Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாமே ரெடியா இருக்கு… இதெல்லாம் கண்டிப்பா செய்யணும்…. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…!!

வாக்குச் சாவடிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 103 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மாற்று திறனாளிகள் வந்து ஓட்டு போடுவதற்கான சாய்வு தளம், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனை அடுத்து கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொல்லை தாங்க முடியல…. வழிமறித்த காட்டு யானைகள்… அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்…!!

காட்டு யானைகள் சாலையை வழிமறித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு உணவு தேடி வரும் இந்த காட்டு யானைகள் சில சமயம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஐயன் கொள்கையிலிருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையை காட்டு யானைகள் வழி மறித்ததால்  அங்கு போக்குவரத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருவேளை இங்கதான் இருக்குமோ…. களமிறங்கும் கும்கி யானை…. வனத்துறையினரின் தீவிர தேடுதல்….

இரண்டு பேரை மிதித்துக் கொன்ற காட்டு யானையை கும்கி யானை பொம்மனுடன் சேர்ந்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பெருங்கரை பகுதியில் முத்துசாமி கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வனப்பகுதி வழியாக சடையன் என்பவருடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த காட்டு யானை இருவரையும் மிதித்து கொன்றுவிட்டது. இதனை கண்டித்து பந்தலூர் பட்டவயல் சாலையில் பொதுமக்கள் யானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து தகவல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேத்தி வயசு தான் இருக்கும்…. முதியவரின் முகம் சுளிக்கும் செயல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

60 வயது முதியவர் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இந்நிலையில் முதியவரான காளிமுத்து அப்பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொல்லை தாங்க முடியல…. எல்லாமே நாசமா போச்சு…. சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்…!!

400க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானைகள் அட்டகாசம் செய்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பக கரையோரத்தில் இருக்கும் ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை நாசப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள குடியிருப்பு பகுதியில் இருக்கும் ஒரு பெண் தொழிலாளியின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டை செதபடுத்திய யானை…. அலறி அடித்து ஓடிய பெண்…. உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்….!!

காட்டு யானை ஊருக்குள் நுழைந்து தோட்ட தொழிலாளியின் வீட்டை சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகுனில்வயல் பகுதிக்குள் நுழைந்து  அங்கு பயிரிடப்பட்டுள்ள பாக்கு வாழை போன்ற மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. அதன் பின் காட்டுயானை அப்பகுதியில் உள்ள மணியம்மா என்ற பெண் தோட்டத் தொழிலாளியின் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாயை கவ்வி சென்ற சிறுத்தை புலி…. பீதியில் நடுங்கும் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சிறுத்தைப்புலி நாயை கவ்விச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சிறுத்தைப்புலி ஒன்று குன்னூரில் உள்ள ரயில்வே காலனி பகுதியில் புகுந்து விட்டது. இந்த சிறுத்தை அந்த காலனியில் வசிக்கும் நாராயணன் என்பவரது வீட்டு வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை கவ்வி இழுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் காலையில் நாராயணன் நாயை தேடிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கிளட்சை அதிகமா பயன்படுத்துறாங்க” இயங்கும் போதே பற்றி எரிந்த கார்…. அபாயமான மலைப்பாதையில் பரபரப்பு…!!

இயங்கிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது கார் கல்லடி மலைப்பாதை வழியாக ஊட்டியை நோக்கி 12 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கார் என்ஜினில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து உள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காரை நிறுத்திவிட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள என்ன அவசரம்…. பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

வாலிபர் பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருக்கும் தனியார் மகளிர் பள்ளியில் ஒரு மாணவி படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரை காதலித்த குன்னூர் சட்டன் பகுதியில் வசிக்கும் கவுதம் என்ற இந்த மாணவிக்கு வாலிபர் தாலி கட்டியுள்ளார். அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இச்சம்பவம் குறித்து அந்த மாணவியின் பெற்றோர் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதுதான் தரமான தண்டனை…. கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள செம்மனாரை கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அசோக்கும், அவரது நண்பர்களான ரஜினி, ராஜேஷ் போன்றோர் அந்த பெண்ணை வனப்பகுதிக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் கோத்தகிரி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா….? இறந்து கிடந்த சிறுத்தை குட்டிகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

