நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன் என்று எம்பி கனிமொழி கிண்டலாக ட்விட் செய்துள்ளார். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று சென்னை பெசண்ட் நகர் இரண்டாவது அவெனியூவில் பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாலைகளில் கோலங்கள் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கோலத்தில் Against CAA, Against NPR, NO TO NRC, […]
Tag: NCR
தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்ததால் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். கேரளா, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்கள் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். […]
சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோலம் போட்ட 5 பேரை தடுத்து அழைத்துச் சென்ற போலீசார் பின்னர் விடுதலை செய்தனர் சமீபத்தில் பாஜகவின் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது. […]
டெல்லியில் போராட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட்டுள்ளது. புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு எங்கிலும் பல்வேறு போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கமாநிலத்தின் சில இடங்களில் இதுவரை இச்சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் ஏற்பட்டுள்ளன. மேலும்,வியாழக்கிழமை அன்று திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிராக பீகாரில் இடதுசாரி கட்சிகள் சார்பாக முழு அடைப்பு அறிவித்துள்ளன, மும்பை மற்றும் நாட்டின் […]