காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் என்ன நடக்கப்போகிறது என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பும் ஆதரவும் […]
Tag: #NirmalaSitharaman
மிஸ்டர் பிரதமர் பொருளாதார ரெயில் தடம் புரண்டுள்ளது, என்னை நம்புங்கள் பொருளாதரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்கிறது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவையில் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அசுரத்தனமான வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. மேலும் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை […]
2019-20க்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சித்தராமனை பாராட்டி துணை முதல்வர் o.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 2019 – 20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்ததையடுத்து,தமிழக துணை முதலமைச்சர் O. பன்னீர் செல்வம் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதராமனுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கவும், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து கொண்டு செல்லவும், பட்ஜெட் அறிக்கை அடித்தளமாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பெண்களுக்கான முன்னேற்றம் மற்றும் சிறு […]
2019-20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் பொருள்களின் விலையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 2019-20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் இறக்குமதி செய்யப்படுகிற புத்தகம் உள்ளிட்ட காகித பொருள்களுக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் கேமரா, சிசிடிவி கேமரா, ரப்பர், பைபர், டைல்ஸ், பர்னிச்சர் உள்ளிட்ட பொருள்களுக்கும் வரி உயர்த்தப்பட்டு விளையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2019-20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையின் படி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் பொருட் களின் விலை குறைய உள்ளதாகவும், மருத்துவ மற்றும் பாதுகாப்பு சாதனங்களின் விலை குறைந்துள்ளதாகவும் பட்ஜெட் […]
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட தேசிய விவசாய சந்தை அமைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2019-20க்கான பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன் , மாநிலங்கள் முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருளை நேரடியாக விற்று பயன் பெற தேசிய விவசாய சந்தை அமைக்கப்படும் என்றும், நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகள் 1ரூபாய் கூட முதலீடு செய்யமால் விவசாயம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் . தொடர்ந்து பேசிய அவர் , […]
2019-20க்கான மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இதில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பின் பேசிய பிரதமர் மோடி, 2019-20க்கான மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஏழ்மையை ஒழிக்கும் வகையில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய இந்தியாவை […]
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அதிகபட்சமாக தலா ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ்கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து இந்த முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் கூறுகையில் , பெண்கள் […]
புதிய கல்வி கொள்கையை உலகின் சிறந்ததாக மாற்ற திட்டம் உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில் , புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது. உலகின் சிறந்த கல்வி […]
குறைந்த விலை வீடுகளுக்கான வட்டியில் 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கபப்டும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,குறைந்த விலை வீடுகள் ,கடனில் மின்சார வாகனம் வாங்கினால் வட்டியில் கூடுதலாக 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும்.இதன்படி 15 ஆண்டுகள் வீட்டுக்கடனுக்கு ரூபாய் 7 லட்சம் வரை மிச்சமாகும். பான் அட்டை இல்லாவிட்டால் ஆதார் எண்ணை அளித்து வருமான வரி […]
பிரதான் மந்திரி கரம் யோகி மான் தன் யோஜனா என்ற பெயரில் சில்லரை வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழக்கப்படுமென்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து , பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார். இதில் 3 கோடி சில்லரை […]
1,2,5,10,20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்.5 லட்சம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்படும் என்றார் .குடிநீர் ,சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் 100 கோடி ஒதுக்கப்படும் . வரி வருவாய் 6.3 லட்சம் கோடியில் இருந்து 11.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.நாட்டின் வளர்ச்சியில் வரி செலுத்துவோரின் பங்கு முக்கியமானது, […]
நாடு முழுவதும் சம அளவில் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து , பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார். அதில் , அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து விமானத் துறை, […]
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பாஸ்போர்ட்டுடன் ஆதார் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,கழிவுநீர் சுத்திகரிப்புகாக ரோபோட்டுகள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.நாட்டில் உள்ள 74 சுற்றுலாத்தலங்கள் உலக தரத்திற்கு உயர்த்தப்படும்.சுய உதவிக்குழு பெண்கள் முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கடன் பெற அனுமதி வழங்கப்படும்.வங்கிகளில் வாராக்கடன் கடந்த ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. […]
இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய குடிநீர் பிரச்சனையை தீர்க்க “ஹர் கர் ஜல்” திட்டம் மேற்கொள்ளப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி முழுமையாக செயல்படுத்தப்படும் என்றார் .குடிநீர் பிரச்னையை தீர்ப்பதே மத்திய அரசின் பிராதன நோக்கம், 2020க்குள் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கும் குழாய் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்க “ஹர் கர் ஜல்” திட்டம் மூலம் நடவடிக்கை […]
புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி செய்து வருகிறது என்று மக்களவையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அபோது பேசியவர் , உணவு பாதுகாப்புக்காக கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு பணம் செலவிடப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார நாடு என்ற நிலையை எட்டும். சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு என்றார். […]
நிதியமைச்சர்கள் கூட்டத்தில், விவசாய தொழிலாளர்களையும் ரூ.6000 உதவித்தொகை திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியுள்ளோம் என ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார். பாரதிய ஜனதா இரண்டாவது முறையாக பொறுப்பெற்ற பின் தனது நிதி நிலையறிக்கையை வரும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறது. நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தி நிதி நிலையறிக்கையை தயார் செய்து வருகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி […]
நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியுள்ளார். பாரதிய ஜனதா இரண்டாவது முறையாக பொறுப்பெற்ற பின் தனது நிதி நிலையறிக்கையை வரும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசித்து, நிதி நிலையறிக்கையை தயார் செய்து வருகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னதாக […]
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. பாரதிய ஜனதா இரண்டாவது முறையாக பொறுப்பெற்ற பின் தனது நிதி நிலையறிக்கையை வரும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசித்து, நிதி நிலையறிக்கையை தயார் செய்து வருகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி […]
டெல்லியில் முதல்வர் பழனிசாமி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் […]
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு வருபவர். இவர் அவ்வப்போது பாஜக பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படத்தக்கூடியவர். சமீபத்தில் கூட பிரதமர் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தி காங்கிரஸ் […]
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தீவிரவாதிகளுக்கும் , பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவான தேர்தல் அறிக்கை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். காங்கிஸ் கட்சி நேற்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த தேர்தல் அறிக்கையில், ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும், தேசத்துரோக சட்டம் நீக்கம் , ஜம்மு-காஷ்மீர் மாநிலதலைவர்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை மீது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். […]