இரண்டு சிறுத்தை குட்டிகள் தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மங்கோ ரேஞ்ச் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் இரண்டு வயது பெண் சிறுத்தை குட்டி உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் தேவாலா வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தேயிலை செடிகளுக்கு இடையில் மேலும் இரண்டு சிறுத்தை குட்டிகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உயர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு…. பாறையின் மீது மோதிய வாகனம்…. வாலிபருக்கு நடந்த துயரம்…!!

சரக்கு வாகனம் பாறை மீது மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி கிராமத்தில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செட்டி கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரக்கு வாகனத்தில் ஹரிஹரன் கட்டபெட்டு பகுதியிலிருந்து கோத்தகிரி நோக்கி சென்றுள்ளார். இதனை அடுத்து வேஸ்ட் புரூக் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் அங்கிருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு எதுவும் கிடைக்கல…. இதை கண்டிப்பா புறக்கணிப்போம்… மலைவாழ் மக்களின் முடிவு….!!

மலைவாழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஈசல் தட்டு, கோடந்தூர், ஆட்டு மலை, குருமலை போன்ற மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு சுகாதாரம், மின்சாரம், கல்வி, சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்நிலையில் பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி பண்ணுனா அவ்ளோதான்…. மூங்கில் அரிசி சேகரிப்பு…. பணியாளர்களை எச்சரித்த அதிகாரிகள்…!!

ஊரக வேலைவாய்ப்பு பணியில் ஈடுபடாமல் மூங்கில் அரிசிகளை சேகரித்த பணியாளர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வேலை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் தலைமையிலான அலுவலர்கள் முதுமலை பகுதியில் ஆய்வு நடத்தி ஊரக வேலை திட்ட பணிகளை பார்வையிட்டனர். அப்போது குறைந்த அளவு பணியாளர்கள் மட்டுமே அங்கு வேலை  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல…. அச்சத்தில் ஆதிவாசி மக்கள்… சுற்றி சுற்றி வரும் காட்டு யானை…!!

நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் ஆதிவாசி மக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பக பகுதியில் முதுமலை ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு உள்ள புலியாளம், கோழி மலை, நாகம்பள்ளி போன்ற பல்வேறு குக்கிராமங்களில் ஆதிவாசி மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் அங்குள்ள சில கிராமங்களில் காட்டு யானைகள் நள்ளிரவு நேரத்தில் புகுந்து அட்டகாசம் செய்வதால் ஆதிவாசி மக்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதான் காட்டு தீ மலரா…? பூத்து குலுங்கும் பூக்கள்… கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…!!

முதுமலை வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் காட்டு தீ மலர்களை பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தற்போது கோடை காலத்தில் மரங்களில் இலைகள் உதிர்ந்து வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்நிலையில் முதுமலை வனத்தில் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படும் காட்டு தீ மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்கள் காட்டுத்தீ மலர்கள் என்றும், கிளிமூக்கு மலர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வகை மலர்களை சற்று தூரத்தில் நின்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலாவிற்கு போன இடத்தில்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காரின் கண்ணாடியை உடைத்து செல்போன் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் சீனிவாச ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் இவர் லோயர் பஜாரில் சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்றவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் இரவு நேரத்திலும் நடத்தலாம்…. பொருத்தப்படும் உயர் கோபுர மின்விளக்கு…. எதிர்பார்ப்பில் விளையாட்டு வீரர்கள்….!!

