வெள்ளைப் பூசணியின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொரோனா பாதிப்பு நமக்கு பல இன்னல்களை தந்தபோதிலும், நம்மை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விஷயம். சமீபத்தில் துரித உணவுகள் எனப்படும் பாஸ்ட்புட் சாப்பாடு சாப்பிடாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். கூல்ட்ரிங்க்ஸ் குடிக்காமல், பழச்சாறுகளை அருந்தி ஆரோக்கியத்தை கடைபிடித்து வருகிறோம். அந்தவகையில், வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின் பி, சி, கால்சியம், […]
Tag: #Nature
கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கருஞ்சீரகம் இயற்கையாகவே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. இந்த கருஞ்சீரகத்தை பொடியாக அரைத்து நாம் உண்ணும் பல உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொண்டால் இயற்கையாகவே நாம் ஆரோக்கியமாக வாழலாம். உதாரணமாக கருஞ்சீரகத்தின் பொடியை தேன் அல்லது நீரில் கலந்து குடித்தால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும். அதேபோல் கருஞ்சீரகத்தின் தைலம் தலைவலி, ஜலதோஷம், இடுப்பு வலி , நரம்பு பற்றிய வலி உள்ளிட்ட வலிகளுக்கு […]
செலவின்றி எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யலாம். ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதனால் அனீமியா ஏற்படுகிறது. இதன் காரணமாக நம் உடலில் பல நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் சோர்ந்துபோய் எதையுமே செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பார்கள். அதே மாதிரி படிக்கும் மாணவர்களுக்கு படிக்க தோன்றாது,தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்குவாங்க. எனவே உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். எனவே ஹீமோகுளோபின் அதிகரிக்க […]
ஈரோட்டில் கெட்டி சமுத்திரம் ஏரியில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து இனிமையாக கூச்சலிட்டு வருவதை அப்பகுதி மக்கள் கேட்டு ரசித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த பர்கூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கெட்டி சமுத்திரம் ஏரியானது சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது சமீபத்தில் 9 ஆண்டுக்கு பின் முழு கொள்ளவை எட்டியது. இதை எண்ணி அப்பகுதி மக்கள் சந்தோஷம் அடைந்தனர். வெளிநாட்டு பறவையான செங்கல் நாரை உள்ளிட்டவை ஏப்ரல் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஏரியை […]
வீட்டிலேயே ஒரு சில எளிய மருத்துவங்களை இயற்கையாக மேற் கொள்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். சுத்தமான பசும்பாலில் வெண்தாமரை மலர்களைப் போட்டு வெதுவெதுப்பாக காய்ச்சி அதில் வரும் ஆவியை கண்ணில் விட்டால் கண் தொடர்பான நோய்கள் அதிக அளவில் குணமாக வாய்ப்புண்டு. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடனடியாக வயிறு சுத்தமாகும். பெரும்பாலானோர் தற்போது அவதிப்படும் ஒரு பிரச்சனை உடல் சூடு. வெயில் […]
பேரிச்சம் பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். உடலில் சத்து அதிகரிக்க பாலுடன் சேர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடலாம் என்று பலர் அறிவுரை கூறி கேட்டிருப்போம். பேரிச்சம் பழத்தில் பல நன்மைகள் அடங்கி இருக்கிறது. அது குறித்து விரிவாக காணலாம். தினமும் குறைந்தது இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவது நன்மை தரும். இதில் இயற்கையாகவே குளுக்கோஸ், பிரக்டோஸ், சர்க்கோஸ் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் என்பது இருக்காது. […]
சில காய்கறிகளின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். முட்டைக்கோஸ் சாறு அருந்தி வந்தால் வயிற்றுப்புண் நீங்கும். தக்காளி சாறுடன் தேன் கலந்து அருந்தினால் ரத்தம் சுத்தமாகும். கத்தரிக்காய் பசியைத்தூண்டும் ரத்தத்தை தூய்மையாக்கும்.
