சிகிச்சைக்காக லண்டன் வந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவரை சுட்டுக் கொல்லுமாறு வலியுறுத்தப்பட்டது. பானாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிஃப், சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் பேட்ரியாட்டிக் ஃப்ராண்ட் ( Pakistan Patriotic […]
Tag: Nawaz Sharif
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் உடல்நிலை கவலைக் -கிடமாக உள்ளது என பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல் நவாஸ்) கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, மருத்துவச் சிகிச்சைக்காக அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. கவலைக்கிடமான நிலையில் 2 வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றுவந்த […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மகளான மரியம் நவாஸுக்கு லாகூர் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சவுத்ரி சர்க்கரை ஆலை பணமோசடியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அக்.31ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நாவஸின் மகள் மரியம் நவாஸ் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கில் […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு ரத்த தட்டணுக்கள் குறைபாடு உள்ளது. இதனால் அவர் கடந்த மாதம் (அக்டோபர்) 22ஆம் தேதி, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரது குடும்ப மருத்துவர்களும் இத்தகவலை தெரிவித்திருந்தனர். […]