எச்.ஏ.டி.பி மைதானத்தில் தற்போது நான்கு உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தம் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் எச்.ஏ.டி.பி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு தனித்தனியாக பயிற்சி தளம் அமைந்துள்ளது. இந்நிலையில் விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று மைதானத்தை மேம்படுத்துவதன் ஒருபகுதியாக உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மைதானத்தை சுற்றியுள்ள நான்கு இடங்களில் உயர் மின் விளக்குகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே அதுக்கு அடிபட்டுருச்சு…. போராட்டி மீட்கப்பட்ட காட்டெருமை…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

கால்வாய்க்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் போராடி மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மன்சனக் கொரை மின் மயானம் அருகே விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த விவசாய தோட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள கால்வாயில் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமை ஒன்று கால்வாய்க்குள் தவறி விழுந்து விட்டது. இந்த கால்வாயில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்ததால் காட்டெருமையின் கால் மற்றும் கொம்பு பகுதி கால்வாய்க்குள் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றிய காட்டு தீ…. பல மணி நேர போராட்டம்…. வனத்துறையினரின் அறிவுரை….!!

அப்பர் பவானி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதிகளில் இருக்கும் செடிகள் மற்றும் மரங்கள் கருகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீ தடுப்பு குழு அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்பர் பவானி வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் அங்குள்ள செடி, கொடிகள் மற்றும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அறிக்கை வந்தபிறகு தான் தெரியவரும்…. இறந்து கிடந்த குட்டி யானை…. வனத்துறையினரின் தகவல்….!!

முதுமலை வனப்பகுதியில் குட்டி யானை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லா வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு குட்டை பக்கத்தில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்ததையடுத்து, தெப்பக்காடு வனச்சரகர் மனோஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் ஆறுதலா இருக்கு…. கடும் வீழ்ச்சிக்கு பிறகு விலை உயர்வு…. எதிர்பார்ப்பில் விவசாயிகள்…!!

கடும் வீழ்ச்சிக்குப் பிறகு தேயிலையின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பச்சைத் தேயிலையை பயிரிட்டு உள்ளனர். இதற்காக நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளும், கூட்டுறவு தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. இந்நிலையில் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சைத் தேயிலையை விவசாயிகள் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்குகின்றனர். இதையடுத்து தொழிற்சாலைகளில் பச்சைத் தேயிலையை கொண்டு தயாரிக்கப்படும் தேயிலைத்தூள் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களில் ஆன்லைன் மூலம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கிரீன்ஃபீல்ட் பகுதியில் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுரேந்திரன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப தொந்தரவா இருக்கு…. அவங்க மேல நடவடிக்கை எடுங்க…. சுற்றி திரியும் கால்நடைகளால் அபாயம்…!!

சாலைகள் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-கேரளாவை இணைக்கும் சாலையில் தேவாலா, நாடுகாணி, பந்தலூர், மரப்பாலம், சேரம்பாடி போன்ற முக்கிய பஜார்கள் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாகத்தான் பந்தலூர் தாலுகா மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள கூடலுருக்கு சென்று வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை கேரளாவிற்கு கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் இந்த சாலையில் இயக்கப்படுவதால் எப்போதும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எப்போது திறக்கப்படும்….? எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள்…. அனுமதிக்காக காத்திருப்பு….!!

உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்த பிறகு தாவரவியல் பூங்கா திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி வனச்சரகத்தில் தாவரவியல் மைய பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் அரிய வகை தாவரங்கள், பராமரிப்பு கூடம், திசு வளர்ப்பு மையம், பெரணி இல்லங்கள், பசுமை பள்ளத்தாக்குகள், வனவிலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல் பாகங்கள் கொண்ட கண்காட்சியகம் போன்றவை அமைந்துள்ளது. இந்த தாவரவியல் பூங்கா கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி சுற்றுலா மையமாக மட்டுமே செயல்பட்டு வந்தது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆங்காங்கே நின்ற கூட்டம்…. மின்கம்பத்தில் மோதி நின்ற சுற்றுலா வேன்…. ஸ்தம்பித்த சாலை போக்குவரத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து மைசூருக்கு சுற்றுலா வேன் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த வேன் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனால் சாலையில் வாகனம் தாறுமாறாக ஓடியதால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் சத்தம் போட்டுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா வேன் சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றுவிட்டதால் கூடலூர்-ஊட்டி சாலையில் போக்குவரத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டி ஈனும் நிலையில் உள்ள யானை…. வீடுகளை முற்றுகையிட்டதால் அச்சம்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டtதால்  பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பத்து லைன்ஸ், கார்வயல் மற்றும் கொள்ளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பாலவாடி லைன் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் தனது குட்டிகளுடன் பாலவாடி லைன்ஸ் பகுதிக்குள் நுழைந்த காட்டு  யானைகள் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை இரவு நேரத்தில் முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இது நல்ல ஐடியாவா இருக்கே…. கைது செய்யப்பட்ட 116 ரவுடிகள்…. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை…!!

