Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்… தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு பணிகள்… சோதனையில் போலீசார்…!!

கூத்தாநல்லூர் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி தலைமையிலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் அவர்கள் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். இதில் அவர்கள் அவ்வழியாக செல்லும் லாரி, இருசக்கரவாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை முறையாக சோதனைக்கு செய்து வருகின்றனர்.

Categories

Tech |