நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் ஒரே நாளில் நீர் மட்டம் ஆனது 8 அடி உயர்ந்து 20.40 அடியாக அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது . இதன்படி தற்போது அணையின் நீர்வரத்து 1153 கன அடியாக உள்ளது. மேலும் அதே நெல்லை மாவட்டத்தில் இருக்கக்கூடிய தென்காசி பகுதியில் சாரல் விழுந்து […]
Tag: Nellai
பழைய குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது . நெல்லை மாவட்டம் ,வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் , எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நேற்றிலிருந்து போராடி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமானதால் , தீப்பிடித்து இருக்கக்கூடும் எனவும் ,மூலிகைகள் மற்றும் செடிகளும் எரிந்து வருவதால், இயற்கை ஆர்வலர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை ,சேரன்மாதேவியில் பெண்ணிடம் 6 பவுன் செயினை , பட்டப்பகலில் மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியிலுள்ள வைத்தி மேல வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்,பால் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி தங்கம் ,சேரன்மாதேவி பேருந்துநிலையம் அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் பணியிலுள்ள நிலையில், மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்து […]
திருநெல்வேலி,பாளையங்கோட்டை அருகே சமையல் செய்தபோது உடையில் தீ பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பெருமாள்புரம், என்.எச்.காலனியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி 80 வயதான முத்தம்மாள்.இவர் சற்று மனநிலை பாதிக்கபட்டவர்.அவர் வீட்டில் அடுப்பில் சமையல் செய்த போது திடீரென உடையில் தீப்பிடித்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் . இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
கடையநல்லூரில், வெண்டைக்காய் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் ,கடையநல்லூரில் வெண்டைக்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாகவுள்ளதால் லாபம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தற்போது வெண்டைக்காய் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனையாகிறது மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது . இந்த தேர்தல் ஐந்து முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , மக்கள் நீதி மைய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை களம் காண்கின்றது […]