Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எந்த பாதிப்பும் இல்ல… குட்டியுடன் உலா வந்த யானை… சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படம்…!!

வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை சாலையில் தனது குட்டியுடன் உலா வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பலா மரங்களில் உள்ள பழங்களை உண்பதற்காக காட்டுயானைகள் அப்பகுதிக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இந்நிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று தனது குட்டியுடன் அங்கும் இங்கும் நடந்து சென்றுள்ளது. இந்த யானையை பார்த்த உடன் வாகன ஓட்டிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதற்காக ரெடி பண்ணது…. அழுகிய ரோஜா மலர்கள்… வருத்தத்தில் பணியாளர்கள்…!!

கன மழை பெய்ததால் பூங்காவில் உள்ள ரோஜா மலர்கள் அழுக ஆரம்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ரோஜா பூங்காவில் தற்போது 4201 ரகங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 500 ரோஜாக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த ரோஜா பூங்காவிற்கு கோடை சீசனை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணத்தால் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது பூத்து குலுங்கிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நோய் தொற்று தடுப்பு வழிமுறைகள்…. பின்பற்றாத மின்வாரிய அதிகாரிகள்…. அபராதம் விதித்த மாவட்ட கலெக்டர்….!!

கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத காரணத்திற்காக மின்வாரிய அதிகாரிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டு குப்பை என்ற பகுதியில் புதிய மின் திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு சுரங்கப்பாதை அமைத்து மின் உற்பத்திக்காக நவீன எந்திரங்கள் பொருத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த கரடி…. பீதியடைந்த குடும்பம்…. வேண்டுகோள் விடுத்த பொதுமக்கள்….!!

பட்டப்பகலில் வீட்டிற்குள் கரடி நுழைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் பணங்குடி கிராமத்தில் வசிக்கும் ராமர் என்பவரது வீட்டுக்குள் பட்டப்பகலில் கரடி ஒன்று புகுந்து விட்டது. இதனையடுத்து அந்த கரடி வீட்டில் ஏதேனும் உணவு இருக்கின்றதா என சுற்றி பார்த்துள்ளது. அந்த சமயத்தில் வீட்டில் இருந்தவர்கள் மற்றொரு அறையில் இருந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு அறிவித்த முழு ஊரடங்கு…. மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்…. கட்டுப்பாட்டை பின்பற்ற தவறிய பொதுமக்கள்….!!

காலை 10 மணி வரை மார்க்கெட் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொது மக்கள் கூட்டமாக குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்து விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் ஊட்டி பகுதிகளில் அமைந்துள்ள […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென பெய்த கனமழை…. பலமாக வீசிய சூறைக்காற்று…. கோரிக்கை விடுத்த விவசாயிகள்….!!

காற்றுடன் பெய்த கனமழை காரணமாக கோடைகால பயிர்கள் நாசமாகி விட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக கன மழை பெய்துள்ளது. இதனால் வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. ஆனால் அங்கு வீசிய பலத்த காற்றில் பல மின்கம்பிகள் அறுந்து மின்தடை ஏற்பட்டு உள்ளது. மேலும் முதுமலை, புதூர், கயல் பாடந்தோரை, கம்மாத்தி, புளியம்பாரா போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்து முற்றிலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

JustIn: இ-பாஸ் கட்டாயம்….. ஆனாலும், ஒரு சலுகை தார்றோம்….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

நீலகிரிக்கு வர விரும்பும் சுற்றுலா  பயணிகள் சுலபமாக இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறை ஒன்றை நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் நீலகிரிக்கு சுற்றுலா செல்ல […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அலெர்ட்” வீட்டை விட்டு வெளியே வராதீங்க…. ஆபத்து இருந்தால் 1077-க்கு கால் பண்ணுங்க…. கலெக்டர் எச்சரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மேலும் மழை பாதிப்பு மீட்பு பணிக்காக 45 குழுக்கள், 250 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன எனவும், வீடுகளைச் சுற்றி ஆபத்தான பெரிய மரங்கள் இருந்தால், 1077 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் உடனடியாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொடர் கனமழை” 74 வீடுகள் சேதம்….. 1000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தவிப்பு….!!

நீலகிரியில் தொடர் கனமழையால் வீடுகளை இழந்து ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தவித்து வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக  மலை மாவட்டமான நீலகிரியில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையால் வெள்ள பாதிப்பு சூறைக்காற்று நிலச்சரிவு உள்ளிட்ட பல பிரச்சனைகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். மேற்கண்ட பிரச்சினைகளால், 74 வீடுகள் சேதமடைந்து  நீலகிரி பகுதியில் வசித்துவரும் மக்களில் ஆயரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கூடலூர், பந்தலூர், குந்தா  ஆகிய மூன்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நமக்கு தெரியாத காடா…? வாங்க போகலாம்….. 3 பேர் கைது….. ரூ85,000 அபராதம்…..!!

