நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு குற்றம் அல்ல எனும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக நியூசிலாந்தை பொறுத்தவரை கருக்கலைப்பு செய்வது குற்றமாகவே கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, இதற்கான மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் பெண்கள் இனி 20 வாரங்கள் வரை தங்களது கர்ப்பத்தை கலைத்துக் கொள்வதற்கு தடை ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tag: #NewZealand
நியூசிலாந்து நாட்டில் டிண்டர் (Tinder) செயலி மூலம் அறிமுகமான பெண்ணை கொலை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்தவர் கிரேஸ் மிலன் (GRACE MILLANE). 27 வயது பெண்ணான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கிரேஸ் மிலன், ஆன்லைன் டேட்டிங் செயலியான (app) டிண்டர் மூலம் ஒரு 28 வயதான ஜெஸ்ஸி கெம்ப்சன் என்ற (Jesse Kempson) நபரிடம் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி […]
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அவை தகுதியானவை இல்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வா கன் அவ்வபோது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் வீரர்கள் குறித்து கருத்துகள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இது மட்டுமின்றி சில ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் சமயத்திலும் இவர் இது போன்ற கருத்துகளை வெளியிடுவதுண்டு. அந்த […]
நியூசிலாந்து வெள்ளைத் தீவில் உள்ள எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான ஒயிட் தீவில் உள்ள எரிமலை டிசம்பர் 9ஆம் தேதி வெடித்தது. இதில், சுற்றுலாப் பயணிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடம் சென்ற அந்நாட்டு மீட்புப் படையினர், படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கடந்த இரண்டு வாரங்களாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று […]
நியூசிலாந்து மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் காரணமாக துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கான உரிமத்தை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஏற்கனவே உள்ள நியூசிலாந்து சட்டப்படி ஒருநபர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ரகத்தைச் […]
நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் சிலரின் உடல்கள் ஒரே இடமான கிறிஸ்ட் சர்ச் நினைவுப் பூங்காவில் புதைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியுடன் மசூதியில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடி தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடுக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் என்பவர் கைது செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் […]
நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவேற்றிய பிறகு எவ்வளவு தான் தடுத்தாலும், தீவிரவாத ஆதரவுக் குழு ஒன்று உலகம் முழுவதும் பரப்பியதாக பேஸ்புக் நிறுவனம் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. நியூசிலாந்தில் கிறிஸ்ட் நகரில் உள்ள மசூதிகளில் கடந்த வாரம் தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்களை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு நடத்திய முக்கிய நபரான பிரெண்டன் டாரன்ட் என்ற அந்த தீவிரவாதி, துப்பாக்கி சூடு நடத்திய வீடியோவை நேரடியாக ஒளி […]
மசூதிகளில் துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார். நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் என்ற நகரில் உள்ள 2 மசூதிகளில் மர்ம நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது திடீரென துப்பாக்கியுடன் புகுந்து சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் 49 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் குண்டு பாய்ந்த நிலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலையடுத்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், […]
நியூசிலாந்தில் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சம்பவம் நடைபெறுவதற்கு 09 நிமிடங்களுக்கு முன்பு நியூசிலாந்து பிரமருக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்று குவித்த ஆஸ்திரேலிய கொடூரனிடமிருந்து, சம்பவம் நடைபெறுவதற்கு, 09 நிமிடங்களுக்கு முன்னதாக ஒரு அறிக்கை கிடைத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று காலை, செய்தியாளர்களிடம் பேசிய நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா , துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர், தமக்கு மட்டும் அறிக்கையை அனுப்பியது மட்டுமல்லாமல், தன்னைப்போல 30 […]
நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததை தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்களின் சுற்றுப்பயணம் தடை செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வங்கதேச கிரிக்கெட் அணி, 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இந்நிலையில், வங்கதேச அணி வீரர்கள்இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தின் அருகே உள்ள மசூதிக்கு தொழுகைக்காக சென்றனர். அப்போது […]
நியூசிலாந்தில் உள்ள மசூதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் துப்பாக்கியுடன் மசூதியில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடி தனமாக சுட்டடான். துப்பாக்கி சத்தத்தை கேட்டு அங்கிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது சிலர் கீழே விழுந்தனர்.சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக்காயத்துடன் வெளியே […]