Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா மக்கள் கொண்டாடும் ரியல் சிங்கம்……!!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் நான்கு பேரும் காவலர்களால் என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் எஸ்.பி. சஜ்ஜானார் மக்கள் கொண்டாடும் சிங்கமாக மாறிவிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார். தடயங்கள் எதுவும் காவலர்களுக்கு சிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் குற்றவாளிகள் அவரது உடலின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

23 வயது இளம்பெண்ணுக்கு தீ வைப்பு……… பிழைப்பது கடினம்…… உன்னாவ்வில் சோகம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக இருந்த இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைப்பதற்க்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளன.  உத்திரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் 23 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வனம்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறை அவரை நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகுமாறு கூறியது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்று கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“தெலுங்கானா என்கவுண்டர் மகிழ்ச்சி அளிக்கிறது” நிர்பயா தயார் கருத்து…..!!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நான்கு குற்றவாளிகளும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முகமது பாஷா, சிவா, நவீன், கேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

உபி…..டெல்லி அதிகாரிகளே…….. தெலுங்கானா போலீஸ் பார்த்து கத்துக்கோங்க…….. மாயாவதி கருத்து….!!

உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறை  தெலுங்கானா காவல்துறையை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல்  வன்கொடுமை கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். அதில், உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அம்மாநில அரசு தூங்கி கொண்டிருப்பதாக அவர் விமர்சித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“தெலுங்கானா பாலியல் வழக்கு” என்கவுண்டர் பண்ணிருக்க கூடாது……. பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு கருத்து….!!

தெலுங்கானா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து பிக்பாஸ் பிரபலம் மீராமிதுன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று காலை விசாரணைக்காக நான்கு பேரையும் பிரியங்கா ரெட்டி அவர்களை கொலை செய்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொழுது அவர்கள் தப்ப முயன்றதால் காவல் துறையினர் அவர்களை என்கவுண்டரில் சுட்டுக் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

7 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர் சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் , காஞ்சிபுரம் , கடலூர் , ராமநாதபுரம் , தூத்துக்குடி , […]

Categories
தேசிய செய்திகள்

“காற்று மாசு” விவசாயிகளுக்கு இயந்திரம் வழங்க நடவடிக்கை…… பிரதமர் மோடி உத்தரவு….!!

பயிர்க் கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்குமாறு மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசம் பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிப்பதை டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. விவசாய கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை வாங்க ஹரியானா பஞ்சாப் அரசுகள் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வந்த போதிலும் இந்த பிரச்சனையே அதிகாரிகள் சரிவர கையாளவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் பயிர் கழிவுகள் எரிக்காமல் கையாள […]

Categories
தேசிய செய்திகள்

“அசத்திய BSNL” மீனவர்களுக்கு அதிநவீன தொலைத்தொடர்பு சாதனம்….. மானிய விலையில் வழங்க நடவடிக்கை….!!

ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அதிநவீன தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றை BSNL நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விசை படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தூரம் தெரியாமல் எல்லை தாண்டி செல்வது, புயலில் சிக்கி காணாமல் போவது, அண்டை நாட்டு கடற்படையிடம் சிக்குவது என பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். ஆள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் தரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றதும் செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. தற்போது பயன்படுத்தி வரும் சேட்டிலைட் போனில் […]

Categories
தேசிய செய்திகள்

“நுரையீரல் நோய்” லட்சத்தில் 4000 பேர் பாதிப்பு…… 2300 பேர் உயிரிழப்பு…… ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவில் நுரையீரல் நோயினால் ஆண்டுக்கு 2300 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிக கொடிய நோய்களாக கருதப்படும் காசநோய், எய்ட்ஸ் மலேரியா உள்ளிட்ட நோய்களில் இறப்பவர்களை காட்டிலும், நுரையீரல் சார்ந்த நோய்கள் இறப்பவர்கள் விகிதம் அதிகமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நுரையீரல் அடைப்பு, நுரையீரல் பாதிப்பு, மூச்சு திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் சார்ந்த நோய்களினால் ஆண்டுக்கு 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது.  மேலும் தமிழகத்தில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

தங்கம் வென்றார் மானு பாக்கர்….. முதல் நாளிலே 2 தங்கம் உட்பட 5 பதக்கம்……. இந்திய அணி சாதனை…!!