முளைகட்டிய பயிரின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். முளைகட்டிய பயிர் பொதுவாக ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நமக்கு தெரிந்ததே இருப்பினும், அதனுடைய மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். முளைக்கட்டிய பயிறு உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்து ரத்த ஓட்டத்தை சுத்திகரித்து சீராக்கும் தன்மையை ஊக்குவிக்கும். தானிய ஒவ்வாமையை குறைக்கிறது. செரிமானத்தை அதிகரிக்கும் சக்தி அதிகமாக இருக்கிறது. இதன் மூலம் செரிமானம் எளிதாக இருக்கும். உடல் எடையை குறைக்க […]
ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் எதிர்ப்பு சக்தியை பெருக்கி ஓரளவு நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் ஏ ,பி, சி ,டி மற்றும் புரோட்டீன், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெறமுடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் ஏ சத்து அளிக்கும் பழங்கள், கிழங்குகள், புதினா போன்றவை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு உடலில் ரத்த அணுக்களில் […]
மக்கசோளத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்திதொகுப்பில் காண்போம். மக்காச்சோளத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை தீர்க்கும் உணவாக மக்காச்சோளம் அமைகிறது. மேலும் நீரிழிவு நோய்க்கும் இது மிகச்சிறந்த உணவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டால் நோய் குணமாக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீரை பெருக்கும் சக்தி மக்காச்சோளத்துக்கு இருப்பதன் காரணமாக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து சிறுநீராக மாற்றி, வெளியேற்றி உடலுக்கு நன்மை பயக்கிறது. கொழுப்பை கரைத்துவிடும் சக்தி இதற்கு இருப்பதால் இதய […]
பார்ப்பதற்கே விசித்திரமான தோற்றமுடைய பூச்சி ஒன்றின் வீடியோ வைரலாகியுள்ள நிலையில், அது என்ன உயிரினம் என்று இணையவாசிகள் சிந்தித்து கொண்டிருக்கின்றனர். வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் (parveen kaswan) என்பவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பச்சை நிற பூச்சி ஓன்று வலைகளால் பின்னப்பட்டது போன்ற உடல் அமைப்புடன் பார்ப்பதற்கே விசித்திரமான உடல் அமைப்புடன் காணப்படுகிறது. மேலும் அந்த பூச்சி மரத்தின் மீது மெதுவாக ஏறுவதை காட்டுகிறது. அத்துடன் அவர், இது போன்ற பூச்சி இனத்தை இதுவரை […]
குழந்தைகள் பல நாட்கள் ஆகியும், வளர்ந்தும் சரியாக பேசவராத நிலையில் இருப்பார்கள், அவர்களுக்கு இவ்வாறு செய்தல் திக்குவாய் சரி ஆகிவிடும்… நாம் பிறருக்கு சொல்ல வேண்டிய சொற்களை தெளிவாகவும், சீராகவும், கோர்வையாகவும் சொல்ல இயலாது, ஒரு மனிதன் தன் எண்ணத்தை சொற்களின் மூலம் வெளிப்படுத்த இயலாது போராடும் அவல நிலையை நாம் திக்குவாய் என்று கூறுகிறோம். திக்குவாய் பிரச்சினை என்பது உடல் நலனோடு மனநலமும் சேர்ந்த விசயம். நமது உடல் உறுப்புகளுக்கும், மூளைக்கும் அருமையான ஒத்திசைவு இருப்பதால் […]
தொடர்ந்து விக்கல் எடுக்கிறதா ? இதை செய்யுங்கள்: துளசி : துளசி இலைகள் சிறிது எடுத்து வாயில் பூட்டு மென்று வந்தால், விக்கல் தீர்ந்து விடும். துளசி இலைகள் கிடைக்கவில்லை என்றால், துளசி தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிப் பயன்படுத்தலாம். மூச்சடக்குதல் : விக்கல் எடுக்கும் நேரத்தில், மூச்சை நன்கு ஆழமாக உள்ளே இழுத்து, கொஞ்சம் நேரம் மூச்சுக் காற்றை உள்ளேயே வைத்திருந்து, பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம், விக்கலைப் போக்கலாம். […]
உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளது. நாம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையைத்தான் அதிகம் சேர்க்கிறோம்.கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்து விடாதீர்கள்.உணவுடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும். கறிவேப்பிலை பல வியாதிகளை தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் அளிக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. * பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை போக்கும். கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும். குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் […]
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 18 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவர் இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை அடுத்த இளைய நயினார் குப்பத்தை சேர்ந்தவர் சுந்தரம். விவசாய தொழில் செய்து வரும் இவர், தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் கேழ்வரகு கம்பு போன்ற தானியங்களையும் சாகுபடி செய்து வருகிறார். இந்த பயிர்களுக்கு கால்நடைகளின் கழிவுகளையும், தாவரங்களையும் போட்டு இயற்கையான உரம் […]
