Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு ஆதரவுக்கரம்… அஜித் பவாரின் பதவி பறிப்பு!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் ஒப்புதல் இல்லாமல் பாஜகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அஜித் பவாரின் சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று பாஜக, தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரும், சரத் பவாரின் மருமகனுமாகிய அஜித் பவார் தான் ஆட்சியமைக்க பாஜகவுக்கு உதவியுள்ளார். இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்கள் மீது பாஜக துல்லியத் தாக்குதல்”… ஒன்று சேர்ந்துவிட்டோம்… எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிரா மக்கள் மீது பாஜக துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா அரசியல் திருப்பம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா காங்கிரஸ் தலைவர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சரத் பவார், ‘கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸிடம் எண்ணிக்கை இருந்தது. மொத்தம் 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவை எங்கள் கூட்டணி பெற்றிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இன்று காலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”… பட்னாவிஸின் பழைய ட்வீட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

தேசியவாத காங்கிரஸுடன் ஏற்பட்ட கூட்டணியால் மீண்டும் மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸின் பழைய ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது. மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக நடைபெற்ற அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், யாரும் எதிர்பாரா விதமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் தேவேந்திர ஃபட்னாவிஸே பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வு தேசியவாத […]

Categories
தேசிய செய்திகள்

’எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி பதவியேற்ற அஜித் பவார்’ – NCP மூத்தத் தலைவர் பகீர்.!

அஜித் பவார் எம்.எல்.ஏ.க்களிடம் வருகைப் பதிவேட்டில்(MLA Attendance) கையெழுத்து வாங்கிவிட்டு, அதனை பதவியேற்றுக் கொள்வதற்காக தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் நவாப் மாலிக் பகீர் தகவலை கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளது. சிவசேனாவுக்கு நேற்று வரை ஆதரவு அளித்து வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி, இன்று பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு தற்போது விடையளிக்கும் விதமாக […]

Categories

Tech |