சீன நாட்டில் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சூடு போட்டியில் இந்தியாவை சேர்ந்த மானு பாக்கர் என்பவர் தங்க பதக்கம் வென்றுள்ளார். சீன நாடான புசௌவில் ஆசிய அளவிலான துப்பாக்கி சூடு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட விபின்,மனிஷா கபூர் ஆகியோர் அடங்கிய ஜூனியர் டிராப் கலப்பு மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. குறிப்பாக மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 244.3 புள்ளிகள் பெற்று இந்தியாவைச் சேர்ந்த மானு […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

18 மணி நேரத்திற்குள்…… கரையை கடக்கும் மஹா புயல்…… தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு….!!

அதிதீவிர புயலாக மாறியுள்ள மஹா புயல் நாளை குஜாத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவான மகா புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து போர் பந்தலுக்கு தென்மேற்கு பகுதியில் 650 கிலோ மீட்டர் தொலைவில்நிலை கொண்டுள்ளது. இந்த புயல் குஜராத்தில் போர்பந்தர் டையூர் இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான மித வேகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பொலிவிழக்கும் தாஜ்மஹால்……. காப்பாத்துங்க….. காப்பாத்துங்க….. கவலை தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள்…!!

காற்று மாசு இல் இருந்து தாஜ்மஹாலை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரும் அடையாளமான தாஜ்மஹால் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மஹால்முழுக்க முழுக்க வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. தற்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக தனது இயல்பான நிறத்தை விடுத்து மஞ்சள் நிறத்தில் மாறி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. இதையடுத்து மரங்களை […]

Categories
தேசிய செய்திகள்

“புதிய வரைபடம்” ஐநா விதிமுறையை மீறியதா இந்தியா…?? பாகிஸ்தான் கடும் கண்டனம்….!!

இந்தியா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரை பிரித்து லடாக் மற்றும் காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய இந்தியவரைபடம் வெளியிடப்பட்டதாக பிரிக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஃசி  ஜம்மு காஷ்மீர் ஆகிய பாகிஸ்தான் பகுதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

5 ட்ரில்லியன் டாலர் இலக்கு…… தொழில் செய்ய இந்தியாவுக்கு வாங்க….. அந்நிய நாட்டாருக்கு மோடி அழைப்பு….!!

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஆதித்யா பிர்லா குடும்பத்தின் சிறப்பு விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். தாய்லாந்தில் பிரபல தொழிலதிபர் ஆதித்யா பிர்லா குடும்பத்தினரின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அதில் முதலீடு செய்வதற்கும் எளிதாக தொழில் புரிவதற்கும்  உலகிலேயே மிகச் சிறந்த இடம் இந்தியா என்று குறிப்பிட்டார். எளிதாக தொழில் செய்வதற்கான சூழல் வாழ்க்கை தரம் உட்கட்டமைப்பு உற்பத்தி திறன் காப்பு உரிமைகளின் […]

Categories
தேசிய செய்திகள்

“ககன்யான் திட்டம்” 19-ல விட்டத 21இல் பிடிப்போம்….. இந்தியாவுடன் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரஷ்யா….!!

