Categories
தேசிய செய்திகள் வானிலை

ஃபானிக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு !

ஒடிசாவில் ஃபானி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ,பானி புயலால் பாதிக்கப்பட்ட பூரி நகரின் சாலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசா அரசு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்  ஒரு லட்சம் பேர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. முதலமைச்சர் நவீன் பட்நாயக், பாதிக்கப்பட்ட மக்களுக்கு,  நிவாரணத் தொகை, உணவு ,உறைவிடம் போன்றவற்றை அறிவித்துள்ளார். இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக கூடியுள்ளது .

Categories

Tech |