தாக்குவதை […]
10 பச்சிளம் குழந்தைகள் பலியான பந்த்ரா மருத்துவமனைக்கு மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இன்று நேரில் செல்லவிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பந்த்ரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு கடந்த 9ஆம் தேதி, அதிகாலை 1:3௦ மணிக்கு குழந்தைகள் சிறப்பு பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில் 1௦ பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக இறந்து விட்டன. ஆனால் அதிஷ்டவசமாக 7 குழந்தைகள் உயிருடன் […]
திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவையானது வருகின்ற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் துவங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை வேளையில் சுப்ரபாத சேவை நடைபெறும். ஆனால் இந்த சேவையானது மார்கழி மாதத்தில் மட்டும் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக தமிழில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வருகின்ற புதன் கிழமை மார்கழி மாதமானது நிறைவு பெற்றாலும் வியாழக்கிழமை அன்று […]
சீரம் இன்ஸ்டியூட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு விநியோகமானது இன்று முதல் துவங்குகிறது. கொரோனா தடுப்பூசியான, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசியையும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியையும் மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டீட் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய […]
மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயத்தை குடித்த 10 பேர் உயிரிழந்த நிலையில், மீதி உள்ளவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் பஹவாலி மற்றும் மன்பூர் போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் 18 க்கும் அதிகமான ஆண்கள் அறியாமல் விஷ சாராயத்தை குடித்து உள்ளனர். எனவே விஷ சாராயம் அருந்திய அனைவருக்கும் இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து 1௦ பேர் உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த […]
ஆந்திராவில் மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி மாடு விடும் விழா மற்றும் சேவல் சண்டை போன்ற போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது ஆந்திர பிரதேச மாநிலத்தில் மகா சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேவல் சண்டை மற்றும் ஜல்லிக்கட்டு நடப்பது போல, அங்கும் சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா போன்ற போட்டிகளுக்கு அம்மாநில […]
கொரோனா தடுப்பு ஊசி மருந்தான கோவாக்சினை சத்தீஸ்கர் மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வருகின்ற 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தொடங்குகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே அனைத்து மாநிலங்களிலும் இந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு போடுவதற்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. இந்நிலையில் இந்த தடுப்பூசியை சத்தீஸ்கர் மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அம்மாநில […]
மாவட்ட ஆட்சியருக்கு நச்சு கலந்த குடிநீர் வழங்கிய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த மாநில காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியிலுள்ள வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமானது கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் குடிநீர்பாட்டில், காபி போன்றவைகளை அலுவலக ஊழியர்கள் கொடுத்தனர். அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு பூர்வா கார்க் தனக்கு கொடுக்கப்பட்ட […]
பக்தர்களைக் கவரும் வண்ணம் திருப்பதியில் அதிக இடங்களில் மரம் வளர்ந்து பசுமையாக்க திட்டத்தை செயல்படுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஊரடங்கு தளர்வு காரணமாக, வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு பின்பு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கும், இறங்குவதற்கும் என இரண்டு பிரத்தியேக சாலைகள் அமைக்கப்பட்டு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடைபயணமாக சுவாமியை தரிசிக்க செல்பவர்களுக்கு ஏற்றவாறு படிக்கட்டுகளும், […]
ஒரு ஆண் ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சட்டப்படி ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒரு ஆண் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தாலோ அல்லது தனது முதல் மனைவி இறந்து விட்டால் மட்டுமே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு. ஆனால் தற்போது இந்த சட்டத்தை மீறி பலதார திருமண நடைமுறை பல்வேறு இடங்களில் […]
காஷ்மீரில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் இன்ஸ்பெக்டர் மற்றும் மூதாட்டி ஆகிய இருவர் உயிரிழந்தனர். காஷ்மீரில் அதிகளவு பனிப்பொழிவு உள்ளதால் சாலைகளும், குடியிருப்புகளும் பனியால் மூடப்பட்டன. இந்நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் எச்.சி. முர்மு என்பவர் ஸ்ரீநகரில் உள்ள முன்னாள் எம்எல்ஏ செய்யது எம் அக்கூன் என்பவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட அதிக பனிப்பொழிவு காரணமாக திடீரென அவரது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் […]