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள இந்திய விண்வெளி வீரர்களுக்கு காற்று, நீர், உணவு உள்ளிட்டவை விநியோகிக்கும் பணிகளை ரஷ்யா ஏற்க உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்விண்வெளிக்கு பயணிக்கும் வீரர்களுக்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான  ராகாஸ்மோஸ் பயிற்சி அளிக்க உள்ளது. இதற்காக இஸ்ரோவும் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு எச்சரிக்கை” தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம்……. உளவுத்துறை எச்சரிக்கை….!!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்கள் நிகழ்த்த ஜெய்ஷ்-இ-முகமது லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.  ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தில் திரும்பும் அமைதியை  சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா தளபதி மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினரும் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் லஷ்கர்-இ-தொய்பா தளபதி இந்தியாவில் மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலை சந்திக்க உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இதற்காக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் போரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2 தீவிரவாத அமைப்புகளின் […]

Categories
தேசிய செய்திகள்

3 முக்கிய ஒப்பந்தம்……. பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை…… ராஜ்நாத்சிங் அதிரடி….!!

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உஸ்பெகிஸ்தான்  தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவ மருத்துவமனை கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஒப்பந்தத்தில் உஸ்பெகிஸ்தான் உடன்  கையெழுத்திட்டார். மேலும் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், அதனை மேம்படுத்தவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற சாகி அமைப்பு மாநாட்டிலும் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“JAN-1 முதல்” 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாதா…??? ரிசர்வ் வாங்கி சார்பில் விளக்கம்…!!

வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிவருகின்றன. இதற்கு சரியான விளக்கத்தை தற்பொழுது வங்கிகள் அளித்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதன் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் செல்லாது எனவும் வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வழியா ரைடு முடிஞ்சது…… ரூ800,00,00,000 பறிமுதல்……. ஷாக்கான பக்தர்கள்….!!

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கல்கி  ஆசிரமத்தில் பினாமி சொத்து பரிமாற்றம், கணக்கில் காட்டப்படாத நான்காயிரம் ஏக்கர் நிலம் வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆந்திர  மாநிலம் சித்தூர் அருகே ஆலயத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார். இவர் தன்னை கல்கி அவதாரம் என அறிவித்துக்கொண்டு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதல்…… நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்….!!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு  தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று அவர்களது பதுங்குகுழிகளை அழித்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 6 முதல் 9 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கதார் என்னும்  பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

“கல்கி ஆசிரமத்தில் ரைடு” ரூ33 கோடியா…?? பக்தர்கள் ஷாக்…!!

தன்னைத்தானே கடவுள் என அறிவித்துக்கொண்ட கல்கி விஜயகுமார், ஆசிரமத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 33 கோடி ரூபாய் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரதய பாளையத்தில் கல்கி பகவானுக்கு சொந்தமாக அரண்மனை போன்று பிரம்மாண்ட ஆசிரமம் உள்ளது. எல்ஐசி முகவராக இருந்த விஜயகுமார் என்ற கல்கி பகவானும் அவரது மனைவி புஜ்ஜம்மாவும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்திவருகின்றனர்.அவர்களுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனா். இருவரையும் தரிசனம் செய்ய நுழைவுக் கட்டணமாக ஐந்தாயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

“தொடர் வீழ்ச்சி” 6.1 சதவிகிதமாக குறைந்த இந்திய பொருளாதாரம்…… IMF பன்னாட்டு நிதியம் தகவல்…!!

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6.1 சதவீதமாக இருக்கும் என பன்னாட்டு நிதியம் ஆன ஐஎம்எப் கணித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எப் நிறுவனம்  சார்பில் கணிக்கப்பட்ட நிலையில், அதே நிறுவனம் வளர்ச்சி விகிதத்தை 1.2 சதவீதமாக குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டில் உண்மையான வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக இருந்தது. 2019ல்  6.1 சதவீதமாக இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது. ஆயினும் அடுத்த ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“பிரபல வங்கியில் முறைகேடு” 21,000 போலி கணக்குகள்…… ரூ4,350 கோடி பணம் மோசடி….!!

