Categories
தேசிய செய்திகள்

BREAKING: நிர்பயா வழக்கு – குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி …!!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் , கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது.  முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குற்றவாளிகளும் தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

எப்போதுதான் நீதி கிடைக்கும்? நிர்பயாவின் தாயார் நீதிமன்றத்தில் கண்ணீர்

எனது மகள் மரணத்துக்கு  எப்போதுதான் நீதி கிடைக்கும் என்று  நிர்பயாவின் தாய் ஆஷா தேவி நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.  டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா பாலியல் வழக்கு : “4 பேரை தனித்தனியாக தூக்கிலிடுங்க”…. மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு..!!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது  நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகளாக சிறையில் வாடும் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் நாள் குறித்த நிலையில், தண்டனைக் கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குடியரசுத் தலைவர் மற்றும் நீதிமன்றங்களில் கருணை மனு, மறுஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியே தூக்கிலிட மறுப்பு!

நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகள் நால்வரையும் தனித்தனியே தூக்கிலிட அனுமதியளிக்க வேண்டும் என்ற திகார் சிறையின் கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகளாக சிறையில் வாடும் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் நாள் குறித்த நிலையில், தண்டனைக் கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குடியரசுத் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு… கருணை மனு…. நீதிமன்றம் தள்ளுபடி…

நிர்பயா வழக்கில் கருணை மனுக்கு எதிராக முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மனுவை விசாரித்த அதற்கு எந்த முகாந்திரமும்  இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு  ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முகேஷ் சிங் , அக்ஷய் குமார்,  வினை, பவன் குப்தா ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. வரும் ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை என […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் குப்தா புதிய மனு!

நிர்பயா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு அளித்தார். நிர்பயா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு அளித்தார். அந்த மனுவை அளித்தவர் குற்றவாளிகள் நால்வரில் ஒருவரான பவன் குமார் குப்தா […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளின் தண்டனை தேதி மாற்றம்?

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நால்வரின் தூக்கு தண்டனை தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவலர்களால் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன் 18 வயதை பூர்த்தியடையாதவன் என்பதால் அவன் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் வெளிவந்துவிட்டான். மற்றொருவர் சிறைக்குள்ளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

BREAKING :நிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுக்கள்  தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் அதிரடி

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து 2 குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை  தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா மக்கள் கொண்டாடும் ரியல் சிங்கம்……!!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் நான்கு பேரும் காவலர்களால் என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் எஸ்.பி. சஜ்ஜானார் மக்கள் கொண்டாடும் சிங்கமாக மாறிவிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார். தடயங்கள் எதுவும் காவலர்களுக்கு சிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் குற்றவாளிகள் அவரது உடலின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

“தெலுங்கானா என்கவுண்டர் மகிழ்ச்சி அளிக்கிறது” நிர்பயா தயார் கருத்து…..!!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நான்கு குற்றவாளிகளும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முகமது பாஷா, சிவா, நவீன், கேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். […]

Categories

Tech |