மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறை அகச்சிவப்பு அடிப்படையிலான (Infrared based) வெப்பநிலை சென்சாரை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கப்பல்துறைக்குள் நுழையும் பணியாளர்களை திரையிடுவது அவசியம் என்று கடற்படை தெரிவித்துள்ளது. 285 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை கப்பல்துறையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 20,000 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கப்பல்துறைக்குள் நுழையும் அனைவரையும் வெப்பநிலை பரிசோதனைக்கு உள்ளாக்குவது […]
Tag: Navy
இந்தியா மீது மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் என்ற உளவுத் துரையின் எச்சரிக்கையை அடுத்து இந்திய கப்பற் படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது . அண்மையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையிலான சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டது. இதனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தூதரக உறவை முறித்துக் கொண்டது . இதன்பின் , காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக பாகிஸ்தான் […]
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற முன்னாள் துணை அதிபர் அவரது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார் . மாலத்தீவிற்கு கருங்கல் இறக்கிவிட்டு தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு திரும்பிய விர்கோ என்ற இழுவை கப்பலில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் சட்டவிரோதமாக நுழைந்தார் . இந்த இழுவை கப்பல் நடுக்கடலில் வந்தபோது நேற்று முன்தினம் அதிகாலை தூத்துக்குடி கடலோர காவல் படையினர் மறித்து சோதனை செய்தனர் . அதில் மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் […]
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர் . துரைசிங்கம் என்பவருக்கு உரிமையான படகில் நாகராஜ், பெனடிக்ட், இன்னாசி உள்ளிட்ட ஏழு பேர் நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.அப்போது எதிர்பாரத விதமாக படகு எந்திரகோளாறு ஏற்பட்டு திசை மாறி செல்ல, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 7 மீனவர்களையும் எல்லை தாண்டிமீன்பிடித்ததாக கூறி படகுடன் சிறைபிடித்தனர். பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லபட்ட […]
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் விதமாக சாகர் கவாட்ச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியானது தமிழக கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்திய எல்லை பகுதிகளுக்குள் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும், கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஆண்டுதோறும் சாகர் கவாட்ச் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இவ்வாண்டு சாகர் கவாட்ச் நிகழ்ச்சியானது தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி கடற்கரை முதல் வேம்பார் கடற்கரைப் பகுதி வரை காலை […]
எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்ப்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி நாகைப்பட்டினம் கோடியக்கரை கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 18 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் குற்றம் சாற்றப்பட்டு கைது செய்ப்பட்டனர். இதையடுத்து இவ்வழக்கு பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உத்தரவிட்டனர். இதனால் மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.