பிஎம்சி வங்கி முறைகேட்டில் கைதான வங்கியின் முன்னாள் தலைவர் வரியம் சிங்கிடம்  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பிஎம்சி வங்கியில் சுமார் 21,000 போலி கணக்குகள் மூலம் ரூபாய் 4350 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இது தொடர்பாக மும்பை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அதில்  பிஎம்சி வங்கியின் முன்னாள் தலைவர் வாரியம் சிங் அமிர்தசரசில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 12% பேர் சர்க்கரை நோயால் பாதிப்பு….. புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு நீரழிவு என்னும் சர்க்கரை நோய் இருப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. புற்றுநோய் போல் விரைந்து தாக்கி அளிக்காத நோயாக நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் கருதப்படுகிறது. உடலின் ஒவ்வொரு உறுப்பையும் செயலிழக்க செய்யும் சர்க்கரை வியாதி உள்ளிருந்தே கொல்லும் என்பது மருத்துவர்களின் கூற்றாகும். 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் சர்க்கரை நோய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு  முடிவுகளை நேற்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து குறையும் வட்டி விகிதம்…. அச்சத்தில் மூத்த குடிமகன்கள்…..!!

பாரத ஸ்டேட் வங்கியானது மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக குறைந்துவிட்டது. ஓய்வுபெற்ற மற்றும் வயது முதிர்ந்த பலர் வங்கிகள் தரும் வட்டியை தான் வாழ்வாதாரமாக கருதுகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் ஒரு லட்சத்திற்கான முதலீட்டிற்க்கான வட்டி விகிதத்தை 3.50 லிருந்து 3.25 ஆக மாற்றி கால் சதவீதமாக குறைத்த நிலையில், இதர வங்கிகளும் இதனை பின்பற்ற உள்ள நிலையில் முதியவர்கள் கூடுதல் பங்கு சந்தை போன்ற வழிகளை நாட வேண்டிய […]

Categories
தேசிய செய்திகள்

22 ஆண்டு கால போராட்டம்…. விவாகரத்தில் வெற்றி…. உறவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்….!!

22 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு மரணிக்கும் நிலைக்கும் சென்றுவிட்ட திருமண வாழ்க்கையில் சிக்கிய ஒருவருக்கு விவாகரத்து வழங்கி திருமணத்தை ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்து திருமண சட்டம் மற்றும் சிறப்புத் திருமண சட்டத்தின் படி திருமண உறவு முறிவு விவாகரத்துக்கான காரணமாக ஏற்கப்படுவதில்லை. ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் 20 வருடங்களாக பல்வேறு நீதிமன்றங்களில் விவாகரத்து கோரிய நிலையில் அவரது மனைவி உடன்படாததால் விவாகரத்து மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மேல்முறையீட்டு வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

25,00,000 பேர் பாதிப்பு…. 1,09,000 வீடுகள் சேதம்…. 2120 பேர் மரணம்…. 25 ஆண்டுகளில் வரலாறு காணாத இயற்கை பேரிடர்….!!

தென்மேற்கு பருவமழை காலத்தில் நாடு முழுவதும் மழை மற்றும் வெள்ளத்திற்கு 2100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ள நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் நாடு முழுவதும் 2120 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 46 பேர் மாயமாக, 238 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின்படி 22 மாநிலங்களில் 25 இலட்சம் பேர் மழை வெள்ளத்தால் பாதிப்படைகின்றனர். 20 ஆயிரம் கால்நடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ100 கோடி ஒதுக்கீடு” விவசாய தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் அதிரடி திட்டம்…!!

விவசாயத்துறையில் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுறவு தொழில்துறை ஊக்குவிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்திய நாட்டின் 94 சதவிகித விவசாயிகள் கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ள நிலையில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு இடையேயான வர்த்தகம் ஏற்றுமதி உள்ளிட்டவை மூலம் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு சார்பில்  திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்துறை ஊக்குவிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

90% பொருளாதாரா மந்த நிலை….. கடும் வீழ்ச்சி….. இந்தியாவுக்கு சர்வதேச பண நிதியம் எச்சரிக்கை….!!