உரிய அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை காட்டிற்குள் அழைத்துச் சென்ற மூன்று ஜீப்  ஓட்டுனர்களிடம் ரூபாய் 85 ஆயிரம் அபராதம் வனத்துறையினரால் வசூலிக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட இடமாக கருதப்படும் முதுமலை சரணாலயத்தில் காட்டுப்பகுதியை கரைத்துக் குடித்த 3ஜிப் ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகளை அனுமதி இல்லாமால் உள்ளே அழைத்துச் சென்று சுற்றி காட்டியதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் மூன்று பேரையும் வனப்பகுதிக்குள் வைத்து கைது செய்தனர். பின் அவர்களிடமிருந்து ஜீப்பை பறிமுதல் செய்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“உறை பனி” கருகிய தேயிலை…. விளைச்சலும்…. விலையும் குறைவு….. விவசாயிகள் வேதனை…!!

நீலகிரியில் உறைபனியினால் தேயிலை பயிர்கள் கருகிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்தது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை நீலகிரி மாவட்டத்திலேயே குன்னூர் பகுதியில் தான் அதிக பொழிவை  தந்தது என்று கூறலாம். அதன்படி மழைப்பொழிவை நம்பி விவசாயிகள் பச்சைத் தேயிலையை பயிரிட்டனர். அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரை மழை பொழிந்த நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதம் முதலிலே உரை பனி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

1 1/2 ஆண்டுகளாக….. எந்த வழக்கும் நடக்கல…. பொதுமக்கள் குற்றசாட்டு….. வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்…!!

நீலகிரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கறிஞர்கள் சங்கம்  சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூரில்  நீதித்துறை நடுவர் மன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட மற்றும் கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. இதைத்தவிர பந்தலூர் பகுதியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது. இந்த  நீதிமன்றத்தில் கடந்த 1 ½ ஆண்டுகளாக நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் கடந்த 1 ½ வருடத்தில் போடப்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. அவசர […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போக்குவரத்து நெரிசலால் ஆத்திரம்…… உதவி கலக்டெர் தர்ணா போராட்டம்…. நீலகிரியில் பரபரப்பு…!!

நீலகிரி உதவி கலக்டெர் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கோரி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து  நிலையத்தில் இருந்து உழவர் சந்தைக்கு செல்ல கூடிய  பாதை மிகவும் குறுகலானது. இந்த பாதையின் இருபுறங்களிலும் போக்குவரத்து நெரிசலை  ஏற்படுத்தும் வண்ணம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.  இந்நிலையில் குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், அப்பாதை  வழியாகத்தான் தினமும் தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்க்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாக்க முயன்ற காட்டு யானை….. கும்கியாக மாறிய ஜேசிபி….. விரட்டி அடித்த சாலை தொழிலாளர்கள்…!!

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை தாக்க வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மசினகுடி  பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று அவர்களை திடீரெனத் தாக்கும் வகையில் ஓடிவந்தது. இதனைப் பார்த்து அதிர்ந்து போன அவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் யானையை தடுத்தனர். இதனால் பயந்துபோன அந்த யானை திரும்பி சிறிது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“வட கிழக்கு பருவமழை தொடக்கம்” 100 மலை பகுதி மக்களுக்கு ட்ரைனிங்…… மீட்பு குழுவுக்கு குவியும் பாராட்டு…!!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் மழைப் பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், குந்தா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழைப் பெய்து வருகிறது.இதன் விளைவாகப் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளதுஎனவே, இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து மாவட்ட தீயணைப்புத்துறை சார்பாக பேரிடர் மீட்புக் குழுவினருக்கும், உள்ளூர் தீயணைப்புத்துறையினருக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.விளக்கம்இதில் நிலச்சரிவு, இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேரிக்காய் சாப்பிட கூட்டமாக வந்த காட்டெருமைகள்… பீதியில் வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள்..!!

நீலகிரி மாவட்டத்தில் பேரிக்காயை தின்பதற்காக காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக வந்து அப்பகுதியில் வாழும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தண்ட நாடு பகுதியில் பேரிக்காய் விளைச்சல் அதிகமாக ஏற்பட்டு கொத்துக் கொத்தாக மரத்தில் தொங்கி வருகிறது. இதனை சாப்பிடுவதற்காக அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டெருமை கூட்டம் அப்பகுதியில் முகாமிட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் தேயிலை பறிக்க செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த காட்டெருமைகள் மனிதர்களை தாக்கும் முன்பு அவற்றை […]

Categories

Tech |