நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை OBC பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கனவே […]
Tag: neet exam
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீட் தேர்வு தொடர்பான அரசாணையை 2010ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து பல்வேறு எதிர்ப்புகளை தாண்டியும் 2013ம் ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2010ல் அந்த அறிவிப்பாணையை எதிர்த்து பல்வேறு சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு […]
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது . நீட் தேர்விற்கான விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவு 11:50 மணியுடன் முடிவடைகிறது .நாளையுடன் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது .விண்ணப்பித்ததில் தவறுகள் ஏதேனும் செய்திருந்தால் அதனை ஜனவரி 15 முதல் 31 ஆம் தேதி வரை திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்படும் . மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .முறைகேடுகளை தவிர்ப்பதற்கான […]
நீட் பயிற்சி மையத்தில் பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மாநில அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், ’தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் நீட் பயிற்சி வகுப்பு, தமிழ்நாடு முழுவதும் […]
ஒடிசாவில், பானி புயலால், நீட் நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில், இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு மே 5-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு கேட்டுக் கொண்டது. பானி புயலால் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இதை ஏற்று நாளை ஒடிசாவில் நடைபெற உள்ள நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. […]
நாளை மறுநாள், நாடுமுழுவதும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளநிலையில் தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன. பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற துறைகளில் சேர்வதற்காக, இந்திய அளவில் நடத்த பெறும் நுழைவுத்தேர்வு முறை நீட் தேர்வு ஆகும். இது இந்தியா முழுவதும் மே 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வுமையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன அதன் விவரத்தை கீழே காணலாம்.