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 116 ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக 180 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த மாவட்டத்தில் பதட்டமான இடங்களாக கண்டறியப்பட்ட 51 இடங்களில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும் 543 துப்பாக்கி உரிமையாளர்கள் துப்பாக்கியை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் 489 பேர் துப்பாக்கியை ஒப்படைத்த நிலையில் 54 பேருக்கு விலக்கு அளித்து உள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தகாத உறவினால் வந்த வினை…. எரித்து கொல்லப்பட்ட பெண்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பைக்காரா பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்த ஆனந்தகுமாருக்கும், அப்பகுதியில் கணவரை இழந்து வசித்து வரும் ஆயிஷா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனை அடுத்து ஆயிஷா வேறு ஒரு நபருடன் பழகுவதை அறிந்த ஆனந்தகுமார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இந்த வாய்ப்பை விட மாட்டோம்” சிரட்டையில் கைவினை பொருட்கள்…. அசத்திய கிராமப்புற பெண்கள்…!!

சிரட்டை மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கைவினைப் பொருட்களை தயாரித்து கிராமப்புற பெண்கள் அசத்தியுள்ளனர். தற்போதைய காலகட்டங்களில் பிளாஸ்டிக் அல்லாமல் பிற பொருட்களை கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு உறுதுணையாக மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இவ்வாறு அன்றாடம் நாம் பயன்படுத்தி பின் தேவையில்லாமல் தூக்கி போட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத கைவினைப் பொருட்கள் மிகுந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கண்டிப்பா இதை கொடுக்காதீங்க…. சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்…. எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்…!!

சட்டத்தை மீறி வனவிலங்குகளுக்கு உணவு அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டெருமைகள், மான்கள், காட்டு யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பசுந்தீவனங்களை உண்ணும் வனவிலங்குகள் உணவு கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக காட்டெருமைகள் மற்றும் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இது எங்க ஏரியா” அசால்ட்டாக நின்ற யானைகள்…. அச்சத்தில் நடுங்கிய வாகன ஓட்டிகள்…!!

சாலையில் சென்ற பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான சிறுத்தை, கரடி, காட்டு யானை, புலி போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீரை தேடி நுழைந்து அட்டகாசம் செய்துள்ளன. இந்நிலையில் மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படிதான் பிடிக்கணும்…. அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…. வனத்துறையினரின் புதிய திட்டம்…!!

வனத்துறையினர் ஊருக்குள் முகாமிட்டுள்ள யானையை மர குண்டு வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இந்த யானை குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாவனல்லா பகுதியில் ஊருக்குள் சுற்றி வந்த காட்டு யானை மீது தீப்பந்தம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாயை கவ்வி சென்ற கருஞ்சிறுத்தை…. அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்…. பதற வைக்கும் CCTV காட்சி….!!

