வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றதில் பணம் பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கில் வைத்துள்ளதாக புகாரில் சிக்கிய வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து திமுக , அதிமுக மற்றும் […]
Tag: Nomination
வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி இன்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றார். உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக நேற்று வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.அங்கு இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன்மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் மோடி பேரணியை தொடங்கினார். சுமார் 7 கிலோ மீட்டர் நடைபெற்ற இந்த பேரணியில் உத்தரபிரதேச […]
வாரணாசியில் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் மோடி நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலையில் இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெறுகின்றது. மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். அதற்கான வேட்பு மனு தாக்கலை நாளை செய்கின்றார். இதனால் இன்று வாராணசியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பேரணி நடைபெறுகின்றது. இன்று மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த பேரணியில் பிரதமர் மோடி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை களமிறங்கி வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, 4-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.மேலும் அவர் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள். இதையடுத்து ராகுல்காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் […]
தனது வங்கிக் கணக்கில் 1,76,000 கோடி ரொக்கம் இருப்பதாக வேட்புமனுவில் பெரம்பூர் இடைத்தேர்தல் வேட்பாளர் ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜே. மோகன்ராஜ் என்ற வேட்பாளர் தான் ‘ஜெபமணி ஜனதா’ என்ற கட்சி சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். அதில், தன் மனைவியிடம் சுமார் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 13 சவரன் நகை , மயிலாப்பூர் சவுத் இந்தியன் வங்கியில் சுமார் 3 லட்ச […]
அமமுக வேட்பாளர்கள் அனைவரும் 2 -3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக வேண்டுமென்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் TTV. தினகரன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . அறிவிப்பு வெளியாகியதும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்க ஆரம்பித்து கூட்டணியை முடிவு செய்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக […]
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைகின்றது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்கள் […]
ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேஷமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய காலம் தாழ்த்தியதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக_விற்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு , மதிமுகவின் பொருளாளர் கணேஷமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய காலை 11.30 மணிக்கு சென்றார். அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அவருக்கு 12.30 வரை நேரம் […]
வேட்பாளர்களாக களமிறங்கும் திமுக மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து வேட்பாளர்களாக களமிறங்குபவர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிஜேபி_யை தவிர்த்து களமிறங்கும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். இந்நிலையில் கடந்த […]
நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகின்றது . நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர் . மேலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19_ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது . கடந்த 4 நாட்களாக நடைபெற்ற […]