இந்த ஆண்டில் 90 சதவிகித நாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என கூறியுள்ள சர்வதேச பண நிதியம் இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. அமெரிக்காவின்  வாஷிங்டன் அமைந்துள்ள சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் அதன் பொது இயக்குனரான கிறிஸ்டினா ஜியாஜீவா உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் உலக பொருளாதாரம்  ஒருங்கிணைந்த மந்த நிலையை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர், அமெரிக்கா சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போர் தான் இதற்கு காரணம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிக்கு தடை… பாக் க்கு கண்டனம்… IND VS PAK நீடிக்கும் விரிசல்…!!

மோடியின் வெளிநாட்டு பயணத்தை  தொடர்ந்து  அவர்  பாகிஸ்தான்  வான் வழியாக பறக்க அவருக்கு பாகிஸ்தான்  தடைவிதிக்கபட்டுள்ளதாக  பாகிஸ்தான்  தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு வார சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் புறப்பட்டுச் செல்கிறார். அவரது வெளிநாட்டு பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியே பயன்படுத்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானிடம் அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில் இந்திய பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு தங்கள் நாட்டு வான் வழியை  பயன்படுத்த அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தானின் […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை…. பாக் பிரதமர் கருத்து…!!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.  காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச நாடுகளிடம் எடுத்து கூறியது. எனினும் எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை அவ்வப்போது முன்வைத்து வருகிறது. இதற்கு இடையில் அமைதி நிலவ இந்தியா பாகிஸ்தான் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐநா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவின் அதிசயம்” உலகிலையே இங்கு மட்டும் தான் இந்த அவலம் இருக்கு… உச்ச நீதிமன்றம் அதிருப்தி…!!

இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் முறை நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளது.  இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருள் விஷால் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலான பிறகும் ஜாதி ரீதியிலான பாகுபாடு இன்னும் நீடிப்பதாக தெரிவித்தனர். நாட்டில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் போது ஏற்படும் உயிரிழப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் பிரச்சனை” இந்தியாவிற்கு 28 நாடுகள் ஆதரவு… கதி கலங்கி நிக்கும் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் பிரச்சனையை நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா பாகிஸ்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஐநா பொது குழு கூட்டம் வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே பழக்கத்தை அதிகரிக்கச் செய்து அதை சுட்டிக்காட்டி பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி உள்ளிட்ட 28 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சின்ன தப்புனா பனிஷ்மென்ட் கிடையாது… அபராதம் கிடையாது… மத்திய அமைச்சர் ட்விட்…!!

சிறிய விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பத்தை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு  அளித்திருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். வருமான வரித்துறையினர் கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப பெறுவதற்கு வருமான வரி செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கை விதிகளை தளர்த்த மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித் துறைக்கு செப்டம்பர் ஒன்பதாம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்துள்ளது. பிடித்தம் செய்த தொகையை செலுத்த நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

11 நாட்கள் தான்…. லேண்டருடன் தொடர்பு கொள்ள செய்யப்படும் யுக்திகள்… வெற்றி பெறுமா சந்திராயன்-2…!!

இன்னும் 11 நாட்களுக்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பை மேற்கொள்ள விஞ்சானிகள் மேற்கொள்ளும் யுக்திகள் குறித்து காண்போம்: இப்பொழுது விக்ரம் லேண்டர் நிலவில் எங்கே லேண்ட் ஆக வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அதற்கு அருகிலேயே சாய்ந்த நிலையில் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விக்ரம் லேண்டர் இரண்டு விதமான சப்ளை செய்து வருகிறது. ஒன்று அதன் வெளிப்புறத்தில் சோலார் பேனல்கள் சூரிய கதிர்கள் அதன் மேல் விழும் பொழுது அது ஒரு மின்சார ஆற்றலை வெளிப்படுத்தும். இரண்டாவது அதனுள்ளேயே […]

Categories
தேசிய செய்திகள்

சுரங்ககளுக்கான ஒப்பந்தத்தில் முறைகேடு…. மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றசாட்டு..!!