கருஞ்சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நாயை கவ்வி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள எமக்குண்டு குடியிருப்பில் கரடி நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கட்டப்பெட்டு வனத்துறையினரிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு நாய் திடீரென மாயமானதால் அந்த நாயின் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடைசி நிமிட பயணங்கள்…. சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துயரம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் நவீன் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தனது தாய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் சுற்றுலாவுக்காக சென்றுள்ளார். இவர்கள் அனைத்து சுற்றுலா தளங்களையும் சுற்றி பார்த்துவிட்டு, ஊட்டியிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக தலைகுந்தா பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென அவரது காரில் பழுது ஏற்பட்டதால், அப்பகுதியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடை சீசனை முன்னிட்டு….. மும்முரமாக நடைபெறும் பணி…. ரம்யமான காட்சியில் ரெடியாகும் பூங்கா…!!

கோடை சீசனை முன்னிட்டு நேரு பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நேரு பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்க்க வருவர். இந்நிலையில் கோடை சீசன் தொடங்குவதை முன்னிட்டு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே நிலத்தை பதப்படுத்தி பூங்காவில் புதிய மலர் நாற்றுகளை நடுவதற்காக பேரூராட்சிக்கு சொந்தமான பூங்காவிலிருந்து இயற்கை உரம் கொண்டு வரப்பட்டு போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 40 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதை மட்டும் பயிரிடாதிங்க…. இல்லேன்னா காட்டு யானை வந்துரும்…. இடம்பெயரும் வனவிலங்குகளால் பீதியில் பொதுமக்கள்…!!

வனப் பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக வனவிலங்குகள் இடம் பெயர ஆரம்பித்ததால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் கூறியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை புலி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோடை காலம் காரணமாக வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு அனைத்து மரங்களிலும் இலைகள் உதிர ஆரம்பித்து விட்டது. இதனால் ஒரு நாளுக்கு 250 கிலோ பசுந்தீவனங்கள் சாப்பிடும் பழக்கம் கொண்ட காட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குப்பை போட சென்ற பெண்…. முட்டி தூக்கிய காட்டெருமை…. நீலகிரியில் பதற்றம்…!!

ஊருக்குள் புகுந்த காட்டு எருமை பெண் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கன்னிகாதேவி காலனியில் சந்திர மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தானலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்தானலட்சுமி தனது வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டுவதற்காக வெளியே உள்ள குப்பை தொட்டிக்கு அருகில் சென்றபோது, அங்குள்ள புதரின் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்த காட்டெருமை திடீரென வெளியே வந்து சந்தானலட்சுமியை விரட்டி உள்ளது. இதனால் அவர் அங்கிருந்து தப்பி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு…. எங்களுக்கு கட்டுப்படி ஆகல…. சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்…!!

கேரட் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் நஷ்டமடைந்த விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், நூல்கோல், கேரட், பீன்ஸ் மற்றும்  வெள்ளைப்பூண்டு போன்றவற்றை விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பயிரிட்டு அதனை சாகுபடி செய்கின்றனர். இவற்றில் கடந்த சில மாதங்களாக கேரட் கிலோவிற்கு 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தம்பதிகளுக்கு கொரோனா… மூடப்பட்ட பள்ளிகள்… கட்டாயப்படுத்தும் நிர்வாகம்…!!

ஆசிரியராக பணிபுரியும் தம்பதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 2  பள்ளிகள் மூடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மேரிஸ் ஹில் பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவிட்டது. மேலும் மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து தம்பதிகள் இருவரையும் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர். இந்நிலையில் தொற்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்போதான் குறைஞ்சிருக்கு… சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் மட்டுமே நீலகிரிக்குள் நுழைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது 15-க்கும் கீழ் குறைந்து விட்டது. இந்நிலையில் கேரளாவில் வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் அந்த மாநில எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதை கட்டாயமாக்கியுள்ளனர். இது பற்றி நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வழிமறித்து விரட்டிய காட்டு யானை… அலறியடித்து ஓடிய இளம்பெண்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஸ்கூட்டரில் வந்த பெண்ணை வழிமறித்த யானை ஸ்கூட்டரை தாக்கிய வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி ஊராட்சி அருகில் உள்ள வனப்பகுதியில் புலிகள், காட்டு யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் இருக்கும் சீகூர் பாலம் பகுதியில் காட்டு யானை ஓன்று நின்றுள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பயத்தில் அங்கேயே நின்று விட்டனர். இதனையடுத்து அந்த காட்டுயானை மெதுவாக சாலையை கடக்க […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மிஞ்ச முடியாத அன்னையின் பாசம்… இறந்த குட்டியுடன் சுற்றும் தாய் குரங்கு… வைரலாகும் புகைப்படம்…!!