நம் உடலில் உள்ள பல நோய்கள், நம் வயிற்றில் இருந்துதான் தொடங்குகிறது…!!! காலையில் வெறும் வயிற்றில் நாம் என்ன சாப்பிடுவது, எதை சாப்பிடக் கூடாது❓ காலை கண் விழிக்கும் நேரத்தில் காபியுடன் தான் பலருக்கு அன்றைய நாள் விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது. என செய்கின்றனர். காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று […]
வாய்ப்புண் இருக்கிறதா இதை செய்யுங்கள்.. விரைவில் குணமாகி விடும்.! வாய்ப்புண், ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாய்ப்புண். வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த உணவையும் சாப்பிட முடியாது புண் உள்ள பகுதியில் உணவுப்படும் போது எரிச்சல், வலியும் ஏற்படும் எனவே இந்த […]
ஆமணக்கு வேரை தேன் கலந்து பிசைந்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்து வர தேவையற்ற ஊளைச் சதை குறைந்து உடல் மெலியும். ஆமணக்கு வேரை நிழலில் உலர்த்தி தூள் செய்து சம அளவு சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை அளவு காலை மாலை இருவேளை உட்கொண்டு வர உடல் வலி குறைவதுடன் மூளையும் வலுவடையும். சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட்டுவர உடல் உஷ்ணத்தால் உண்டான கண் […]
நல்வாழ்வுக்கு எளிய உடல்நல குறிப்புகள்:நலம் தரும் 40 குறிப்புகள்: 1.நீங்கள் மலம் கழிக்கும்போது பற்களை ஒன்றோடு ஒன்று நன்றாக மூடிக் கொள்ள வேண்டும், இந்த எளிய ஆயுர்வேத முனை முதிர் வயதில் பற்கள் தளர்த்தப்படுவதை தடுக்கிறது. மற்றும் பல கண் மற்றும் காது குறைபாடுகளை தடுக்கிறது. 2. கால் தசை பகுதியில் வழக்கமான மசாஜ் செய்தால், அஜீரணச் சிக்கல்களைச் சரி செய்ய உதவும். 3.முதல் 30 நாட்களுக்கு திராட்சை பழங்களின் சாறு தினசரி குடித்தால் தலைவலி குணப்படுத்த […]
வெந்தயம் நம் உடல் ஆரோக்கியத்திற்கும், தலை முடிக்கும் மட்டுமில்லாமல் சருமத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கொடுக்கும். எளிமையான முறையில் வீட்டிலே நமது சருமத்தை பராமரிப்பதற்கு வெந்தயத்தை பயன்படுத்தலாம். நமது அழகு இன்னும் அதிகரிப்பதற்கு நிறைய செலவு இல்லாமல் வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரிஞ்சிக்கப்போறோம்…!!!! சருமத்துளைகள்: வெந்தயம் கூட கொஞ்சம் பால் சேர்த்து நல்லா பேஸ்ட் மாதிரி அரைத்து கொள்ளவேண்டும். அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து நன்கு […]
உருளைக்கிழங்கின் நன்மை என்னனு தெரியுமா உங்களுக்கு ? மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு ஏராளமான சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக் கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாக்க கூடிய இந்த உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், தாது உப்புகள், அதிகம் இருக்கிறது. இந்த கிழங்கு அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் உள்ளது போன்று அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. நமது உடலில் உள்ள புளித்த அமிலங்களை […]
*தக்காளி சாறு ஒரு டீஸ்பூன் ,எலுமிச்சை சாறு ஒன்றரை டீஸ்பூன் ,இரண்டையும் கலந்து கண்களில் உள்ள கருவளையத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும் .இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் . *உருளைக்கிழங்கை கழுவி தோலுடன் துருவி சாறெடுத்து ,அந்த சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழித்து பஞ்சை எடுத்தால் கண்களில் கருவளையம் மறையும் . *பாதாம் […]
வலியே இல்லாமல் 15 நிமிடத்தில் பிரசவமா ?எந்த ஊசியும் தேவை இல்லை இத மட்டும் பண்ணுங்க …. 1.குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கத்தான் இலை கொண்டு அதிக அடர்த்தியுடன் பற்று போட்டால், பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் குழந்தை சுகமாக பிறக்கும் . 2.முடக்கத்தான் செடியின் பூ ,காய் ,இலை ,வேர் முதல் மருத்துவ குணமுடையது . 3.கருமையான நீளமான கூந்தல் வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது,என்பது நம்மில் பலருக்கு தெரியாது […]
பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மாமரத்து பட்டையில் இருந்து வரும் மாமர பாலை தினந்தோறும் தடவி வந்தால் பித்தவெடிப்பு மறையும் . விளாமர இலைக்கஷாயம் அருந்தலாம் .அரச மரத்தில் இருந்து வரும் பாலை வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம் . பீர்க்கங்காய் இலையுடன் சுண்ணாம்பு அரைத்து பித்தவெடிப்பு உள்ள இடத்தில தடவலாம் . கால் ஆணி குணமாக ,செந்தூர கட்டியை எடுத்து காலில் தேய்த்துவந்தால் ரத்தம் வடிவது நிக்கும்.ரத்தம் வரும் பகுதியில் மஞ்சளையும் அரைத்து பூசலாம் .இவ்வாறு செய்யும்போது […]
