இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. பிரதமர் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் மூலம் ரூ .50,000 கோடி மதிப்புள்ள பொதுப்பணித் திட்டம் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 ஆம் தேதி பீகாரில் இருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்தோரின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளார். இந்த பாரிய கிராமப்புற பொதுப்பணித் […]
Tag: NirmalaSeetharaman
பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பிரிவுகளின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நிர்மலா சீதாராமன், பொருளாதாரத்தை வலுப்படுத்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்ககளை விரிவாக பட்டியலிட்டுள்ளோம். நிபுணர்களின் ஆலோசனைபடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என கூறியுள்ளார். பிரதமரின் கூற்று படி மக்கள் உயிரை காப்பதே பிரதானம், பொருளாதாரம் […]
2020-2021ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகு கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை, இந்த வார தொடக்க நாளான இன்று நிர்மலா சீதாராமனின் வார்த்தையை பொய்யாக்கும் வகையில் பங்குச்சந்தைகள் நிலவரம் உணர்த்துகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மத்திய நிதிநிலை அறிக்கை தாக்குதலுக்குப் பிறகு பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, சென்செக்ஸ் வர்த்தக முடிவின்போது 900 புள்ளிகளுக்கு மேல் கடுமையாகச் சரிந்தது. இதனால் சென்செக்ஸில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் கலக்கமான நிலையில் இருந்தனர். இதனை உணர்ந்த […]
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமானவரி குறைக்கப்பட்டதால் மாநில அரசுக்கு 1.53 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்திய பொருளாதாரம் சரிந்துவரும் நிலையில், கடந்த சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், வருமானவரியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் எதிரொலியாக மாநிலங்களுக்கு 1.53 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2020 பட்ஜெட்டானது மாநில அரசுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பொருளாதார […]
மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தை கார்ப்பரேட் துறையில் உணரவேண்டும் என்றால் நாம் அனைவரும் திங்கள்கிழமை போன்ற சாதாரண வர்த்தக நாள் வரை காத்திருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020-21ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கிடையே மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கார்ப்பரேட் துறையில் எவ்வித ஏற்றங்களும் இன்று ஏற்படவில்லை. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தை […]
அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம் ஆகிய துறைகளை பிரதமர் நரேந்திர மோடி தன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்தது. நேற்று மாலை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு தனி தனி இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களில் […]
நேற்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது. இதில் 57 அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு ஒவ்வொரு இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. […]