குட்டி இறந்தது தெரியாமல் தாய் குரங்கு அதனை சுமந்து கொண்டே திரியும் காட்சி பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் அந்த வனப்பகுதியில் குரங்குகளின் எண்ணிக்கையானது அதிக அளவில் காணப்படுகிறது. இந்த குரங்குகள் சுற்றுலா பயணிகள் உணவளிப்பதால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதை சாலையில் அமர்ந்து கொள்கின்றன. இவ்வாறு சாலைகளில் அமரும் குரங்குகள் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன. இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி கடத்தல்… 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… கைதான கேரள வாலிபர்… !!

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். கேரள மாநிலத்திலுள்ள சோலையூர் கிராமத்தில் ரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற கூலி வேலை பார்க்கும் மகன் உள்ளார். இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்லும் போது, அப்பகுதியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு… வீடுகளை சுற்றும் காட்டு யானை… நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, ஓவேலி, தோட்ட மூலா, முண்டகுன்னு போன்ற  பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டமானது அதிகமாக காணப்படுகிறது. இந்த காட்டு யானைகள் கடந்த சில மாதங்களாக கூட்டமாக முகாமிட்டு வருகின்றது. இப்பகுதியில் அட்டகாசம் செய்து மூன்று பேரை கொன்ற ஒற்றை கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலையில் உள்ள மர கூண்டில் அடைத்ததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெற்ற மகள் என்று கூட பார்க்காமல்…. ஜவுளி வியாபாரி செய்த கொடுமை… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் 44 வயதான ஜவுளி வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 14 வயதில் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மனைவி வெளியே சென்ற சமயத்தில் பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் அவர் அந்த சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… மக்களின் வாழ்கை பாதிக்குது… கடும் பனியால் கருகிய பயிர்கள்…!!

கடும் குளிர் மற்றும் பனியின் தாக்கத்தால் நீலகிரியில் பயிரிடப்பட்ட விவசாய செடிகள் கருகியதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒட்டுபட்டரை குன்னூர் மற்றும் அருவங்காடு போன்ற இடங்களில் உறை பனியின் தாக்கமானது அதிகமாக உள்ளது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி இருக்கிறது. அப்பகுதியில் மாலை 3 மணியில் இருந்தே கடும் பனி நிலவுவதால் வியாபாரிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முதல்முறையாக சட்டப்படிப்பு… சாதனை படைத்த தோடர் இளம்பெண்… குவியும் பாராட்டுகள்…!!

சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்து தோடர் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் சாதனை படைத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தோடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்துள்ளார். அங்குள்ள தவிட்டுப் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து விட்டு, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைய முயன்ற கரடிகள்… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்… கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை…!!

அட்டகாசம் செய்து வரும் கரடிகளை கூண்டு வைத்துப் பிடிக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும் விலங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் கதவுகளை உடைத்து மிகுந்த அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து மூன்று குட்டிகளுடன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா… பல்வேறு வீரியமிக்க ரகங்கள்… கலெக்டரின் புகழாரம்…!!

ஊட்டி அரசு ரோஜா பூங்கா தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே அதிக அளவு புதிய ரகங்களை கொண்ட ரோஜாவை பராமரித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறது என கலெக்டர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை துவங்கி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் உள்ள 31,500 வீரிய ரக ரோஜா செடிகளில் கவாத்து பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊட்டி மலர் […]

Categories

Tech |