இயற்கை நமக்கு அளித்த பொக்கிஷங்கள் போதுமானது : 1.வசம்பு 2.கடுக்காய் 3.மாசிக்காய் 4சித்தரத்தை 5.ஜாதிக்காய் 6.சுக்கு 7.மஞ்சள் எப்படி உபயோகபடுத்துவதுனு பாக்கலாமா? இவைகளை ஒரு கப் தண்ணீரில் அல்லது தாய்ப்பாலில் கொதிக்கவிடவும் .அரை கப் அளவு தண்ணீரை வற்ற வைத்து அதில் உள்ள மருந்துகளை நிழலில் உலர்த்தி எடுத்து வைக்கவேண்டும் . பின்னர் அந்த மருந்துகளை உரைக்கல்லில் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரை கல்லில் உரசி […]
சென்னையில் இயற்கையின் மீது கொண்ட காதலின் காரணமாக தனது வீட்டில் 350க்கும் மேற்பட்ட மருத்துவ குண செடிகளை 35 வருடங்களாக வளர்த்து வீட்டை பசுமைகுடிலாக மாற்றியுள்ளார் ஜஸ்வந்த்சிங். சென்னை முகப்பேர் அருகே வசித்து வருபவர் ஜஸ்வந்த் சிங். இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வீட்டில் 350க்கும் மேற்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த செடிகளை பராமரித்து வளர்த்து வருகிறார். மருத்துவச் செடிகளோடு, பழம், காய்கறிகளை வழங்கும் செடிகளையும் அவர் வளர்த்து வருகிறார். மேலும் வீட்டின் மாடியில் […]
மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை ஒரு கிலோ ரூபாய் 20 என பொதுமக்களிடம் விற்பதற்கு சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி உட்படுத்தப்பட்ட 15 மண்டலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 4,930 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதிலிருந்தே நாள் ஒன்றுக்கு மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் தெரிந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் 160 டன் இயற்கை உரத்தை பொதுமக்களுக்கும் மாநகராட்சி பூங்காக்களுக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீதமுள்ள உரங்களையும் இனி […]
ராமேஸ்வரத்தில் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 829 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் கடல் பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக கடல் வளம் சார்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாம்பன் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இருந்த நாட்டு […]
ஆந்திர மாநிலத்தில் கனமழை வெள்ளம் காரணமாக கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. சில நாட்களுக்கு முன் மும்பையில் பெய்த கனமழையால் வெள்ளம் வந்து அதிக சேதத்தை ஏற்படுத்தியது. அதேபோல் தற்போது பல மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது . அதில் குறிப்பாக ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் கனமழை காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட புத்த சிலை, யானை சிலை, மற்றும் ஒட்டகச்சிவிங்கி சிலை தண்ணீரில் […]
முகப் பருக்களை நீக்க…..
முகப் பருக்களை நீக்க உதவும் எளிமையாக வழி முறைகள் சில … முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது பயிற்றம்பருப்பு மாவு கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெறும் . இதனை வாரம் இரண்டு முறை செய்து வர வேண்டும். அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் பரு மற்றும் தழும்புகள் படிப்படியாக மறைந்துவிடும். ஆரஞ்சு பழச்சாறை, முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற விட்டு பிறகு துடைத்து விட்டால் நல்ல பலனை […]
வேப்பிலையை கொண்டு எளிய முறையில் கரும்புள்ளிகளை அகற்றுவது எப்படி என பார்ப்போம் . வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, சேகரித்துக் கொள்ள வேண்டும் .தினமும் […]
இரவு தூங்கும் முன் எளிதான சில முறைகளை பின்பற்றி நமது முகத்தினை பளபளக்கச்செய்ய முடியும். இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு சருமம் அழகாக மாறும் . இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த […]
இயற்கையான முறையில் கடலை மாவை பயன்படுத்தி முகத்தின் நிறத்தை மாற்றி பள பளக்க செய்வது எப்படி என காணலாம் . ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும்.சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும் .அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேஷியல் செய்து கொண்டால் முகம் தெளிவு பெறும். மேலும் இதனுடன் எலுமிச்சை சாறு ஊற்றி பேக் செய்தாலும் எண்ணெய் […]
தமிழகத்தின் தென்மேற்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது . தென் தமிழகத்தில் மேற்கே உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பல மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் சுட்டெரிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில் அதிகமாக […]