இரும்புத்தாது மற்றும் பிற கனிம வளங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களுக்கான  மறு ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இரும்பு  தாது உள்ளிட்ட  கனிம வளங்களை வெட்டி  எடுக்கும் 358 சுரங்கங்கள் ஒப்பந்தங்களை 50 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து இருப்பதாக காங்கிரஸ் செய்தி  தொடர்பாளர் பவன் தெரிவித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அவசர சட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாமல்  ஏலமும் நடத்தப்படாமல் சுரங்கங்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியின் 100 நாள் சாதனை…. பட்டியலிட்டு விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்…!!

பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நடுவே மத்திய அரசின் 100 நாள் ஆட்சி நிறைவுக் கொண்டாட்டங்கள் அவசியமா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதற்கான  கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% சரிந்து விட்ட நிலையில் கொண்டாட்டங்கள் அவசியமா என்று காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொருளாதார மந்த […]

Categories
தேசிய செய்திகள்

மோடிஜியின்”FITNESS CHALLANGE” தொடங்கியது புதிய இயக்கம்… இனி ஆட்டம் ஓட்டம் தான்..!!

டெல்லியில் இந்திய மக்கள் FITNESS ஆக இருக்கவேண்டுமென இந்திய உடற்தகுதி இயக்கம் ஒன்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஆகஸ்ட் 29 ஆம் தேதியான இன்று இந்திய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் இவ்வாண்டு வெகு விமர்சையாக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய மக்கள் FITNESS உடன் இருக்க வேண்டும் என்பதற்காக இதற்கு முன் FITNESS CHALLANGE ஒன்றை பிரதமர் மோடி மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சிகரெட் விற்றால் 1 ஆண்டு சிறை… ரூ1,00,000 அபராதம்… மத்திய அரசு அதிரடி..!!

E சிகரெட் விற்றால் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கும் வரைவு அவசரச் சட்டம் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  புகையிலை சிகரெட்டுக்கு மாற்றாக சில நாடுகளில் E சிகரெட் என்று கூறப்படும் மின்னணு சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றனர். இதுவும் உடல் நலத்திற்கு கேடு என்பதால் இதனை தடை செய்ய ஒரு வரைவு அவசரச் சட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. அதன்படி E சிகரெட் உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், வினியோகம் மற்றும் விற்க செய்யவும் தடை […]

Categories
தேசிய செய்திகள்

“நிலவை நோக்கிய பயணம்” 3வது அடுக்கில் இணைந்தது சந்திராயன்-2..!!

சந்திராயன்-2 விண்கலம் நிலவு வட்டப்பாதையில் மூன்றாவது அடுக்கில் வெற்றிகரமாக இணைந்தது. கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2,650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 ,375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது. அதாவது பூமிக்கும் நிலவுக்கும் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“எல்லைக்குள் ஊடுருவல்” 26 பேர் அதிரடியாக கைது… மேற்குவங்கத்தில் பரபரப்பு..!!

வங்க தேச எல்லையில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவ முயன்ற 26 பேரை எல்லை பாதுகாப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது. நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருந்ததன் காரணமாகவும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் நோக்கிலும் கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ந்து இந்திய உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் வங்கதேச எல்லையில் இருந்து 26 பேர் மேற்கு […]

Categories
சினிமா டெக்னாலஜி தமிழ் சினிமா தேசிய செய்திகள் பல்சுவை வைரல்

ஹேஷ்டேக் பட்டியலின் முதலிடத்தில் தமிழ்ப்படம் … தல யின் விஸ்வாசம் அடிச்சு தூக்கியது ..!!

டீவீட்டரின் ஹேஷ்டேக் பட்டியலில் தமிழ் சினிமா திரைப்படம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது . ஹேஷ்டேக்கின்  12 ஆவது பிறந்த தினமான நேற்று , பிறந்தநாளையொட்டி  சமூக வலைத்தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலை டிவீட்டர்  வெளியிட்டது . இந்த பட்டியலில் ஜனவரி 1, 2019 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Viswasam முதலிடம் பிடித்துள்ளது . இந்நிலையில் , தமிழ் சினிமாவின்  திரைப்படமான விஸ்வாசம் இந்த […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அடேங்கப்பா இவ்ளோ கம்மி விலையில் 5g ஸ்மார்ட்போனா ?

நோக்கியா நிறுவனம் தனது  5ஜி ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளது . நோக்கியா நிறுவனத்தின்  5ஜி ஸ்மார்ட்போனை ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனமானது உருவாக்கி வருகிறது. இந்த  5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படலாம்  என நோக்கியா அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்துள்ளார். தற்போது ,பல்வேறு  ஸ்மார்டபோன் நிறுவனங்கள்  புதியதாக 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வரும் நிலையில், ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைவாக நிர்ணயிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் ,  அமெரிக்கா, சீனா, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இலக்கோ 2… அடைந்ததோ 3… கோடியில் புரளும் பாஜக..!!

பாஜகவில் 2 கோடி புதிய உறுப்பினர்கள் என்ற புதிய இலக்கை முறியடித்து தற்போது மூன்று கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்திருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 2019-20க்கான உறுப்பினர் சேர்க்கை குறித்து  விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் ஆறாம் தேதி முதல் செபடம்பர் மாதம்  20ம் தேதி வரை நாடு முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டது. அதில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் பயணித்த பாஜக […]

Categories
தேசிய செய்திகள்

“AUG_15” தாக்குதல் நடத்த திட்டம்… நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு..!!

சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்தியா முழுவதும் உச்சகட்ட பாதுக்காப்பு ஏற்படு செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் 73 ஆவது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொட ர்ந்து  தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லி செங்கோட்டையில் குண்டு […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் அமைதியை கடைபிடியுங்கள் … அமெரிக்கா அறிவுரை ..!!

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் காஷ்மீர் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் இரு நாடும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும்  கூறினார் .  காஷ்மீர் பிரச்சினை என்பதை இந்தியா பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு பிரச்சினை என்ற தங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீர் பிரச்சனையில் இருதரப்பு பேச்சுவார்த்தை உதவ தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஏற்கனவே தெரிவித்த நிலையில் , அது இரு தரப்பு பிரச்சனை என்றும் காஷ்மீர் தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படை உஷார்நிலை … பாகிஸ்தான் ஊடுருவ முடியாது ..!!

இந்தியா மீது மீது பாகிஸ்தான்  தாக்குதல் நடத்தும்  என்ற உளவுத் துரையின் எச்சரிக்கையை அடுத்து இந்திய கப்பற் படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது .  அண்மையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையிலான சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டது. இதனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தூதரக உறவை முறித்துக் கொண்டது . இதன்பின் , காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக பாகிஸ்தான் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுக்காக பாட்டு பாடிய தோனி… உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பாட்டு பாடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து விடுமுறை எடுத்துள்ளார். ராணுவ சேவையில் உள்ள அவர் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வீடியோ காட்சிகளும் பொழுதுபோக்கு வீடியோ காட்சிகளும் அவ்வப்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா மக்களால் உருவாக்கப்பட்டது, நிலத்தால் அல்ல.. காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி ட்விட்..!!

இந்திய நாடு அதன் மக்களால் உருவாக்கப்பட்டது, நிலத்தால் அல்ல என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை  நீக்க கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று இம்மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இது குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Categories
இராணுவம் தேசிய செய்திகள்

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் … பலியான ராணுவ வீரர் ..!!

காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர்  உயிரிழந்தார்.  காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி நெடுகிலும் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை ரஜோரி மாவட்டத்தில் டெல்டார், பியூக்கிய,சுண்டர்பணி, குரு செக்டார் உள்ளிட்ட இடங்களிலும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரரான நாயக் கிஷன் லால் […]

Categories

Tech |